நீங்கள் சாப்பிடும் எந்தெந்த உணவுகள் புற்றுநோயை ஏற்படுத்தும் என்று தெரியுமா?…

புற்றுநோய் என்பது உலகளவில் மக்களை அச்சுருத்தும் இரண்டாவது நோயாக உள்ளது. புற்றுநோய் தாக்க காரணங்கள் சிறியதாக இருந்தாலும் அதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமானவை. ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், புற்றுநோயால் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கு சுற்றுசூழல் ஒரு காரணமாக இருந்தாலும் நமது உணவுமுறையும் முக்கியமான காரணமாகும்.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் எந்தெந்த உணவுகள் புற்றுநோயை ஏற்படுத்துவதில் முக்கியப்பங்கை வகிக்கிறது என்பதை உலக சுகாதர நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த உணவுகள்தான் 2018ல் அதிக நபர்களுக்கு புற்றுநோய் ஏற்பட காரணமாக இருந்துள்ளதாம். இதில் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால் நாம் அடிக்கடி சாப்பிடும் சில உணவுகளும் இந்த பட்டியலில் இருப்பதுதான். நீங்கள் சாப்பிடும் எந்தெந்த உணவுகள் புற்றுநோயை ஏற்படுத்தும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பார்பிக்யூ உணவுகள்

க்ரில், தந்தூரி என நன்கு ஆவியில் சமைக்கப்பட்ட அசைவ உணவுகள் அனைவருக்கும் பிடித்தவைதான். ஆனால் இந்த உணவுகள்தான் புற்றுநோயை உண்டாக்குவதில் முக்கியப்பங்கை வகிக்கிறது. இறைச்சியானது பார்பிக்யூ வடிவில் சமைக்கப்படும் போது அது கார்சினோஜெனிக் பொருளான PAH என்னும் நச்சுப்பொருளை வெளியிடுகிறது. இது புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது. டோஸ்ட்களில் கூட இந்த ஆபத்து உள்ளது. ஆனால் அது புற்றுநோயை ஏற்படுத்தும் அளவு மிகவும் குறைவுதான்.

ஊறுகாய்

புளிப்பான உணவுகள் வெளியிடும் ஆரோக்கியமான பாக்டீரியக்கள் நமது செரிமானத்தின் வேகத்தை ஊக்குவிக்கிறது. ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக உப்பு உள்ள பொருட்கள் வயிறு புற்றுநோயை உண்டாக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆசியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் குறிப்பிடத்தகுந்த சதவீத்தினருக்கு புற்றுநோய் ஏற்பட காரணம் அவர்கள் சாப்பிட்ட அதிகளவு உப்பு சேர்க்கப்பட்ட புளிப்பு உணவுகளும், பபுகையில் சமைக்கப்பட்ட மீனும் தான் என்று ஆய்வுகள் கூறுகிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

இறைச்சிகளை பயன்படுத்த பயன்படும் வழிமுறைகள் அவற்றின் மீது நைட்ரைட்டுகள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது. இதனால் குடல் மற்றும் வேறுசில புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் உணவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுவதை தவிருங்கள். குறிப்பாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இறைச்சிகள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

மதுபானம்

மதுபானம் என்று வரும்போது அதன் தரமும், அளவும் மிகவும் முக்கியமானதாகும். ஆல்கஹாலின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கும். அதனால்தான் மருத்துவர்கள் ஒருபோதும் ஆல்கஹாலின் அளவை குறைவாக வைத்துக்கொள்ளும்படி கூறுகிறார்கள். மேலும் இது எடை அதிகரிக்கவும் வாய்ப்பை அதிகரிக்கும்.

ட்ரான்ஸ் கொழுப்புகள்

இந்த வகை கொழுப்புகள் நம் உடலுக்கு நன்மைதான் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் ட்ரான்ஸ் கொழுப்புகள் பல மோசமான நோய்களை உண்டாக்கவல்லது என்று கண்டறியப்பட்டுள்ளது.குறிப்பாக இது இதயம் தொடர்பான பல பிரச்சினைகளை உண்டாக்குமாம். இது நேரடியாக புற்றுநோயை உண்டாக்கவிட்டாலும், இந்த உணவுகளை சாப்பிடும் புற்றுநோய் நோயாளிகளுக்கு இதனால் மரணம் ஏற்படும் சதவீதம் 78 சதவீதம் அதிகரிக்கும்.

சோடா

சர்க்கரைக்கும், புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பை பற்றி ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்துகொண்டுதான் இருக்கின்றனர். அதில் கிடைத்த தகவல் என்னவென்றால் சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள் நிச்சயம் உடல் எடையை அதிகரிக்கச்செய்யும். எடை அதிகரிப்பு புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். உதாரணத்திற்கு உங்கள் உடலில் கொழுப்புகள் அதிகரிக்கும் போது அது அதிகளவு ஈஸ்ட்ரோஜனை சுரக்கவைக்கும். இதனால் மார்பக புற்றுநோய், புரோஸ்ட்ரேட் புற்றுநோய் போன்றவை ஏற்படலாம்.

மைக்ரோவேவ் பாப்கார்ன்

மைக்ரோவேவ் ஓவனில் தயாரிக்கப்பட்ட பாப்கார்ன்கள் அடைக்கப்பட்டு விற்கப்படும் பொது அதில் PFOA என்னும் பொருள் உள்ளது. ஆய்வுகளின் படி இந்த் பொருள் கல்லீரல், கணையம் போன்ற பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

அடைக்கப்பட்ட தக்காளி மற்றும் சாஸ்கள்

தயாரிப்பாளர்கள் பிஸ்பெனால் A(BPA) என்னும் பொருளை கொண்டு உணவுகளை அடைக்கும் கேன்களை தயாரிக்கிறார்கள். இந்த BPA நம் உடலில் இயற்கையாக சுரக்கும் பாலியல் ஹார்மோன்களின் உற்பத்தியில் குறுக்கிடும். இதனால் மார்பக புற்றுநோய் மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. இந்த கேன்களில் தக்காளி அடைக்கப்படும்போது அதில் உள்ள அமிலங்கள் BPA உடன் வினைபுரிந்து அதிக BPA வை உற்பத்தி செய்கிறது. எனவே அடைக்கப்பட்ட தக்காளி மற்றும் சாஸ்களை ஒருபோதும் உபயோகிக்காதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *