ஆயுர்வேத மருத்துவம் ஆரோக்கியம்

உடலுறவின் போது கருவிழியின் நிறம் மாறுவதற்கு காரணம் இது தான்!

இந்த உலகத்தை பல கோணங்களில் பார்க்க வைக்க உதவுவதே கண்கள் தான். உடல் உறுப்புகளில் கண்ணிற்கு என எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. பிறப்பு முறை இறப்பு வரை இந்த கண்கள் தான் மிக முக்கிய இடத்தில் இருந்து கொண்டு உலகை சுவாரசியமாக பார்த்து கொண்டு இருக்கிறது. காதல் தொடங்குவதும் கண்களில் வழியே தான்.

அது முடிவதும் கண்களின் வழியே தான். இப்படி பல பல சிறப்பம்சங்கள் கண்களுக்கு உண்டு. தானத்தில் கூட கண் தானம் தான் மிக சிறந்த தானமாக கருதப்படுகிறது. இந்த கண்ணின் அழகிய தன்மையே கருவிழி தான். மிகவும் அழகான இந்த கருவிழியின் நிறம் கூட அவ்வப்போது மாற்றம் பெறும்.

இதற்கு உள் சூழலும், புற சூழலும் மிக முக்கிய காரணியாக இருக்கிறது. உடலுறவு போன்ற எந்தெந்த நேரங்களில் நமது கண்ணின் கருவிழியின் நிறம் மாறும் என்பதை பற்றி இனி அறிந்து கொள்ளலாம்.

உடலுறவின் போது கருவிழியின் நிறம் மாறுவதற்கு இந்த ஒன்னு தான் காரணம்!
மாறுமா?

கண்ணின் கருவிழு மாற்றம் பெறாது என்கிற கருது பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. ஆனால், ஒரு சில காரணிகளின் போது கண்ணின் நிறம் மாற்றம் பெற வாய்ப்புள்ளது என தற்போதைய ஆய்வுகள் சொல்கிறது. சில சமயங்களில் பெரிய அளவிலும், பல சமயங்களில் சிறிய அளவிலும் இதன் மாற்றம் இருக்க கூடும்.

மன நிலை

நமது சுக துக்கங்களை பொறுத்து கண்ணின் கருவிழியின் நிறம் மாற்றம் பெருமாம். பொதுவாக ஏதாவது அதிர்ச்சி தர கூடிய நிகழ்வுகள் உங்களது வாழ்வில் நடந்தால் அந்நேரங்களில் கருவிழியின் நிறம் மாறுபடும். சில நேரங்களில் அடர்ந்த கருப்பு நிறமாகவும், சில நேரங்களில் வெளிர்ந்தும் காணப்படும்.

உணவு முறை

உணவில் அதிக அளவில் காய்கறிகள், பழங்களை சேர்த்து கொண்டால் நிச்சயம் கண்ணின் நிறம் மாறுபடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கண்ணின் நிறத்தை வெங்காயம், பருப்புகள், ஆலிவ் எண்ணெய் போன்ற காரணிகள் பாதிக்க வாய்ப்புள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பிறப்பிடம்

ஒவ்வொரு நாட்டினரின் கண்களும் அந்தந்த இடத்தை பொருத்து மாறுபடும். சில நாட்டு மக்களுக்கு அதிக அளவில் பிரவுன் நிற கருவிழி இருக்க கூடும்.
ஆனால், சிலருக்கு மிகவும் அடர்ந்த நீல நிற கருவிழிகள் இருக்கும். இது ஒவ்வொருவரின் தகவமைப்பை பொருத்தும் வேறுபாடுமாம்.

கருவிழி

இந்த பூமியில் பிறந்த பெரும்பாலானோருக்கு கருவிழியின் நிறம் பிரவுன் நிறத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 70% மக்களுக்கு பிரவுன் நிற கண்களும், 2% மக்களுக்கு பச்சை நிற கண்களும், சிலருக்கு நீல நிற கண்களும் உள்ளது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

வானவில் நிறம்

இந்த பூமியில் வானவில் நிறத்திலும் கூட கண்களை கொண்டோர் இன்றும் இருக்கின்றனர். இது ஒரு நோய் என பலர் கருதுகின்றனர். ஆனால், இது அவர்கள் நினைப்பது போல எந்தவித நோயும் கிடையாது. இது மிகவும் சிறப்புமிக்க ஒன்றாக தான் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உடலுறவு

பலருக்கு உடலுறவின் போது உச்சத்தை அடைந்தால் கண்ணின் கருவிழியில் மாற்றம் ஏற்படும். அதாவது, கருவிழியின் நிறமானது சற்று மாற கூடும். மேலும், இந்நேரத்தில் கருவிழியின் திரை அதிகமாக விரிவதாலே இப்படிப்பட்ட நிற மாற்றம் உண்டாகிறது.

லேசர்

கண்களில் லேசர் போன்றவை படும்போது அதன் நிறம் மாற வாய்ப்புள்ளது. அதாவது, சாதாரண கருப்பு அல்லது பிரவுன் நிறத்தில் இருக்கும் கருவிழி கூட அடர்ந்த சாம்பல் நிறத்தில் மாறுமாம். இது போன்ற ஒரு நிகழ்வு அர்ஜென்டினா நாட்டை சேர்ந்தவருக்கு நடந்துள்ளது.

மேக்கப்

பொதுவாக முகத்தில் போட கூடிய மேக்கப்பின் பிரதிபலிப்பே இப்படிப்பட்ட கருவிழி மாற்றத்தை தர கூடிய பிம்பத்தை நமக்கு காட்டும்.
குறிப்பாக கண்ணின் இமைகள், புருவங்கள், போன்ற பகுதியில் போடப்படும் மேக்கப் தான் இது போன்ற பிரதிபலிப்பை ஏற்படுத்தும்.

லென்ஸ்

இன்றைய கால கட்டத்தில் கருவிழியின் நிறத்தை மாற்றுவது மிக எளிமையானது. இது செயற்கை முறையில் இருந்தாலும் பலர் இதை விரும்புகின்றனர்.
இப்படிப்பட்ட ஆசையை நிறையவேற்றவே லென்ஸ்கள் உள்ளன. கலர் கலர் லென்ஸ்களை வாங்கி கொண்டு, நீங்கள் உடுத்தும் உடையின் நிறத்திற்கு ஏற்ப அணிந்து கொள்ளலாம்.

source: boldsky.com

Related posts

இரவு உணவை ஆரோக்கியமாக மாற்ற சில வழிகள்!…

sangika sangika

உடல் எடையால் கஷ்டப்படுறீங்களா? அப்ப தினமும் காலையில கறிவேப்பிலை ஜூஸ் குடிங்க.

admin

உடல்பருமன் அறுவைசிகிச்சை அழகா? ஆபத்தா?

admin

Leave a Comment