என்னென்ன காரணிகளால் ஆண்களுக்கு ஈடுபாடு ஏற்படாமல் இருக்கிறது தெரியுமா?…

மனித வாழ்வின் ஆத்மார்த்த திருப்தி எதுவாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்..? பணம், பதவி, அந்தஸ்து, புகழ்..?! நிச்சயம் கிடையாது. எவ்வளவு சம்பாதித்தாலும், எக்கசக்க சொத்துக்கள் வைத்திருந்தாலும், எண்ணற்ற புகழ்களுக்கு சொந்தக்காரராக இருந்தாலும் தன்னை நேசித்து, கடைசி வரையிலும் தனது வாழ்வின் இன்ப துன்பங்களை பங்கு போட்டு கொள்ள ஒருவராவது இருப்பது தான் வாழ்வின் உண்மையான சந்தோஷம். இதில் அன்பும் காதலும், அதனால் பிறக்கும் காமும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

வெறும் காதலை மட்டும் வைத்து கொண்டு உறவை அந்த அளவிற்கு நம்மால் அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல முடியாது. அதே போன்று, வெறும் காமத்தை மட்டுமே வைத்து கொண்டு வாழ்வை நிம்மதியாக வாழ இயலாது. காதலும் காமமும் சேர்ந்தால் மட்டுமே அந்த உறவில் நெருக்கம் பிறக்கும். அந்த நெருக்கம் இருவருக்குள்ளும் ஒரு வித ஆத்மார்த்த உணர்வை பெற்று தரும்.

ஆனால், தற்போதைய கால கட்டத்தில் காதலை காட்டிலும் தாம்பத்திய வாழ்வில் பல வித பிரச்சினைகளை தம்பதிகள் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக ஆண்கள் பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவற்றில் ஒன்று தான் ஆண்களுக்கு தாம்பத்தியத்தில் ஈடுபாடு ஏற்படாதது. என்னென்ன காரணிகளால் ஆண்களுக்கு ஈடுபாடு ஏற்படாமல் இருக்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஈடுபாடு

காதலாக இருந்தாலோ அல்லது தாம்பத்திய உறவாக இருந்தாலோ அதில் ஈடுபாடு இல்லையெனில் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. ஆணுக்கு விருப்பம் இருக்கும் நேரத்தில் பெண்ணுக்கு விருப்பம் இல்லாமலோ… அல்லது பெண்ணுக்கு விருப்பம் இருக்கும் நேரத்தில் ஆணுக்கு விருப்பம் இல்லாமலோ இருந்தால் பல வித உறவு சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம். இது ஈடுபாடற்ற தாம்பத்திய உறவை ஏற்படுத்தி விடும்.

ஹார்மோன்

ஆண்கள் பெரும்பாலும் தாம்பத்திய வாழ்வில் ஈடுபடாததற்கு மிக முக்கிய காரணம் அவர்களின் உடலில் ஏற்பட்டுள்ள ஹார்மோன் மாற்றம் தான். டெஸ்டோஸ்டெரோன் அளவு குறைவாக இருந்தால் இது போன்ற பாதிப்புகள் ஆண்களின் உடலில் ஏற்பட கூடும்.

விந்தணு வெளியேற்றம்

தாம்பத்தியம் வைத்து கொண்ட மிக குறைந்த நிமிடங்களில் விந்தணு வெளியேறினால் ஆண்களுக்கு அது உறவில் சிக்கலை ஏற்படுத்தும். இதனால் தாம்பத்திய வாழ்வில் ஈடுபட ஆண்கள் பெரும்பாலும் தயங்குவார்கள். இது பல ஆண்களுக்கு தாம்பத்திய உறவில் விரிசலை கூட உண்டாக்கி விடும்.

பயம்

பல ஆண்களுக்கு தாம்பத்திய உறவை கண்டாலே பதற்றமும் பயமும் அதிகரித்து விடும். இது இருவருக்குள்ளும் பல பாதிப்புகளை உண்டாக்குமே தவிர ஆரோக்கியமான உறவை ஏற்படுத்தாது. தாம்பத்திய உறவில் பயம் இருந்தால் நல்ல மருத்துவரை அணுகி இதை பற்றிய புரிதலை கொண்டு வருவது சிறந்தது.

ஆபாச படங்கள்

ஆண்கள் அதிக அளவில் ஆபாச படங்களை பார்த்து விட்டு அதில் திருப்தி கொண்டால் தாம்பத்திய வாழ்வில் ஈடுபாடு குறைய தொடங்கி விடும். அதே போன்று உடல் அளவிலும் அவர்களுக்கு தேவைகள் குறைய அதிக வாய்ப்புகள் உண்டு.

மன அழுத்தம்

வாழ்க்கையை தொடங்கிய பின்னும் வாழ்க்கையை எப்படி வாழ போகிறோம் என யோசித்தே கொண்டே இருந்தால் அவ்வளவு தான். மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற காரணிகளால் பல ஆண்கள் தாம்பத்திய வாழ்வில் சிக்கலோடு வாழ்கின்றனர். இதை சரி செய்ய மன அழுத்தத்தை அவசியம் நீக்க வேண்டும்.

சுய இன்பம்

பல ஆண்கள் சுய இன்பம் கொள்ளும் போது அதிக திருப்தி அடைந்து விடுவதால் அவர்களுக்கு உடலுறவில் ஈடுபட நாட்டம் இல்லாமல் போய் விடுகிறது. இது போன்ற நிலை தாம்பத்திய வாழ்வில் ஈடுபட வைக்காமல், உறவில் மோசமான பாதிப்பை தருகிறது.

சந்தேகம்

சில ஆண்களுக்கு தங்களது உடல் மீதே பல சந்தேகங்கள் உண்டாகும். குறிப்பாக தனக்கு அதிக ஆண்மை உள்ளதா, தனது உடல் தாம்பத்திய உறவிற்கு ஏற்றதா, தனது பிறப்புறுப்புகள் சரியாக வளர்ந்துள்ளதா போன்ற பல சந்தேகங்கள் உண்டாக கூடும். இது போன்ற சந்தேகங்கள் அவர்களை உறவில் ஈடுபடுவதை குறைத்து விடும்.

விறைப்பு தன்மை

ஆண்களுக்கு விறைப்பு தன்மை போன்ற பிரச்சினைகள் இருந்தால் அதனால் உறவில் ஈடுபட முடியாமல் போவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும், பிறப்புறுப்பின் அளவு மிக சிறியதாக இருந்தால் அதனாலும் அவர்கள் உறவில் ஈடுபடுவதற்கு தயங்குவார்கள். இதை பற்றி மருத்துவரிடம் அணுகினால் நல்ல தீர்வை அடையலாம்.

உடல் நிலை

சில ஆண்களுக்கு உடல் நல கோளாறுகள் ஏற்பட்டால் அதனால் உறவில் ஈடுபட முடியாமல் போகும் நிலை உண்டாகும். முக்கியமாக இதய பிரச்சினை, பிறப்புறுப்பில் தொற்று நோய், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் இருந்தால் தாம்பத்திய வாழ்வில் ஈடுபாடு இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *