இயற்கை மருத்துவம்

தாய்ப்பால் சுரக்க இவற்றை செய்யுங்கள்!…

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அனைத்து விதமான சத்துக்களையும் பெற்று திடகாத்திரமாக வளர்வார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.. குறிப்பாக குழந்தை பிறந்ததும் வரும் தாய்ப்பால் சீம்பால் என்று அழைக்கப்படும்.. 30 வருடங்களுக்கு முன்பு 2 வருடங்கள் வரையும் கூட குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்தவர்களும் உண்டு. குழந்தைகளுக்கு அறுசுவையும் பழக்கினாலும் ஊட்டச்சத்து பானம் தாய்ப்பால் என்பதை உணர்ந்திருந்தார்கள்.

குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் தாய்ப்பால் இல்லை என்று சொல்லும் இன்றைய இளம் தாய்மார்கள் முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். தற்போது தாய்ப்பால் சுரக்க மருத்துவர்கள் உணவும், மாத்திரைகளும் பரிந்துரைத்தாலும் தாய்ப்பாலைச் சுரக்க செய்வதில் உணவை விடவும் உளவியல் ரீதியாக தாய்மார்கள் தங்களை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தாய்ப்பாலை சுரக்க செய்வதில் ஹார்மோனுக்கும் பங்குண்டு. இந்த ஹார்மோன் மனதோடு தொடர்புடையது என்பதாலேயே இங்கு மன அமைதி என்பதும், தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்னும் அதீத விருப்பம் கொண்ட எண்ணமும் முக்கியமானதாகிறது.

தாய்ப்பால் கொடுத்தால் அழகு பறிபோகும்.. என்று நிறுத்தினால் தான் அழகு குன்றும்.. தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். இன்னும் சிலருக்கு தாய்ப்பால் கொடுக்க விரும்புகிறோம் ஆனாலும் குழந்தைக்கு பால் போதவில்லை என்று கூறுகிறார்கள்.

தாய்ப்பால் கொடுக்க கொடுக்கத்தான் சுரக்கும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அன்றாடம் சரிவிகித சத்துக்களை உணவில் சேர்த்து வந்தாலே தாய்ப்பால் அதிகரிக்கும். சத்துக்களும் தேவையான அளவில் கிடைக்கும். கருத்தரித்த காலங்களில் சத்தான உணவுகளையும், பழங்களையும், காய்கறிகளையும் தேடித் தேடி சாப்பிடுபவர்கள் குழந்தை பிறந்ததும் குழந்தையின் ஆரோக்கியத்தைக் காக்க தவறிவிடுகிறார்கள்..

தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு பசும்பால், பவுடர் பால் என்று கொடுத்தாலும் தாய்ப்பாலின் சத்துக்களைப் பெறமுடியாத அக்குழந்தை நோய் எதிர்ப்பு சக்தியை குறைந்த அளவிலேயே கொண்டிருக்கும்.. தாய்ப்பாலின் மூலம் குழந்தைக்கு வலூவூட்டவே பிரசவத்துக்கு பிறகு பத்திய உணவு என்று கொடுத்தார்கள் முன்னோர்கள்.

கருத்தறித்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு குளிக்கும் போது மார்பக காம்புகளைச் சுத்தம் செய்வதோடு காம்பில் வெடிப்பு அல்லது புண் இருந்தால் மருத்துவரிடம் காண்பித்து உரிய சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்.

பிரசவக்காலத்துக்கு பிறகு இருவேளையும் மார்பகங்களைச் சுத்தம் செய்ய வேண்டும். பால் கொடுக்கும் ஒவ்வொரு முறையும் மார்பகங்களைச் சுத்தம் செய்ய வேண்டும். பூண்டு, பால், கீரைகள், முளைகட்டிய தானியங்கள், கேழ்வரகு உணவுகள் இவையெல்லாம் பால் சுரப்பை அதிகரித்து சத்துக்களையும் கொடுக்கவல்லது.

பிறந்து ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே குடித்து வளரும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியையும், அதிக சக்தியையும் கொண்டு திறமையானவர்களாக இருக்கிறார்கள் என்று ஆய்வு ஒன்று நிரூபித்துள்ளது. தாய்ப்பால் குழந்தைக்கும் தாய்க்கும் நன்மையே செய்யும் என்பதை மறக்க வேண்டும்.

Related posts

பல் வலியை போக்க நந்தியா வட்டை!

admin

கண்டதையும் வைத்து காதை குடைவதை தவிர்த்து கீழ்க்கண்ட இயற்கை முறைகளை நாம் பின்பற்றலாம்!…

sangika sangika

சளி குறைய – பாட்டி வைத்தியம்

admin

Leave a Comment