காரத்திலும் தனி சுவை கொண்ட பச்சை மிளகாய் உணவில் சேர்த்துக் கொள்வதினால் என்ன என்ன பயன் இருக்கிறது தெரியுமா? பச்சை மிளகாய் என்றால் உடனே ஞாபகத்துக்கு வருவது நாவை அடுப்பில் போட்டது போன்ற காரத்தை . இது பெரும்பாலும் உணவில் வந்தால் எடுத்து அழகாக ஓரம் கட்டிவிட்டு அதன் பின் தான் சாப்பிடவே ஆரம்பிப்பார்கள்.
இப்படி ஒதுக்கப்பட்டாலும் திரும்ப திரும்ப உணவில் சேர்ப்பது எதற்கு என்று தெரியுமா?
இதைபற்றிய மருத்துவர்களின் கூற்று என்னவென்று பார்போமா? இதோ பச்சை மிளகாய் பற்றிய சில உண்மைகளும் பயன்களும்.
-கேப்சைசின் (Capsaicin) என்னும் ரசாயனம் மிளகாயில் அதிகம் இருக்கிறது. இது வலி நிவாரணி ஆகும். இதனால் உடல் வலி, உடலில் உள்ள வலி நீங்கும். உடலை உஷ்ணப்படுத்தி விரல் நுனிவரை உள்ள நரம்புகளை சுண்டிவிடும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இந்த ரசாயனம் உடலில் என்டார்ஃபின் எனும் மகிழ்ச்சியை தூண்டும் ஹார்மோனை சுரக்க வைக்கும்.
-ஜீரணத்தை சீர் செய்யும்
-உடலில் உள்ள கெட்டவையை நீக்கி, உடலை சுத்தம் செய்யும்
-இது எலும்பை பாதுகாக்கும், மூட்டுகளை பாதுகாக்கும்
-புதிய ரத்தத்தை சுரக்க உதவும்.
-தோல் மற்றும் முடிக்கு தேவையான வைட்டமின்களான வைட்டமின் A & C-ஐ உடலுக்கு தருகிறது. தினமும் பச்சை மிளகாயை உட்கொண்டால் அது தோல் , முடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.
-உடலில் உள்ள காயங்களை விரைவில் ஆற்றும்.
-நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
-இதில் உள்ள ரசாயனமானது மூளையை சீண்டிவிட்டு, சில உடலை குளிர்விக்கும் ஹார்மோனை சுரக்கவைக்கும்.
-ரத்தத்தில் உள்ள கொழுப்பை அகற்றும். இதனால் இருதய நோய் வராது. இருதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
மேலும், ஆண்களுக்கான பிரத்யேக பயன்கள் என்வென்றால்,
-ஆண்களுக்கு வரக்கூடிய ப்ரோஸ்டேட் புற்று நோய் வராமல் தடுக்கும்.
-தாம்பத்திய வாழ்வில் இன்பம் பெற ஆண்களுக்கு அதிக சக்தியை தரும்.
இனியாவது உணவில் தயங்காமல் பச்சை மிளகாயை சேர்த்துக்கொள்ளுங்கள்.