சமையல் குறிப்புகள்

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை சாப்பிடலாம்!…

தேவையான பொருட்கள் :

கம்பு – ஒரு கப்

கொள்ளு – கால் கப்
சுக்கு – 2

தேங்காய் துருவல் – 1 கப்

செய்முறை :

கம்பு மற்றும் கொள்ளுவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைக்கவும்.

ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் சுக்கு சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

பொடித்த மாவுடன் உப்பு சேர்த்த தண்ணீர் தெளித்து பிசையவும். பிடித்தால் உருண்டையாகவும், உடைத்தால் உடையும் பதம் வரும் வரை பிசையவும்.

மாவை புட்டு குழலில் வைத்து இடை இடையே தேங்காய் துருவல் சேர்த்து ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

சுவையான கொள்ளு – கம்பு புட்டு தயார்.

இதில் கொள்ளு சேர்ப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை சாப்பிடலாம்.

Related posts

சுவையான வடகறி எப்படி செய்வது?

sangika sangika

ஆரஞ்சு பழத்தோலை கொண்டு கேக் செய்வது எப்படி?….

sangika sangika

துர்நாற்றம் வீசும் பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தம் செய்ய டிப்ஸ்

admin

Leave a Comment