வீட்டுக்குறிப்புக்கள்

சத்து நிறைந்த லிச்சி கார்ன் வெள்ளரி சாலட்!…

தேவையானப்பொருட்கள்:

லிச்சி பழம் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – 6,
ஸ்வீட் கார்ன் (வேகவைத்தது) – கால் கப்,
வெள்ளரித் துண்டுகள் – ஒரு கப்,
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்,
தேன் – ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சம்பழம் – ஒன்று,
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,
உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

லிச்சி பழத்தை துண்டுகளாக நறுக்கவும். வேகவைத்த கார்ன் முத்துக்கள், லிச்சி பழத் துண்டுகள், நறுக்கிய வெள்ளரித் துண்டு களை ஒரு பாத்திரத்தில் போடவும். அதனுடன் சர்க்கரை, உப்பு, தேன், மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து, அதையும் ஊற்றிக் கலக்கவும்.

குறிப்பு: லிச்சி பழத்துக்குப் பதில், நுங்குத் துண்டுகள் சேர்த்தும் செய்யலாம்.

Related posts

இதனால் அல்சைமர் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாம் அவதானமாக இருங்கள்……

sangika sangika

நம்முடைய சமையலறையில், பலவிதங்களில் சமைப்பதால் எண்ணைப் பிசுக்குகள் கண்டிப்பாக ஏற்படும்.

admin

இருமலைப் போக்குவதற்கான இலகுவான 7 வழிகள்….

sangika sangika

Leave a Comment