ஏன் மக்னீசியம் குறைபாடு ஏற்படுகின்றது!….

கால்சியம், வைட்டமின் சி, புரதம் இவையெல்லாம் ஆரோக்கிய உடலுக்கு அவசியம் என்பது நாம் அறிந்ததே. இருப்பினும் சில பாதிப்புகள் நமக்கு ஏற்படவே செய்கின்றன. அதில் மக்னீசியம் எனும் தாது உப்பினை பற்றி மேலும் பார்ப்போம். மக்னீசியம் 200 வகையான ரசாயன செயல்களுக்கு தேவைப்படுகின்றது. அதில்…

• கால்சியம், வைட்டமின் டி, கே. மற்றும் மக்னீசியம் இவை உடல் ரத்த ஓட்டத்தில் சீராக செல்ல உதவுகின்றது.
• நரம்பு, தசைகள் சீராக இயங்க உதவுகின்றது.
• உடலில் சக்தி உருவாக உதவுகின்றது.
• உடலில் நச்சினை நீக்குகின்றது.
• புரதம், கார்போஹைடிரேட், கொழுப்பு இவற்றின் ஜீரணத்திற்கு உதவுகின்றது. இப்படி நிறைய கூறலாம். நம் உடலில் மக்னீசியம் குறைபாடு கீழ்கண்ட அறிகுறிகளாககூட வெளிப்படலாம்.
• பசியின்மை
• வயிற்றுப் பிரட்டல்
• வாந்தி
• சோர்வு
• பலமின்மை
• மரத்து போகுதல்
• தசைபிடிப்பு •
வலிப்பு
• இருதய துடிப்பில் மாற்றம்
• உயர் ரத்த அழுத்தம் ஆகியவை ஆகும்.

 

நமக்கு ஏன் மக்னீசியம் குறைபாடு ஏற்படுகின்றது.

• இன்றைய உணவுகளில் ரசாயனம், பூச்சிகொல்லி மருந்து கலப்படம் இருக்கின்றது. இதனால் பூமிதன் தாது உப்புகளை இழக்கின்றது.

• ஸ்டிரெஸ் அதிகம் இருக்கும் பொழுது அவர்களுக்கு மக்னீசியம் குறைபாடு ஏற்படுகின்றது. அதே போல் மக்னீசியம் அளவு குறையும் பொழுது ஸ்டிரெஸ் பாதிப்பு ஏற்படுகின்றது.

• சிறுநீரக பாதிப்பு
• ஜீரண கோளாறு
• பாரா தைராய்டு பிரச்சினை

• அதிக ஆன்டிபயாடிக் மற்றும் சர்க்கரை நோய், புற்றுநோய் மருந்துகள் எடுத்துக்கொள்ளுதல்
• அதிக ஆல்கஹால் போன்றவை மக்னீசியம் குறைபாட்டினை ஏற்படுத்தும்.

மக்னீசியம் குறைபாட்டினை தவிர்க்க இயற்கை முறைகள்.

• முந்திரி – ஒரு அவுன்ஸ் அளவு. இது உங்கள் அன்றாட தேவையில் 20 சதவீதத்தினை அளித்துவிடும்.
• பாதாம் – 1 அவுன்ஸ் அளவு நமது அன்றாட மக்னிசியம் தேவையில் 19 சதவீதத்தினை நிறைவு செய்யும்.

• பருப்பு வகைகள்
• பசலை கீரை
• அத்திப்பழம்
• வாழைப்பழம்
• வெண்டைக்காய்
• பூசணி விதை
• சுரைக்காய்
• பிரவுன் அரிசி

போன்றவை இயற்கை வழியில் மக்னீசியம் கிடைக்கும் வழிகள்.மேலும் மருத்துவர் மூலம் ஆலோசனைப் பெறுவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *