ஆயுர்வேத மருத்துவம்

இந்த மாதிரி வர்றது எதோட அறி குறினு தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

சொரியாஸிஸ் என்பது உரிதோல் அழற்சி என்று அழைக்கப்படுகிறது. தோல்கள் உரித்து, அரிப்பு, வெடிப்பு மற்றும் சிவந்த புண்களை உடையது போன்று இருக்கும். சில நேரங்களில் இரத்தக் கசிவு கூட ஏற்படும். இந்த சொரியாஸிலயே இன்னொரு வகை உள்ளது. அது இன்வர்ஸ் சொரியாஸிஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த வகையில் தோலில் புண்கள் ஏற்பட்டு பளபளப்பாக சிவந்து போய் காணப்படும். குறிப்பாக இது தோல் மடிப்பு, இடுக்கு பகுதிகளில் அதிகம் ஏற்படும்.

இந்த இன்வர்ஸ் சொரியாஸிஸ் தோல் மடிப்பு அழற்சி என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நோய் ஒரு நாள்பட்ட நோயாகும். இது ஆரோக்கியமான சரும செல்களை பாதித்து சரும அழற்சியை ஏற்படுத்துகிறது. மரபணுக்கள், சுற்றுச்சூழல் போன்றவைகளும் இந்த நோய் ஏற்பட முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மாதிரி வர்றது எதோட அறிகுறினு தெரியுமா? தெரிஞ்சிக்கங்க… இப்படி சரிபண்ணுங்க

இதர காரணங்கள்

மன அழுத்தம்
சரும காயங்கள்
புகைப் பிடித்தல்
சில மருந்துகள்
சரும உராய்வு
ஆய்வு முடிவு

இளம் வயதை அடைந்தவர்களை விட பெரியவர்கள் இந்த இன்வர்ஸ் சொரியாஸிஸ் என்ற நோயால் அதிக அளவு பாதிப்படைந்துள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சரும அழற்சி ஏற்படும் இடங்கள்

சரும மடிப்பு உள்ள இடங்களான அக்குள், பிறப்புறுப்புகள், பட்டஸ், முழங்கால்களுக்கு பின் பகுதிகள், தொப்புளை சுற்றி, மார்பகங்களுக்கு கீழ் உள்ள பகுதிகள் போன்ற இடங்களில் ஏற்படுகிறது. இந்த மாதிரியான மென்மையான பகுதிகளில் வருவது அசெளகரியத்தை ஏற்படுத்துகிறது.

2005 ல் ஐரோப்பிய டெர்மட்டாலஜி இதழ் வெளியிட்ட ஆய்வுப் படி இன்வர்ஸ் சொரியாஸிஸ் இடுக்குப் பகுதிகள், அக்குள், பிறப்பிறுப்பு பகுதிகள் மற்றும் தொப்புள் பகுதிகளில் ஏற்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த இன்வர்ஸ் சொரியாஸிஸூம் சொரியாஸிஸ் போல தனிப்பட்ட பண்புகள், மருத்துவ அறிகுறிகள், சிகச்சைகள் போன்றவற்றை கொண்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

சரிபண்ணுங்க

அறிகுறிகள்

தோல் மடிப்பு பகுதிகளில் பளபளப்பான சிவந்த சரும வடுக்கள்
வலி
அதிகப்படியான அரிப்பு

வியர்க்கும் போது அந்த பகுதியில் அதிக அரிப்பு, தேய்த்தல், தடிப்பு போன்றவை ஏற்படுதல். இந்த அறிகுறிகளை அப்படியே விட்டு விட்டால் அந்த பகுதியில் இரத்தம் கசிந்து தொற்று ஏற்பட்டு விடும்.

எனவே இதன் அறிகுறிகளை ஆரம்பத்திலயே கண்டறிந்து கட்டுப்படுத்த சில இயற்கை வழிகள் உதவியாக இருக்கும். அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.

தேங்காய் எண்ணெய்

இந்த இன்வர்ஸ் சொரியாஸிஸை சரி செய்ய முதலில் அந்த பகுதியில் மாய்ஸ்சரைசர் அப்ளே செய்ய வேண்டும். இதற்கு தேங்காய் எண்ணெய் இயற்கையான மாய்ஸ்சரைசர் மாதிரி செயல்படுகிறது. இந்த தேங்காய் எண்ணெய்யை சருமத்தின் மீது தடவி வரும் போது சருமம் மென்மையாகி செதில் செதிலாக உரியும் தோல் சரியாகி விடும்.

கொஞ்சம் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய்யை பாதிக்கப்பட்ட இடத்தில் தினமும் 3தடவை தடவி வர வேண்டும். தேங்காய் எண்ணெய் மற்றும் டீ ட்ரி ஆயில் இவற்றை 10:1 என்ற விகிதத்தில் சேர்த்து கொள்ளுங்கள். இந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். காலையில் குளித்த பிறகு மற்றும் இரவில் படுப்பதற்கு முன்பும் தடவி வாருங்கள். 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை பழச்சாற்றில் கூட கலந்து குடியுங்கள்.

ஆப்பிள் சிடார் வினிகர்

இன்வர்ஸ் சொரியாஸிஸை போக்க ஆப்பிள் சிடார் வினிகரும் சிறந்த ஒன்றாக பயன்படுகிறது. இது சருமத்தின் pH அளவை சரி செய்து சரும தொற்றை சரி செய்கிறது. இதை நீங்கள் தண்ணீரில் கலந்து குடித்து கூட வரலாம்.

பயன்படுத்தும் முறை

1 கப் ஆப்பிள் சிடார் வினிகரை கலக்கி வெதுவெதுப்பான நீரில் குளியல் போடுங்கள். 20 நிமிடங்கள் அதில் நனைந்து இருங்கள். பிறகு சருமத்தை நன்றாக துடைத்து விட்டு மாய்ஸ்சரைசர் அப்ளே செய்யுங்கள். 1 பங்கு ஆப்பிள் சிடார் வினிகர், 3 பங்கு வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளுங்கள். அதில் ஒரு சுத்தமான துணியை நனைத்து அதை பாதிக்கப்பட்ட இடத்தில் 1 நிமிடங்கள் வரை வைக்கவும். பிறகு ஒரு நாளைக்கு 2-3 தடவை இதை செய்து வாருங்கள்.

1 டீ ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை 1 டம்ளர் தண்ணீரில் கலந்து கொள்ளவும். இதை தினமும் இரண்டு வேளைகளில் குடியுங்கள். இது நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்து விடும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை இன்வர்ஸ் சொரியாஸியால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நல்ல மாய்ஸ்சரைசர் அப்ளே செய்து சருமத்திற்கு ஈரப்பதம் ஊட்டுகிறது. பாதிக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்பான சருமமாக இருந்து சருமத்தை குணப்படுத்துகிறது. அழற்சியை எதிர்த்து போராடி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 2012 ல் ஆசியன் ஜர்னல் ஆஃப் டெர்மட்டாலஜி ஆய்வுப் படி கற்றாழை ஜெல் மற்றும் கரித்தூள் இரண்டையும் கலந்து சொரியாஸிஸ் நோய்க்கு பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை

கற்றாழை ஜெல்லை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட இடத்தில் அப்ளே செய்யுங்கள். இதை சருமத்தில் தடவி சாறு இறங்கும் வரை காத்திருங்கள். இதை சில வாரங்கள் என 3 தடவை செய்யுங்கள்.

மஞ்சள்

மஞ்சள் சருமத்திற்கு சிறந்த சிகச்சை அளிக்க கூடியது. இதில் அழற்சி எதிர்ப்பு பொருள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைய உள்ளன. இது இன்வர்ஸ் சொரியாஸிஸ் அழற்சியை குறைக்கிறது.

பயன்படுத்தும் முறை

1 பங்கு மஞ்சள் தூள், 2 பங்கு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். 2 மணி நேரம் கழித்து இதை திரும்ப செய்யவும். இதை தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

இந்த மாதிரி வர்றது எதோட அறிகுறினு தெரியுமா? தெரிஞ்சிக்கங்க… இப்படி சரிபண்ணுங்க
மஞ்சள் பானம்

1 டீ ஸ்பூன் மஞ்சள் தூள், 4 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். தீயை குறைத்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் வையுங்கள். அதை வடிகட்டி அதனுடன் லெமன் ஜூஸ் மற்றும் தேன் சேர்த்து கொள்ளுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு தடவை செய்யுங்கள்.

இந்த மாதிரி வர்றது எதோட அறிகுறினு தெரியுமா? தெரிஞ்சிக்கங்க… இப்படி சரிபண்ணுங்க
வேப்பெண்ணெய்

வேப்பெண்ணெய் இன்வர்ஸ் சொரியாஸிஸை போக்க பயன்படுகிறது. இதை வறண்ட சருமத்தை மென்மையாக்கி, உரிகின்ற தோலை சரி செய்கிறது.
2013 ஆம் ஆண்டு ஆசிய பசுபிக் ஜர்னல் ஆஃப் டிராபிகல் பயோமெடிசனில் வெளியிடப்பட்ட ஆய்வில் வேப்பெண்ணெய் சொரியாஸிஸ் மற்றும் இன்வர்ஸ் சொரியாஸிற்கு நல்ல பலனை தருகிறது.

பயன்படுத்தும் முறை

10 சொட்டுகள் வேப்பெண்ணெய், 1 டீ ஸ்பூன் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ளவும். அதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். அதை அப்ளே செய்து 1 மணி நேரம் உட்காரவும்
பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை ஒரு நாளைக்கு ஒரு முறை என செய்து வாருங்கள்.

இந்த மாதிரி வர்றது எதோட அறிகுறினு தெரியுமா? தெரிஞ்சிக்கங்க… இப்படி சரிபண்ணுங்க
ஓட்ஸ் மீல்

கொலாய்ட்ரல் ஓட்ஸ் சொரியாஸிஸ் போன்ற சரும பிரச்சினைக்கு மிகவும் சிறந்தது. ஸ்டார்ச் மற்றும் பீட்டா க்ளூக்கான்ஸ் போன்றவை சரும பாதுகாப்பிற்கு உதவுகிறது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் அரிப்பு மற்றும் வலியை போக்குகிறது.

2007 ஆம் ஆண்டில் டிராமாட்டாலஜி ஜர்னல் ஆஃப் ட்ரக்ஸ் என்ற நாளிதழ் தகவல் படி ஓட்ஸ் மீல் என்பது நல்ல மாய்ஸ்சரைசர் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருளாக செயல்படுகிறது.

பயன்படுத்தும் முறை

1 கப் ஓட்ஸ் மீலை குளிக்கின்ற வெதுவெதுப்பான பாத் டப்பில் கலந்து கொள்ளுங்கள். 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதில் குளித்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். பிறகு சருமத்தை நன்றாக துடைத்து விட்டு நல்ல மாய்ஸ்சரைசர் அப்ளே செய்யுங்கள். இதை தினமும் செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

இந்த மாதிரி வர்றது எதோட அறிகுறினு தெரியுமா? தெரிஞ்சிக்கங்க… இப்படி சரிபண்ணுங்க
ஆலிவ் ஆயில்

இன்வர்ஸ் சொரியாஸிற்கு இது சிறந்த ஒன்றாகும். இது சரும உரிதலை போக்குகிறது.

மேலும் இதிலுள்ள பாலிபினோல் சொரியாஸிற்கு நல்ல சிகிச்சை அளிக்கிறது.
வெதுவெதுப்பான ஆலிவ் ஆயிலை பாதிக்கப்பட்ட இடத்தில் அப்ளே செய்ய வேண்டும். இதை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பயன்படுத்தும் முறை

2சொட்டுகள் கேலண்டுலா ஆயில் மற்றும் 1 சொட்டு ஆர்கனோ ஆயில் 1 கப் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். சில மணி நேரம் கழித்து கழுவுங்கள். இதை தினமும் செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

இந்த மாதிரி வர்றது எதோட அறிகுறினு தெரியுமா? தெரிஞ்சிக்கங்க… இப்படி சரிபண்ணுங்க
விட்டமின் டி

விட்டமின் டி சூரியக் கதிர்களில் இருந்து பெறப்பட்டு சருமத்தை பாதுகாக்கிறது. இதனால் இன்வர்ஸ் சொரியாஸிற்கு உதவுகிறது.

2011 ல் வெளியிடப்பட்ட டெர்மட்டாலஜி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி படி விட்டமின் டி சொரியாஸிஸ் தோலிற்கு சிறந்த தீர்வளிக்கிறது.

2017 ல் எண்டோக்ரைன் மற்றும் மெட்டா பாலிக் டிஸ்ஆர்டர் தகவல் படி கெரடினோசைட்ஸின் பெருக்கம் மற்றும் சரும செல்கள் பிறழ்ச்சி போன்றவை சொரியாஸிஸ் நோயை குணப்படுத்த பயன்படுகிறது.

எனவே காலையில் 10-20 நிமிடங்கள் சூரிய ஒளியில் நின்று விட்டமின் டியை சருமத்திற்கு கிடைக்க செய்யலாம். உச்சி வெயிலில் நிற்பதை தவிருங்கள்.
மேலும் விட்டமின் டி உள்ள உணவுகளான சால்மன், பால், ஆரஞ்சு ஜூஸ் மற்றும் முட்டை போன்றவற்றில் உள்ளது.

இந்த மாதிரி வர்றது எதோட அறிகுறினு தெரியுமா? தெரிஞ்சிக்கங்க… இப்படி சரிபண்ணுங்க
மன அழுத்தம்

மன அழுத்தமும் நோயெதிர்ப்பு சக்தியில் விளைவை ஏற்படுத்தி சொரியாஸிஸ் நோயை ஏற்படுத்துகிறது. மன அழுத்தம் எளிதாக இன்வர்ஸ் சொரியாஸிஸ் நோயை ஏற்படுத்தி விடும்.

2012 ல் வெளியிடப்பட்ட டெர்மட்டாலஜி ஆராய்ச்சி பயிற்சி தகவல்கள் சொரியாஸிஸ் நோயாளிகள் மன அழுத்தம் மற்றும் பயத்தை கொண்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் அதிக மன அழுத்தம் கொண்ட பெண்கள் இதில் அதிகளவில் பாதிப்படைகின்றனர். எனவே அரோமோதெரபி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க தியானம் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

இந்த மாதிரி வர்றது எதோட அறிகுறினு தெரியுமா? தெரிஞ்சிக்கங்க… இப்படி சரிபண்ணுங்க
உடல் எடை அதிகரிப்பு

சொரியாஸிஸ் நோயை கட்டுப்படுத்த உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். உடல் பருமன் கூட இன்வர்ஸ் சொரியாஸிஸ் நோயை அதிக அளவில் பாதிக்கும்.

2017 ல் சொரியாசிஸ் மற்றும் சொரியாட்டிக் ஆர்த்ரிடிஸ் இதழில் வெளியிடப்பட்ட தகவல்கள் படி உடல் எடை இழப்பு, உடற்பயிற்சி, கலோரிகள் கட்டுப்பாடு போன்றவை சொரியாஸிஸ் நோயின் தீவிரத்தை குறைக்கிறது.
உடல் எடை இழப்பு சொரியாஸிஸ் நோய்க்கு சிறந்த தீர்வளிக்கும்.

இந்த மாதிரி வர்றது எதோட அறிகுறினு தெரியுமா? தெரிஞ்சிக்கங்க… இப்படி சரிபண்ணுங்க
சரியான பழக்கவழக்கங்கள்

அதிக கலோரிகள் கொண்ட உணவை தவிருங்கள்

பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

பீன்ஸ் மற்றும் பயிறு வகைகள் போன்ற புரோட்டீன் உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்

சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிருங்கள்.

வாரத்திற்கு 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள்

தினமும் காலையில் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்

சோடா போன்ற பானங்களுக்கு பதிலாக பழ ஜூஸ்களை குடித்து வரலாம்.

மேற்கண்ட இயற்கை முறைகள் சொரியாஸிஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

Related posts

கறிவேப்பிலையை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !…

sangika sangika

கால்சிய தேவைகள்

admin

வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும்!…

sangika sangika

Leave a Comment