ஆரோக்கியம் இயற்கை மருத்துவம்

ஒரு கோப்பை தேங்காய் நீரில் இத்தனை நன்மைகளா??????

தேங்காய் நீரில் கலோரிகள் மிகக்குறைவு. இதனை அருந்துவதால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது. தேங்காய் நீரில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளன.

இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றி. அமினோ அமிலங்கள், என்சைம்கள், பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், வைட்டமின் சி மற்றும் இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் துத்தநாகம் போன்ற கனிமங்களைக் கொண்டிருக்கும்.

பாஸ்பேடாஸ், டையஸ்டேஸ், மற்றும் இதர என்சைம்கள் போலிக் அமிலம் போன்றவை இந்த நீரில் இருக்கின்றது. ஆகையால் உணவு செரிமானத்திற்கு இது உகந்தது. வயிற்று போக்கு, காலரா போன்ற நோயின் தாக்கத்தால் ஏற்படும் உடல் வறட்சிக்கு தேங்காய் நீர் ஒரு சிறந்த உடனடி மாற்று.

உடலில் இழந்த எலக்ட்ரோலைட் மற்றும் பிளாஸ்மா இருப்புகளை உடனடியாக மீட்கிறது. இதன் மூலம் உடல் நிலை சமன் அடைகிறது.

சைட்டோக்கின்ஸ் மற்றும் லாரிக் அமிலம் ஆகிய இரண்டிற்கும் வயது மூப்பை தடுக்கும் குணங்கள் உள்ளது.

இவை சருமத்தின் pH நிலையை சமன் செய்கிறது. தேங்காய் நீர் உடலின் பளபளப்பை மீட்டு தருகிறது. தேங்காய் நீரில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளதால் தோல் அரிப்பு அல்லது தோல் தொற்றுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும்.

ரிபோஃப்ளேவின், ஃபைடோஜெனிக் அமிலம், தியாமின் போன்ற வைட்டமின்கள் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும்.

தேங்காய் நீரில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் எலும்புகள் திடமாகவும் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தேங்காய் நீரில் அதிகமான அளவு பொட்டாசியம் உள்ளது. அதனால் இந்த நீரை பருகுவதால், சிறுநீரக கற்கள் கரைந்து விடுகின்றன. மேலும் மறுமுறை புதிய கற்கள் சேராமலும் இருப்பதையும் உறுதி செய்கின்றன.

தேங்காய் நீரில் சர்க்கரையின் அளவு மிக குறைவாக உள்ளது. இதன் கலோரிகளும் குறைவாக உள்ளதால் நீரழிவு நோயாளிகளும் இதனை பயன் படுத்தி பலன் அடையலாம்.

Related posts

காது வலியை குணமாக்கும் இலைக்கள்ளி

admin

சளி குறைய – பாட்டி வைத்தியம்

admin

உங்களுக்கு தெரியுமா சளித் தொல்லையில் இருந்து நிரந்தரமாக விடுபட உதவும் சில இயற்கை வழிகள்!

admin

Leave a Comment