சமையல் குறிப்புகள்

சுவையான வாழைப்பூ வடை தேங்காய் சட்னியுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்!…

தேவையான பொருட்கள்

பொடியாக நறுக்கிய வாழைப்பூ – 1 கப்
கடலைப்பருப்பு – 2 கப்
உளுத்தம் பருப்பு – ஒரு கைப்பிடி
சோம்பு – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 4
வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி – சிறிதளவு
புதினா – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
எண்ணெய் – 1/2 லிட்டர்

தயார் செய்து கொள்ள வேண்டியவை:

வாழைப்பூவில் உள்ள நரம்பு போன்ற பகுதியை அகற்றி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும். கடலைப்பருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய பருப்பை மிக்ஸ்யில் போட்டு வடை பதத்தில், கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.


செய்முறை:

அரைத்து வைத்துள்ள பருப்பு கலவையுடன் வாழைப்பூ, வெங்காயம், சோம்பு, உப்பு, பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி, புதினா சேர்த்து பிசைந்து வைத்து கொள்ளவும். மாவு கலவையை சிறிது சிறிதாக எடுத்து வடையாகத் தட்டி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். சுவையான வாழைப்பூ வடை தேங்காய் சட்னியுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.

Related posts

சுவையான ஸ்வீட் காராசேவ்!…

sangika sangika

ஆரஞ்சு பழத்தோலை கொண்டு கேக் செய்வது எப்படி?….

sangika sangika

சூப்பரான கேளரா ஸ்டைல் பரோட்டா ரெடி!!!

sangika sangika

Leave a Comment