கடுகில் உள்ள அளப்பறிய மருத்துவ குணங்கள்.!!

“கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்பது பழமொழி., நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் கடுகில் அதிகளவு சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த கடுகானது சுமார் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இருந்தே மக்களின் உணவில் பயன்பட்டு வந்துள்ளது. கடுகின் விதையில் உடலுக்கு பல நன்மைகளை வழங்கும் எண்ணெய் சத்துக்களானது உள்ளது.

கடுகில் இருக்கும் கலோரியானது அதிகளவு ஆற்றலை உடலுக்கு தரக்கூடியது., சுமார் 100 கிராம் அளவுள்ள கடுகில் 508 கலோரி ஆற்றலானது உள்ளது. இந்த கடுகில் எளிதில் வளர்ச்சிதை மாற்றத்தை அடைய வைக்க கூடிய நார்ச்சத்தானது உள்ளது., இதன் மூலமாக உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்புகள் கட்டுக்குள் வைக்கப்பட்டு., உடல் பருமனை குறைகிறது.

இதில் இருக்கும் வைட்டமின் பி-3 மூலமாக நமது இரத்தத்தில் இருக்கும் கேட்ட கொழுப்புகளின் அளவானது கட்டுக்குள் இருக்கும். இதுமட்டுமல்லாது போலெட்ஸ்., நியாசின்., தயமின்., பைரிடாக்சின்., ரிபோபிளேவின்., தென்னிக் அமிலத்தின் காரணமாக நொதிகளின் செயல்பாடு., நரம்பு மண்டல செயல்பாடு வளர்ச்சிதை மாற்றத்தை சரி செய்கிறது.

இதில் இருக்கும் கால்சியம்., இரும்பு., தாமிரம்., மாக்னீசு., துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற தாது உப்புகளின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க படுகிறது மற்றும் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி., செல்களின் வளர்ச்சிதை மாற்றத்தை நல்ல விதத்தில் கட்டுக்குள் வைக்கிறது. கடுகில் இருக்கும் கார சுவை மற்றும் வெப்ப தன்மையின் காரணமாக வாத நோய் குணமாகிறது.

இதுமட்டுமல்லாது ஜீரண உறுப்புகளை பலப்படுத்தி சிறுநீரை பெருக்குகிறது., உடலில் இருக்கும் நச்சு விஷத்தை முறிகிறது. பாக்டீரியாக்களை அழித்து நமது உடலை பாதுகாக்கிறது. கடுகு எண்ணெய்யின் மூலமாக தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணப்படுத்தப்படுகிறது., இதில் இருக்கும் மெக்னீசியத்தின் காரணமாக ஆஸ்துமா கோளாறுகளானது நீங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *