சுவையான பனீர் குலோப் ஜாமூன்!….

தேவையானப்பொருட்கள்:

துருவிய பனீர் – 50 கிராம்,
மைதா – 100 கிராம்,
ஆப்பசோடா – ஒரு சிட்டிகை,
சர்க்கரை – 200 கிராம்,
எண்ணெய் – 200 கிராம்.


செய்முறை:

சர்க்கரையுடன் சிறிதளவு நீர் சேர்த்து, ஒற்றைக் கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். மைதாவுடன் பனீர், ஆப்பசோடா, சிறிதளவு நீர் சேர்த்து மிகவும் மிருதுவாக பிசைந்து (அடித்து / அழுத்தி பிசையக்கூடாது), சிறிய கோலி உருண்டைகள் போல் உருட்டவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, செய்து வைத்த உருண்டை களைப் பொரித்தெடுத்து பாகில் போட்டு, கொஞ்சம் ஊறிய பின் சாப் பிடக் கொடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *