ஆலோசனைகள்

இரவு பணிக்கு செல்பவர்கள் கட்டாயம் இத செய்யுங்கள்!…

இன்றைய காலக்கட்டத்தில் இரவு நேர பணிக்கு செல்வது என்பது சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. பணிக்கு செல்பவர்களில் பாதிக்கு பாதி பேர் இரவு பணிக்கு செல்பவர்களாக உள்ளனர். இரவு பணிக்கு செல்வது அவர்களுக்கு பல ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். குறிப்பாக எடைகளில் ஏற்ற இறக்கங்கள், சரும பிரச்சினைகள், இதய கோளாறுகள் போன்று பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆனால் இப்போது இருக்கும் சூழலில் கிடைத்த வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையிலேயே பெரும்பாலான இளைஞர்கள் உள்ளனர். இந்த சூழ்நிலையில் இந்த பிரச்சினைகளை சமாளிக்க நாம் ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்ற வேண்டியது அவசியம். இந்த பதிவில் இரவு பணிக்கு செல்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஆயுர்வேத ஆரோக்கிய குறிப்புகள் என்ன என்பதை பார்க்கலாம்.

இரவு உணவுடன் உங்கள் தினத்தை தொடங்குங்கள்

பொதுவாக மக்கள் அவர்களின் தினத்தை காலை உணவுடன் தொடங்குவார்கள். ஆனால் இரவு பணிக்கு செல்பவர்கள் தங்களுடைய தினத்தை இரவு உணவிலிருந்து தொடங்க வேண்டும். எனவே நீங்கள் இரவு பணிக்கு செல்லும்போது முடிந்தளவு 7 முதல் மணிக்குள் உங்கள் இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும்.

வேலைநேரத்தை கணக்கில் கொண்டு இரவு உணவை ஒருபோதும் நள்ளிரவிற்கு தள்ளிப்போடாதீர்கள். அதேபோல 4 மணி தொடங்கி நள்ளிரவு 1 மணிக்கு வேலை முடிப்பவராக இருந்தால் உங்கள் உணவை இரவு 8 மணிக்கு சாப்பிட்டுவிடுங்கள்.

குறைவான இரவு உணவு சாப்பிடுங்கள்

பொதுவாகவே அனைவருக்கும் இரவு உணவு சாப்பிட்டவுடன் தூக்கம் வரும். இதுபோன்ற சூழ்நிலையில் குறைவான இரவு உணவை சாப்பிடுவது அவசியம், குறிப்பாக புரோட்டின் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடவேண்டும். புரோட்டின் மற்றும் நார்ச்சத்துக்கள் நீங்கள் நீண்ட நேரம் பசியில்லாமல் இருக்கவும் தூங்காமல் இருக்கவும் உதவும்.

ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுங்கள்

இரவு நேரங்களில் விழித்திருப்பது உங்கள் சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தும். இதற்கு நெய் ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். எனவே வேலைக்கு செல்லும் முன் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவது உங்கள் சருமம் வறட்சியடைவதில் இருந்து காப்பாற்றும். இது சருமத்தின் ஈரப்பதத்தை சமநிலைபடுத்த உதவும்.

எண்ணெய் உணவுகளை தவிர்க்கவும்

எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை உண்பது உங்களை கடினமாக உணரச்செய்வதோடு மட்டுமல்லாமல் எடை அதிகரிப்பிற்கும் காரணமாக இருக்கும். இரவு நேரத்தில் நமது செரிமான மண்டலத்தின் செயல்பாடுகள் குறைவாக இருப்பதால் இதுபோன்ற கடினமான உணவுகள் செரிமானம் அடையாமல் இருக்கும். இதுபோன்றஉணவுகளை சாப்பிடுவது உடலில் அமிலத்தன்மையை அதிகரிப்பதுடன், நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

தானியங்கள் சாப்பிடுங்கள்

இரவு நேரத்தில் விழித்திருக்கும்போது அதிகமாக பசியெடுப்பது சகஜம்தான். அதுபோன்ற சமயங்களில் நம் கண்கள் முதலில் தேடுவது நொறுக்கு தீனிகளைத்தான். இதுதான் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு. இரவு நேரத்தில் பசியெடுக்கும்போது சுண்டல், வேர்க்கடலை, பாதாம் போன்ற பொருட்களை சாப்பிடவேண்டுமே தவிர சமோசா, பர்கர் போன்ற உணவுகளை சாப்பிடக்கூடாது. இது உங்கள் எடையை பராமரிக்க உதவுவது மட்டுமில்லாமல் நீங்கள் சாப்பிடும் உணவின் அளவையும் குறைக்கிறது.

அதிக காஃபினை தவிர்க்கவும்

இரவு நேரத்தில் சுறுசுறுப்பாகவும், கவனம் குறையாமல் இருக்கவும் இருக்க அதிகளவு காபி மற்றும் டீ குடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல. நீங்கள் தூக்கம் வருவது போல உணர்ந்தாலோ அல்லது வேலையில் கவனம் குறைந்தாலோ உங்கள் உடலில் நீரின் அளவு குறையாமல் இருக்கமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் தண்ணீரோ அல்லது பழச்சாறை குடிக்க வேண்டும்.

 

Related posts

குழந்தைக்கு விரல் சூப்பும் பழக்கம் வர காரணம் – தடுக்கும் வழிகள்

admin

உணவில் நச்சு இருந்தால் வயிற்றுப்போக்கும், வாந்தியும் மட்டுமே ஏற்படும் என எண்ண வேண்டாம்….

sangika sangika

வாக்குவம் க்ளீனருக்கு `வெல்கம்’…டஸ்ட் அலர்ஜிக்கு `டாட்டா’! ஷாப்பிங் போகலாமா..?

admin

Leave a Comment