ஆரோக்கியம்

இந்த செயல்கள் தான் உங்களின் உடல் எடையை அதிகரிக்கிறது!

நாம் செய்யும் அன்றாட செயல்கள் ஏதோ ஒரு விதத்தில் நம்மை பாதிக்க செய்கிறது. செய்கின்ற செயல்களால் ஒரு சில நன்மைகளும், பல பாதிப்புகளும் உண்டாகிறது. காலையில் எழுந்து கொள்ளும் முறை முதல் இரவு நேரத்தில் தூங்கும் முறை வரை நம் உடலில் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. நாம் செய்கின்ற செயலால் உடல் ஆரோக்கியம் நேரடியாக பாதிக்கப்படுகிறது.

உடல் எடை கூடுதல், ஹார்மோன் குறைபாடு, மன நிலை மாற்றம், உடல் செயல்திறன் குறைதல்… இப்படி பல்வேறு பிரச்சினைகள் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ நடந்து வருகின்றன. நாம் செய்யும் எந்தெந்த செயல்கள் உடலை நேரடியாக பாதிக்கிறது என்பதை பற்றிஇந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தூக்கமின்மை

இரவு நேரம் முழுவதும் செல்போனில் உங்களை மூழ்கடித்து விட்டு அதன் பின் தூக்கம் வரவில்லை என்றால் அது உங்கள் தவறே. இருப்பினும் இதனால் உண்டாகும் பாதிப்பு தான் அதிகம்.

இரவு நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதால் நேரடியாக ஹார்மோனை பாதிக்கிறது. இதனால் தான் தூக்கம் இல்லாமல் அவதிப்படுகின்றீர்கள்.

நீண்ட நேரம்…

அலுவலத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பவரா நீங்கள்? நிச்சயம் ஏற்கனவே உங்களுக்கு எக்கசக்க பிரச்சினைகள் உடலில் வந்திருக்கும்.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதால் உடல் எடை கூடுதல், முதுகு வலி, மலச்சிக்கல் முதலிய பாதிப்புகள் உண்டாகும்.

ஊட்டசத்து குறைபாடு

இன்றைய காலத்தில் உணவு சாப்பிடுவது கூட மிக பெரிய வேலையாக மாட்டி விட்டது. இருந்தும் பலர் இதனை கடமைக்கு கூட செய்வதில்லை.
சரியாக உணவு சாப்பிடாததால் ஊட்டசத்து குறைபாடு ஏற்படும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்களுக்கு உங்களை இறை ஆக்கிவிடும்.

நீர்சத்து

உடலுக்கு உணவை காட்டிலும் மிக முக்கியமாக தேவைப்படுவது நீர் தான். நீர்சத்து குறைபாடு ஏற்பட்டால் ஒவ்வொரு உறுப்புகளாக அதனது செயல்திறனை குறைத்து கொள்ளும். இது நாளடைவில் மரணத்தை பரிசாக தர கூடும்.

மனநிலை

உடலில் செயல்திறன் பாதிக்கப்படுவதற்கு மன நிலையும் ஒரு காரணம். உளவியல் ரீதியாக ஏதேனும் பிரச்சினை உங்களுக்கு ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்படுவது உங்களின் முழு உடலும் தான். இப்படிப்பட்ட தாக்கத்தால் ஹார்மோன் குறைபாடும் உண்டாக கூடும்.

காலை உணவு

காலை உணவை தவிர்த்தாலே உங்களுக்கு பெரிய ஆப்பு காத்துள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். காலை உணவை தவிர்த்தால் இரத்த அழுத்தம் முதல் சர்க்கரை அளவு வரை மாறுபடும். இதனால் பல்வேறு நோய்கள் உடலை ஆக்கிரமிக்க வசதியாக இருக்கும்.

உடற்பயிற்சி

இன்றைய கால கட்டத்தில் உடற்பயிற்சி என்பது இன்றியமையாத ஒன்றாகும். ஆனால், பலருக்கு காலையில் எழுந்து கொள்வதே பெரும் போராட்டமாக உள்ளது.

காலையில் விரைவாக எழுந்து உடற்பயிற்சி செய்து வருவதால் உடல் எடை கூடுதல் போன்ற எந்தவித பிரச்சினையும் உங்களுக்கு ஏற்படாது.

மதுவும் புகையும்

உங்களது வாழ்நாளை குறைக்க கூடிய ஆற்றல் இந்த மதுவிற்கு புகை பழக்கத்திற்கும் உண்டு. இதை எந்த வடிவில் எடுத்து கொண்டாலும் பேராபத்து நிச்சயம். ஆதலால், இதனை தவிர்த்து வாழ்ந்தால் உடல்நல குறைபாடுகள் இன்றி வாழலாம்.

Related posts

உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் உடற்பயிற்சி

admin

மனக்கட்டுப்பாடு, மன அமைதியை தரும் தியானத்தை எப்படி செய்ய வேண்டும்?

admin

தொப்பை ரொம்ப அசிங்கமா தொங்குதா? இந்த 7 ஜூஸ் குடிங்க!!!

admin

Leave a Comment