ஆயுர்வேத மருத்துவம் இயற்கை மருத்துவம் மருத்துவ கட்டுரைகள்

கண்கள் சிவத்து போவதற்கான சில பொதுவான அறிகுறிகள்!…

கண்களில் உள்ள வெள்ளைப் பகுதியில் உள்ள திசுக்களில் உண்டாகும் வீக்கம் அல்லது சிவப்பு நிறம் கண்களை மொத்தமாக சிவப்பாக மாற்றும். இத்தகைய சேதமடைந்த திசு அடுக்குகள் உடலில் உள்ள கிருமி, பாக்டீரியா, நச்சுப் பொருட்கள், ஒவ்வாமை உண்டாக்கும் பொருட்கள், மற்றும் எரிச்சல் உண்டாக்கும் பொருட்கள் ஆகியவற்றுடன் இணைந்து பல வியாதிகளை தோற்றுவிக்கிறது.

பொதுவாக குழந்தைகள் மற்றும் பெரியவர்களும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக கண்கள் சிவந்து போவதற்கு தொற்று பாதிப்பு மற்றும் தொற்று அல்லாத பாதிப்பு என்று இரண்டு வகையான காரணங்கள் உண்டு.

அறிகுறிகள்

கண்கள் சிவத்து போவதற்கான சில பொதுவான அறிகுறிகள் உள்ளன. அவை இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. கண்களில் மிகுந்த அரிப்புடன் கூடிய எரிச்சல் மற்றும் அசௌகரியம் உணரப்படும்.

2. கண்களின் உட்பகுதியில் உள்ள சவ்வுகளில் உள்ள திசு அடுக்குகளில் வீக்கம் ஏற்படலாம்.

3. கண்களில் இருந்து அதிக கண்ணீர் வெளியேறலாம்.

4. கண் இமை மற்றும் ரப்பைகளில் ஏடுகள் படியலாம்

5. கண்களில் பஸ் உண்டாகலாம்.

6. கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களுக்கு லென்ஸ் சரியான இடத்தில் கண்களில் பொருந்தாமல் ஒரு வித அசௌகரியம் ஏற்படலாம்.

7. கண்களின் வெள்ளைப் பகுதி சிவப்பு நிறத்தில் அல்லது பிங்க் நிறத்தில் காணப்படலாம்.

வகைகள்

1. பக்டீரியா காரணமாக கண்கள் சிவப்பது : பல நேரங்களில் கண்களில் இருந்து பஸ் வெளியேறும். சில நேரங்களில் காதுகளில் தொற்று பாதிப்பு உண்டாகலாம்.

2. ஹைப்பர் சென்சிடிவ் பிங்க் கண்கள்: பொதுவாக இது இரண்டு கண்களிலும் ஏற்படலாம். கண்களில் வீக்கம், நீர் வடிவது, மற்றும் சிறிய அரிப்பு போன்றவை உண்டாகலாம்.

3. எரிச்சலூட்டும் பிங்க் கண்கள் : கண்களில் இருந்து தொடர்ச்சியாக கண்ணீர் வெளியேறுவது மற்றும் பஸ் வெளியேறுவது இதன் முக்கிய அறிகுறியாகும்.

4. வைரஸ் காரணமாக கண்கள் சிவப்பது:

சளி, காய்ச்சல் காரணமாக சுவாச தொற்றினால் உண்டாகலாம். முதலில் ஒரு கண்ணில் இந்த பாதிப்பு ஏற்பட்டு பின்னர் இரண்டாவது கண்ணிலும் இது பரவக் கூடும். பஸ் வெளியேற்றம் இருக்காது ஆனால், கண்களில் இருந்து நீர் வடிந்து கொண்டே இருக்கும்.

எப்படி பரவுகிறது?

கண்கள் சிவந்து போவதற்கான காரணம் பல்வேறு பக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் ஆகும். வைரஸ் மற்றும் பக்டீரியா ஆகிய இரண்டும் எளிதில் பரவக் கூடியதாகும். ஒரு மனிதரிடம் இருந்து மற்றவரிடம் பல வழிகளில் இந்த தொற்று பரவ வாய்ப்புகள் இருக்கிறது. இருமல் மூலம் , தொடுதல் மூலம், கண்கள் பாதிப்பு உள்ளவர்கள் பயன்படுத்திய பொருளை மற்றவர் பயன்படுத்துவதன் மூலம், மற்றும் அவர்களிடம் நேரடி தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் இந்த கிருமிகள் பரவுகிறது. கை குலுக்குவது, கட்டிப்பிடிப்பது, தொடுவது போன்றவை மூலமாகவும் இந்த தொற்று பரவ அதிக வாய்ப்பிருக்கிறது.

நோய் கண்டறிதல்

ஹைப்பர் சென்சிடிவ் பிங்க் ஐ என்று கூறப்படும் சிவந்த கண்களும் பொதுவாக கண்கள் சிவந்து போவதற்கான அறிகுறிகளைக் கொண்டது ஆகும். ஆனாலும் அபாயகரமான மற்றும் தீங்கு விளைவிக்கும் உணர்வுத்திறனுடன் நேரடி தொடர்பு கொண்டது இந்த வகை பாதிப்பு. சில நேரம் தும்மல் மற்றும் மூக்கடைப்பும் இந்த வகை பாதிப்பில் இணைந்து கொள்ளலாம். மேலும் ஒவ்வாமை பாதிப்பும் உண்டாகலாம். மகரந்தம் அதிகமாக இருக்கும் வசந்த காலங்களில் இந்த ஹைப்பர் சென்சிடிவ் பிங்க் ஐ பாதிப்பு அதிகமாக இருக்கும். நாய் மற்றும் பூனையிடம் அதிக தொடர்பில் இருப்பதால் கூட இந்த பாதிப்பு உண்டாகலாம். பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் ஹைப்பர் சென்சிடிவ் பிங்க் ஐ க்கு எந்த ஒரு மருத்துவ தலையீடும் அவசியமில்லை.

எரிச்சலூட்டும் கூறுகளை உறிஞ்சுவது

தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களுடன் அதிக தொடர்பு கொள்வதால் குறிப்பாக காற்று மாசு போன்றவற்றால் கண்கள் சிவந்து மேலும் எரிச்சலடையலாம் . இந்த பாதிப்பு அடுத்த 12 மணி முதல் 36 மணி நேரத்தில் சரியாகி விடும். கண்கள் எரிச்சலடையக் காரணமாக இருக்கும் ரசாயனம் கண்களில் இருந்து நீங்குவதற்காக குறைந்தது 10 நிமிடம் தொடர்ச்சியாக நோய் தொற்றற்ற திரவம் கொண்டு கழுவ வேண்டும். ஒட்டுமொத்த கருவிழியையும் சுழற்றி கழுவ வேண்டும்.

மருத்துவ ஆலோசனை பெறுங்கள்

கண்கள் சிவந்து போவதை நீங்கள் அறிந்தவுடன், மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். பக்டீரியா காரணமாக கண்கள் சிவந்து போவது அல்லது வைரஸ் மூலம் கண்கள் சிவந்து போவது ஆகியவற்றிற்கு வெவ்வேறு மருத்துவ தீர்வுகள் உண்டு.

பரிசோதனை

மருத்துவரின் பரிந்துரையின்பேரில் உங்கள் கண்கள் சிவந்து போவதற்கான பக்டீரியா தாக்குதலை கண்டறிவதற்கான பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். பால்வினை தொற்று காரணமாக கண்கள் சிவந்து போவதையும் பரிசோதனை மூலம் அறிந்து கொள்ள முடியும். ஒவ்வாமையுடன் இணைந்த பாதிப்புகளால் கண்கள் சிவந்து போவதாக மருத்துவர்கள் தீர்மானித்தால், ஒவ்வாமை குறித்த பரிசோதனை மூலம் ஒவ்வாமைக்கான காரணத்தை அறிந்து கொள்ள முடியும். உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்ததில் உள்ள திசுக்களில் உண்டான அழற்சி தொடர்பாக உண்டான நோய் அல்லது கட்டியை மருத்துவர்கள் கண்டறிந்தால் அந்த பாதிப்பை உண்டாக்கும் கிருமி மற்றும் பக்டீரியாவைப் போக்க பயோப்சி முறையை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த முறையில் கண்களில் உள்ள திசுக்களில் ஒரு சிறிய அளவை அகற்றி மைக்ரோஸ்கோப் பரிசோதனைக்காக எடுத்து பரிசோதிக்கின்றனர்.

வீட்டுத் தீர்வுகள்

உப்பு நீர் கொண்டு கண்களைக் கழுவுதல் உப்பு கிருமிநாசினி தன்மைக் கொண்ட ஒரு பொருள். இது கண்கள் சிவந்து போவதைத் தடுக்க சிறந்த முறையில் உதவுகிறது. இந்த தீர்வை தயாரிக்க உங்களுக்கு தேவை தண்ணீர் மற்றும் உப்பு மட்டுமே. ஒரு கப் சுத்தீகரிக்கப்பட்ட நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக கொதிக்க வைத்து, அதில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த உப்பு கொதிக்கும் நீரில் நன்றாக கரையட்டும். அந்த நீரை ஆற விடுங்கள். பின்பு இந்த நீரை பாதிக்கப்பட்ட உங்கள் கண்களில் இரண்டு சொட்டு விட்டுக் கொள்ளுங்கள். ஒரு நாளில் பல முறை இதனை செய்து வருவதால் கண்கள் சிவந்து போவது குறையத் தொடங்கும்.

உருளைக்கிழங்கு

கண்கள் சிவந்து போவதைத் தடுக்க ஒரு மிகச் சிறந்த மற்றும் எளிய வழி உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கை சிப்ஸ் , பிரெஞ்ச் பிரைஸ் என்று பலவிதமான சுவைகளில் சுவைத்து மகிழ்ந்திருக்கலாம். ஆனால் அது கண்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் கண்கள் சிவந்து போவதையும் தடுக்க வல்லது என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை மெல்லிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதனை உங்கள் கண்களின் மேல் வைத்துக் கொள்ளுங்கள். 15-20 நிமிடம் அப்படியே இருக்கட்டும். பின்பு அதனை எடுத்து விடுங்கள். ஒரு நாளில் பல முறை இதனை முயற்சித்துக் கொண்டே இருங்கள்.

Related posts

கரும்புள்ளிகள் மறைய சில டிப்ஸ்

admin

பல நோய்களுக்கு மருந்தாகும் ஆயுள்வேத மூலிகை கோவக்காய்….

sangika sangika

பாகற்காய் பயன்பாடுகள்

admin

Leave a Comment