சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து கருஞ்சீரகம்!…

கருஞ்சீரகத்தில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளன. பலவிதமான நோய்களை கட்டுப்படுத்தும் சக்தியும், நோய்களை வரவிடாமல் காக்கும் சக்தியும் கருஞ்சீரகத்திற்கு உண்டு.

சர்க்கரை நோய்க்கு ஒரு எளிமையான சிகிச்சை மருந்து கருஞ்சீரகம். கொஞ்ச காரம் நிறைந்தது. இதனை லேசாக வறுத்து கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்கலாம் அல்லது இரவில் கருஞ்சீரகத்தை ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை குடிக்கலாம். இதன் மூலம் கேன்சரையும் தடுக்கலாம். சர்க்கரை நோயையும் தடுக்கலாம்.

* கருஞ்சீரகம் வயிற்றிலுள்ள வாயுத்தொல்லைகளை நீக்கும் திறன் கொண்டது. வயிற்றில் ஏற்படும் உப்புசம் மற்றும் இதர ஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகளை போக்குவதோடு மட்டுமல்லாமல் இரைப்பை மற்றும் ஈரலில் கிருமி தொற்றுகளையும் போக்கும் தன்மை கொண்டது.

* கருஞ்சீரகத்தை பொடி செய்துகொண்டு அதில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து அதனுடன் சிறிது தேனும் கலந்து பருகி வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்களை கரைத்து அந்த உறுப்புகளின் செயல் திறனை அதிகரிக்கும்.

* கருஞ்சீரகத்தை தேங்காய் எண்ணெய்யோடு காய்ச்சி ஆறவைத்து, வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் இந்த எண்ணெய்யை தலையில் அரைமணி நேரம் ஊறவைத்து குளித்து வந்தால் முடி உதிர்வதை தடுக்கலாம்.

* கருஞ்சீரகத்தை பொடி செய்துகொண்டு அதனுடன் சிறிது தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால், புற்று நோய்கள் ஏற்படாமல் காக்கும். மேலும் எலும்புகளுக்குள் இருக்கும் மஜ்ஜைகளை பலப்படுத்தி உடல் பலத்தை பெருக்கும்.

* கருஞ்சீரகத்தை வறுத்து தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்து, அதை மூக்கில் விட கடுமையான தலைவலியையும், சளியையும் போக்கும். கருஞ்சீரகம் குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு நல்ல நிவாரணியாக உள்ளது.

* கருஞ்சீரக பொடியை தினமும் குளிக்கும்போது உடலிலொ தேய்த்து குளிப்பதால் சோரியாசிஸ் போன்ற தோல் சம்பந்தமான வியாதிகள் அனைத்தையும் நீக்கும். மேலும் தோலிம் ஏற்பட்டிருக்கும் கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவற்றையும் நீக்கும்.

* ஆஸ்துமா மற்றும் இருமல் சம்பந்தமான நோயால் அவதியுறுபவர்கள், கருஞ்சீரகத்தை பொடி செய்து அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து தேன் மற்றும் அரை டீஸ்பூன் அரைத்து பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிட நல்ல நிவாரணம் கிடைக்கும்.

சர்க்கரை நோய்க்கு மருந்து:

வெந்தயம் – 50 கிராம், கருஞ்சீரகம் – 25 கிராம், ஓமம் – 25 கிராம், சீரகம் – 25 கிராம் இவற்றை ஒன்றாக சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும். தினமும் காலை 1 ஸ்பூன் அளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிகவும் நல்லது. தண்ணீர் தேவைப்பட்டால் குடிக்கலாம். ஒரு வாரத்திற்கு பின் மருத்துவரிடம் சென்று சுகர் உள்ளதா என்பதை பரிசோதனை செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *