ஆயுர்வேத மருத்துவம் மருத்துவ கட்டுரைகள்

சிறு குழந்தை முதல் பெரியார்கள் வரை வர கூடிய நோயான சர்க்கரை நோய் !….

குழந்தையாக பிறந்த நாளில் இருந்தே வித விதமான நோய்கள் நம்மை சூழ்கின்றன. மருந்துகளை கண்டுபிடிக்கும் வேகத்தை விட நோய்கள் புதிது புதிதாக உருவாகின்றவேகம் தான் அதிகம். பல்வேறு நோய்கள் இருந்தாலும், ஒரு சில நோய்களை பார்த்து தான் நாம் அஞ்சுகின்றோம். குறிப்பாக புற்றுநோய், சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறு முதலியவற்றை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

இவற்றில் சிறு குழந்தை முதல் பெரியார்கள் வரை வர கூடிய நோயான சர்க்கரை நோய் தான் உடலில் மோசமான தாக்கத்தை உண்டாக்குகிறது. இதை சாப்பிட கூடாது, அதை சாப்பிட கூடாது, இதை செய்ய கூடாது..இப்படி பல கண்டிஷன்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு அடுக்கி கொண்டே போவார்கள்.

ஆனால், இதில் பல கட்டுக்கதையாகவே இன்றும் உள்ளது. நாம் கட்டுக்கதை என நினைக்கும் பல உண்மையாகவும் உள்ளது. இந்த பதிவில் இதனை பற்றி முழுமையாக அறிவோம்.

குண்டு உடல்!

பெரும்பாலும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு மட்டும் தான் சர்க்கரை நோய் வரும் என்கிற தவறான கண்ணோட்டம் உள்ளது. ஆனால், இது உண்மையல்ல. ஒல்லியாக இருப்பவர்களுக்கும் சர்க்கரை நோயின் தாக்கம் நிச்சயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

சர்க்கரை!

சர்க்கரை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்பது தவறான கருத்து. ஆனால், இது மறைமுகமான முறையில் இந்த நோயிற்கு வழி வகுக்கும். அதாவது, சர்க்கரை அதிகமாக சாப்பிட்டால் உடல் பருமனாகும். இது டைப் 2 சர்க்கரை நோயிற்கு வழி வகுக்கும். ஏனெனில், சர்க்கரை விரைவாகவே கணையத்தில் உள்ள செல்களை பாதித்து இன்சுலின் உற்பத்தியை தடை செய்யும்.

கர்ப்பம்

சர்க்கரை நோய் இருந்தால் உங்களால் கருத்தரிக்க முடியாது என்கிற வதந்தி பெரும்பாலும் நம்பப்படுகிறது. ஆனால், சர்க்கரை நோய் இருந்தாலும் கருத்தரிக்க முடியும் என்பதே உண்மை. இதற்கு சர்க்கரையின் அளவை சமமான வைத்து கொண்டாலே போதும்.

இதய நோய்கள்

சர்க்கரை நோய் வந்தால் கூடவே இணைப்பாக இதய நோய்களும் உண்டாகும் என்பதை பலர் நம்புகின்றனர். ஆனால், இது அப்படி கிடையாது. அதிக மன அழுத்தம், இரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால், சீரற்ற குளுக்கோஸ் அளவு போன்றவை இருப்பதால் தான் இதய நோய் உண்டாகிறது.

கண் பார்வை

சர்க்கரை நோய் உருவாகினால் இதன் மூலம் கண் பார்வை கோளாறாகிவிடும் என பலர் கருதுகின்றனர். கூடவே பார்வை முழுவதுமாக பறி போய் விடும் எனவும் கருதுகின்றனர். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிமாக இருந்தால் கண்களை பாதிக்கும் தான். அதற்காக பார்வை முழுவதும் போய் விடாது.

தீர்வே இல்லை!

டைப் 2 வகை சர்க்கரை நோயிற்கு தீர்வு உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். மருத்துவரக்ள் தரும் ஆலோசனைகள் கடைபிடித்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்தால் இதனை கட்டுப்படுத்த இயலும்.

விந்து குறைபாடு

சர்க்கரை நோய் உண்டாக்குவதால் நிச்சயம் ஆண்களுக்கு பல வித கோளாறுகள் உண்டாகும் என ஒரு தரப்பினர் எண்ணுகின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. இதற்கும் விந்தணு உற்பத்திக்கும் நேரடி தொடர்ப்பு கிடையாது. இதனால் விந்து உற்பத்தி முழுவதுமாக தடைபடாது. சில சமயங்களில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகவும் அதிகரித்தால் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

உடற்பயிற்சி

சர்க்கரை நோயாளிகள் ஒரு போதும் உடற்பயிற்சியை செய்ய கூடாது என்கிற தவறான புரிதல் உள்ளது. சர்க்கரையின் அளவை சமமாக வைத்து கொள்ள உடற்பயிற்சி அவசியமானது. ஆதலால், தவறாது உடற்பயிற்சி செய்து வந்தால் இந்த நோயை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளலாம்.

Related posts

பல நோய்களுக்கு மருந்தாகும் ஆயுள்வேத மூலிகை கோவக்காய்….

sangika sangika

உயிரணுக்களின் தரத்தை அதிகரிக்க இதை செய்யுங்கள்!…

sangika sangika

மனஅழுத்தம் உடையோர் வெளிப்படுத்தும் நடவடிக்கைகள்

admin

Leave a Comment