சமையல் குறிப்புகள்

மிக ருசியான வெண்டைக்காய்பச்சடி இது!….

தேவையான பொருட்கள்

புளிக்காத புது தயிர் – 1 கப்,
வெண்டைக்காய் – 100 கிராம்,
தேங்காய் துருவல் – 1 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
உப்பு – தேவைக்கு.

தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை:

வெண்டைக்காயை கழுவித் துடைத்து, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய வெண்டைக்காயை அதில் போட்டு, நன்கு பொரித்தெடுங்கள். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து தயிரில் சேருங்கள். கடுகையும் பொரித்து சேருங்கள். அத்துடன் உப்பையும் சேர்த்து கலந்து வையுங்கள். பரிமாறுவதற்கு சற்று முன்பு, பொரித்த வெண்டைக்காயைத் தயிர்க் கலவையில் சேர்த்து பரிமாறுங்கள். மிக ருசியான தயிர்பச்சடி இது.

Related posts

சுவையான கேரளா ஸ்பெஷல் காளன்!…

sangika sangika

ஆரோக்கியம் நிறைந்த பசலைக் கீரை கிச்சடி….

sangika sangika

ருசியான வேர்க்கடலை சுண்டல்!…

sangika sangika

Leave a Comment