ஆலோசனைகள் சமையல் குறிப்புகள்

நமது உடலை பாதுகாப்பது எப்படி.!இதை படியுங்க!

தீக்காயத்தால் ஒரு நபர் பாதிக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில்., அவரை அந்த சூடான இடத்தில் இருந்து உடனடியாக வெளியே கொண்டு வர வேண்டும். அவரின் உடலில் இருக்கும் ஆடைகளை., கத்தரிக்கோலின் உதவியுடன் பொறுமையாக வெட்டி அகற்ற வேண்டும்.

அவரது உடலில் ஏதேனும் நகைகள் அணிந்திருந்தால் அதனை அப்புறப்படுத்திவிட்டு., தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் இதமான நீர் படும் வகையில் சுமார் 10 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். தீப்பட்ட காயத்தின் மீது எந்த விதமான களிம்புகளும் போட கூடாது.

ஒருவரின் உடலில் தீயானது பற்றி எரியும் போது தண்ணீர் இருந்தால் உடனடியாக தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சிக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் கம்பளி ஆடையின் உதவியுடன் அவரது உடலை சுற்றி அவர் மீது எரிந்து கொண்டு இருக்கும் தீயினை அணைக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில்., நீண்ட நேரம் கம்பளி துணியை அவரது உடலில் வைத்திருக்க கூடாது.

தீக்காயங்கள் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் இருக்கும் பட்சத்தில்., வாய் வழியாக அவர்களுக்கு சாப்பாடு மற்றும் பானங்களை வழங்க கூடாது. மேலும்., உடலில் இருக்கும் கொப்புளங்களை உடைக்க கூடாது. தீக்காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது அவர்களை தூக்கும் சமயத்தில் கவனமாக தூக்கி கொண்டு செல்ல வேண்டும்.

பெரும்பாலும் தீக்காயம் அடைந்த நபர்களை காப்பாற்ற செல்லும் நபர்களுக்கு தீக்காயம் ஏற்படுவது என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது., இந்த பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்கு காப்பாற்ற செல்பவர்கள் உங்களின் முன்னால் கம்பளி துணியை நீட்டியபடி செல்ல வேண்டும். இதன் மூலம் தீக்காயம் ஏற்படும் பிரச்சனையானது குறைக்கப்பட்டு., பிற ரசாயன காயத்தில் இருந்தும் தப்பிக்க வாய்ப்பளிக்கும்.

Related posts

சுவையான தக்காளி ஊறுகாய்!

sangika sangika

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளும் சரியாக மூங்கில் தண்டுகள்!…

sangika sangika

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்கலையா? இத ட்ரை பண்ணி பாருங்க…

admin

Leave a Comment