பழங்களின் தோலைப் பயன்படுத்தி செய்யக்கூடிய சில எளிய தீர்வுகள்!…

பல ஊட்டச்சத்துகளின் ஆதாரமாக விளங்குவது புளிப்பு சுவைக் கொண்ட பழங்கள் மற்றும் வாழைப்பழம். இருப்பினும் இந்த பழங்களை நாம் சாப்பிட்டவுடன், அவற்றின் தோலை குப்பையில் வீசி விடுகிறோம். ஆனால் இந்த பழங்களின் தோல் பகுதி கூட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிரம்பியவை என்பதையும், அந்த ஊட்டச்சத்துகள் சருமம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு பல அற்புதங்களை செய்கின்றன என்பதையும் நாம் மறந்து விடுகிறோம். பழங்களின் தோல் பகுதியில் வைட்டமின், கனிமம், அன்டி ஆக்சிடென்ட் போன்றவை உள்ளன.

இவற்றில் அழகு சார்ந்த நன்மைகளும், வீட்டு உபயோகத்திற்கு தேவையான செயல்பாடுகளும் அடங்கியுள்ளன. சருமத்தை தளர்த்தி நெகிழ்வடையச் செய்யவும், சருமத்தை பிரகாசமாக வைத்துக் கொள்ளவும், சரும திட்டுகளை நிறமிழக்க வைக்கவும், பற்களை வென்மையடையச் செய்யவும், பல்வேறு சரும பிரச்சனைகளை எதிர்த்து போராடவும் இந்த தோல் பகுதி உதவுகிறது.

பழங்களின் தோல்கள்

ஒப்பனைப் பொருட்கள் தயாரிப்பு சந்தையில் பழங்களின் தோல் பகுதியை பயன்படுத்தி தங்கள் தயாரிப்புகளை சிறப்பானதாக மாற்ற முயற்சிக்கின்றனர்.

வாழைப்பழம் மற்றும் புளிப்பு சுவை கொண்ட பழங்களின் தோலைப் பயன்படுத்தி செய்யக்கூடிய சில எளிய தீர்வுகளைப் பற்றி நாம் இந்த பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.

ஸ்க்ரப்

இயற்கையான ஸ்க்ரப் தயாரிப்பில் புளிப்பு சுவைக் கொண்ட பழங்களின் தோல் பகுதி பயன்படுத்தப்படுகின்றன. இவை சருமத்தை தளர்த்தி, சுத்தம் செய்ய உதவுகின்றன. நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் சோப்புக்கு மாற்றாக இந்த பழங்களின் தோல் மூலம் தயாரிக்கப்பட்ட ஸ்கரப் பயன்படுத்தி உடலில் உள்ள அழுக்கை அகற்றி சருமத்தின் தோற்றத்தை பளிச்சென்று பராமரிக்கலாம்.

வெயிலில் உலர வைத்த எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழத்தின் தோல் 10-20 கிராம் அளவு எடுத்துக் கொள்ளவும். இந்த தோலை நன்றாக அரைத்துக் கொண்டு அதனுடன் ஓட்ஸ் சேர்க்கவும். இந்த தூளில், சிறிதளவு யோகர்ட், பால் அல்லது தேன் சேர்க்கவும். இந்த கலவையைக் கொண்டு சருமத்தில் தேய்க்கவும்.

பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். அகோரிகள் ஏன் பிணங்களுடனும், பிணங்களுக்கு மத்தியில் மட்டும் உடலுறவு வைத்துக்கொள்கிறார்கள் தெரியுமா? சிக்கன், மட்டனை விட இந்த 6 உணவுகள சாப்பிட்டா என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா..? எப்பவும் தாகமாவே இருக்கா? ஜாக்கிரதையா இருங்க மோசமான இந்த நோயா இருக்கவும் வாய்ப்பிருக்கு…!

கொப்பளக் கட்டி

இயற்கையான ப்ளீச் க்ரீம் கொண்டு சருமத்தில் உள்ள கொப்பளங்களை மறைய வைக்க எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழத்தின் தோலைப் பயன்படுத்தலாம். அரைத்த எலுமிச்சை தோல் 3 கிராம் எடுத்துக் கொண்டு அதனுடன் சிறிதளவு அரைத்த ஓட்ஸ் சேர்த்துக் கொள்ளவும்.

இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள், மூன்று சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கவும். இந்த கலவையுடன் பெட்ரோலியம் ஜெல்லி சேர்த்து, இந்த கலவையை சேமித்து வைத்துக் கொள்ளவும். இரவு உறங்கச் செல்வதற்கு முன் இந்தக் கலவையை முகத்தில் தடவவும். சரும திட்டுக்கள் உள்ள இடங்களில் மற்றும் கை கால்களில் கூட தடவலாம். 10 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

பருக்கள்

வாழைப்பழத் தோலில் உள்ள கொழுப்பு அமிலம் மற்றும் அன்டி ஆக்சிடென்ட் ஆகியவை சருமத்தை இதமாக்கி, கட்டிகளை உடைய வைக்க உதவுகிறது. வாழைப்பழத் தோல் ஒரு சிறிய துண்டு எடுத்துக் கொள்ளவும். அந்த தோலின் உட்புறப் பகுதியை கட்டி அல்லது பருக்கள் உள்ள இடத்தில் தடவவும்.

தோல் பழுப்பு நிறமாக மாறும் வரை இப்படிச் செய்யவும். அரை மணி நேரம் ஊறியவுடன், வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவுவம். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்யலாம். எக்சிமா அல்லது சொரியாசிஸ் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் இந்த முறையை பின்பற்றலாம். இதனால் சிறந்த தீர்வு கிடைக்கும்.

வெண்மையான பற்கள்

பற்களை வெண்மையாக மாற்ற வாழைப்பழத் தோல் ஒரு மலிவான அதே சமயம் சிறப்பான ஒரு தீர்வாகும். உங்கள் பற்கள் வெண்மை நிறத்தை இழந்து காணப்படும் போது, பல் மருத்துவரிடம் போக முடியாத சூழ்நிலை இருந்தால், வாழைப் பழத் தோல் மூலம் இழந்த வெண்மையை மீண்டும் பெறலாம்.

வாழைப்பழத் தோலில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் மங்கனீஸ் போன்ற கனிமங்கள் உள்ளது இவை பற்களின் எனாமலை வெண்மையாக வைக்க உதவுகின்றன. வாழைப் பழத் தோலின் உட்புறத்தை பற்களில் வைத்து 2 நிமிடம் தொடர்ந்து தேய்க்கவும்.

அரிப்பு

பூச்சிக்கடிக்கு வாழைப்பழத் தோல் ஒரு சிறந்த தீர்வைத் தருகிறது. பூச்சிக் கடித்த இடத்தல் வாழைப்பழத் தோலின் உட்பகுதி கொண்டு தடவுவதால், பூச்சி கடியால் ஏற்பட்ட அரிப்பு, எரிச்சல் மற்றும் வீக்கம் குறைகிறது. தோலில் உள்ள என்சைம்களில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்பு காரணமாக பாதிக்கப்பட்ட இடம் இதமான உணர்வைப் பெறுகிறது.

மரு

நாட்டு மருத்துவத்தில் வாழைப் பழத் தோல் கொண்டு மருவைப் போக்குகின்றனர். வாழைப்பழத் தோலின் உட்பகுதியை மரு உள்ள இடத்தில் வைத்து கட்டவும். இந்த தோல் ஒரு இரவு முழுவதும் மருவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

மறுநாள் காலை அந்த தொலை மருவில் இருந்து அகற்றவும். ஒவ்வொரு நாளும் இரவு இந்த முறையைப் பின்பற்றவும். இவ்வாறு செய்து வருவதால் சுமார் பத்து தினங்களில் சருமத்தில் இருந்து மரு உதிர்ந்து விடும்.

நகங்களை வெண்மையாக்க

சில நேரம் உங்கள் நகங்கள் இயற்கையான நிறத்தை இழந்து மஞ்சள் நிறத்தில் அல்லது நிறமற்ற நிலையில் காணப்படும். இதனைப் போக்க புளிப்பு சுவை கொண்ட பழங்களின் தோல் பகுதி பயன்படுகிறது.

உங்கள் விரல் நகத்தில் பிரெஷ் எலுமிச்சை தோலைப் பயன்படுத்தி தேய்க்கவும். இது ஒரு ப்ளீச் போல் செயல்பட்டு, விரல் நகத்தை சுத்தம் செய்து பளிச்சென்று மாற்றுகிறது.

ஹேர் ஸ்டைலிங்

எலுமிச்சை தோல் பயன்படுத்தி ஒரு விலை மலிவான கூந்தல் ஸ்ப்ரே தயாரிக்க முடியும். முடிக்கு ஸ்டைல் செய்த பிறகு அந்த ஸ்டைல் கலையாமல் இருக்க இந்த ஸ்ப்ரே பயன்படுகிறது. ஒரு எலுமிச்சையன் தோலை எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு, அதில் இந்த எலுமிச்சை தோலைப் போடவும். சில மணி நேரம் எலுமிச்சை தோல் தண்ணீரில் நன்றாக ஊறட்டும். பிறகு அந்த தோலை வடிகட்டி விட்டு, அந்த நீரில் ஒரு ஸ்பூன் வோட்கா சேர்க்கவும். ஸ்ப்ரின்கில் பாட்டிலில் இந்த கலவையை ஊற்றி, வறண்ட கூந்தலை ஈரம் செய்து கொள்ள பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *