ஆயுர்வேத மருத்துவம் ஆலோசனைகள்

தொப்பையை வைத்து கொண்டால் நமக்கு எந்தவித பாதிப்பும் இல்லையென்று நினைக்காதீர்கள்!…

இன்றைய கால கட்டத்தில் தொப்பையை குறைப்பது என்பது மிக கடினமான ஒன்று. தொப்பையை குறைக்க என்னென்னவோ செய்தாலும் இது அவ்வளவு சீக்கிரத்தில் நிறைவேறுவது இல்லை. நாம் செய்ய கூடிய ஒரு சில விஷயங்கள் தான் இந்த தொப்பையை குறைக்க விடாமல் வைக்கிறது.

இது ஒருபுறத்தில் இருக்க மறுபுறத்தில் தொப்பையினால் பலவித நோய்கள் நமக்கு வருகின்றன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தொப்பையை வைத்து கொண்டால் நமக்கு எந்தவித பாதிப்பும் இல்லையென்று நினைக்காதீர்கள். இது உங்கள் உயிருக்கே ஆபத்தை தருமாம். இதற்கு காரணம் தொப்பையில் உள்ள கொழுப்புகள் தான். தொப்பையின் கொழுப்புகள் எப்படிப்பட்ட நோய்களை உங்களுக்கு தருகிறது என்பதை இனி அறிந்து கொள்வோம்.

பேராபத்து..!

நீண்ட நாட்கள் தொப்பை உங்களுக்கு இருந்தால் கொஞ்சம் பயப்பட கூடிய விஷயமாகவே இது கருதப்படுகிறது. பொதுவாக கொழுப்புகள் வயிற்று பகுதியில் மட்டுமே சேருவதில்லை. மாறாக நமது முகம், தொடை, கை போன்ற பகுதிகளிலும் சேருகின்றன. இவற்றில் தொப்பையில் உள்ள கொழுப்புகள் தான் புற்றுநோய் முதல் இதய நோய்கள் வரை உருவாக்குகின்றன.

காரணம்..?

இப்படி நமது வயிற்றில் கொழுப்புகள் சேருவதற்கு முக்கிய காரணமே நாம் சாப்பிட கூடிய தேவையற்ற உணவுகள் தான். மேலும், கலோரிகள் அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிடுவதாலும் இது ஏற்படுகிறது. பின்னாளில் பலவித ஆபத்துகளை நமக்கு தருகின்றன.

இதயம் அவ்வளவுதான்..!

தொப்பை உங்களுக்கு இருந்தால் நிச்சயம் இதயம் சார்ந்த தாக்குதல்கள் வரும். குறிப்பாக மாரடைப்பு, இரத்த நாளங்களின் பாதிப்படைதால், அதிக அளவில் ரத்த அழுத்தம் ஏற்படுதல் போன்றவை வருகின்றன. தொப்பையில் உள்ள கொழுப்புகள் தான் இத்தனை பிரச்சினைக்கு தொடக்க புள்ளி என ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஹார்மோன் பாதிப்பு..!

தொப்பையில் உள்ள கொழுப்புகள் நமது ஹார்மோனையும் பாதிக்க கூடும். நமது உடலில் அளவுக்கு அதிகமாக கொழுப்புகள் இருந்தால் அவை நமது ஹார்மோன்களை அதிகம் சுரக்க செய்து செல்களை பிரிக்க கூடும். இது நாளடைவில் புற்றுநோயாக நமக்கு உருப்பெற்று விடும்.

புற்றுநோய் அபாயம்..!

வயிற்றில் அளவுக்கு அதிகமாக சேர கூடிய கொழுப்புகள் நமக்கு குடல் சார்ந்த புற்றுநோயை ஏற்படுத்தும். மேலும், செரிமான மண்டலத்தை பாதித்து அந்த இடத்தையும் புற்றுநோய் ஆட்கொள்ளும். இவை கொஞ்சம் மோசமான பாதிப்புகளை நமது உடலில் ஏற்படுத்த கூடும்.

தைராய்டு பிரச்சினை

உங்களுக்கு தொப்பையை ஏற்படுகிறதென்றால் தைராய்டும் கூடவே பரிசாக கிடைக்க போகிறது என்று அர்த்தம். உங்கள் தொப்பை தைராய்டு ஹார்மோனின் செயல்திறனை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, உடலுக்கு தீங்கை தருகிறது.

தொப்பையும் நோயும்..!

உடலில் சேர கூடிய கொழுப்புகள் அதிகமானால் அவை சர்க்கரை நோயிற்கு வழி வகுக்கும். இவை இன்சுலின் உற்பத்தியை குறைத்து மிக எளிமையாக நீரிழிவை தர கூடிய ஆற்றல் கொண்டது. நாளாக நாளாக இதன் தாக்கம் அதிகரித்து, மரணம் உங்களை சீக்கிரமே நெருங்கி விடும்.

மன அழுத்தம் கூடும்..!

இது போன்ற தொப்பை பிரச்சினை கொண்டோருக்கு கூடுதலாகவே மன அழுத்தமும் உண்டாகும். உடல் எடை கூடுதல் ஒருபுறம் இருக்க மறுபுறம் இந்த தொப்பை பிரச்சினை உங்களை வாட்டி எடுத்துவிடும். அத்துடன் உங்களது மனநிலையையும் இது மாற்ற கூடிய தன்மை பெற்றது.

மூட்டுகளுக்குமா..?

பலவித உடல் மாற்றங்களை ஏற்படுத்த கூடிய தன்மை இந்த தொப்பையில் உள்ள கொழுப்பிற்கு உள்ளதாம். இவை நமது மூட்டுகளுக்கு அதிக வழியை தந்து தசை பிழற்சியை ஏற்படுத்துமாம். இதனால் எந்த வேலை செய்தாலும் உங்களுக்கு அதிக சோர்வுடனே இருக்கும்.

என்ன செய்யலாம்..?

இது போன்ற தொப்பை பிரச்சினை கொண்டோருக்கு பலவித வழிகள் உண்டு. சரியான உணவு பழக்கமும், தொடர்ந்த உடற்பயிற்சியும், ஆரோக்கியமான சூழலுமே மேற்சொன்ன பாதிப்பில் இருந்து தொப்பை பிரச்சினை கொண்டோர்களை காத்து விடக்கூடும்.

Related posts

உடல் நிறையைக் குறைக்க வேண்டுமெனில் எப்போது பகல் உணவை உட்கொள்ள வேண்டும் தெரியுமா?

sangika sangika

தொப்பை ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?….

sangika sangika

2-3 மணி நேரத்தில் கெட்டித் தயிர் செய்ய ஒரு சுலபமான வழி.

admin

Leave a Comment