உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் தென்படும் அறிகுறிகள்!…

உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு அறிகுறிகள் பொதுவானதாக இருக்கும். அந்த அறிகுறிகளை சாதாரணமாக விட்டுவிட்டால், பின் தீவிர விளைவை சந்திக்க வேண்டியிருக்கும். உடலில் வரும் பிரச்சனைகளுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்து வந்தால், அதன் தீவிரமடைவதைத் தடுக்கலாம்.

இங்கு ஒருவரது உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் தென்படும் அறிகுறிகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

நகம் உடைதல்

நகம் உடைதல் என்பது பல்வேறு பிரச்சனைகளுக்கான அறிகுறியாகும். அதில் இரத்த சோகைக்கும் ஒன்று. எனவே உங்கள் நகம் அடிக்கடி எளிதில் உடைந்து கொண்டே இருந்தால், இரத்த சோகை உள்ளதா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

வெளிரிய தோல்

உங்கள் தோல் வெளுத்து போய், சற்று வீக்கத்துடன் காணப்பட்டால், உங்கள் உடலில் இரத்தத்தின் அளவு மிகவும் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

ஹீமோகுளோன் அளவு குறைவு

இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சாதாரண அளவை விட குறைவாக இருந்தால், உங்கள் உடலில் இரத்தம் மிகவும் குறைவாக உள்ளது என்றும், உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் அர்த்தம்.

வயிற்று அல்சர்

வயிற்று அல்சரால் அவஸ்தைப்பட்டு வந்தால், அப்போது உடலினுள் அதிகப்படியான இரத்தக்கசிவு ஏற்பட்டு, அதன் காரணமாக இரத்த சோகை வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

படபடப்பு

நீங்கள் அடிக்கடி படபடப்பை உணர்ந்தால், உங்கள் உடலில் இரத்தம் குறைவாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இரத்தம் குறைவாக இருப்பதால், இதயத்திற்கு போதிய இரத்தம் கிடைக்காமல் அழுத்தத்திற்குட்பட்டு, அடிக்கடி படபடப்பை உண்டாக்குகிறது.

மார்பு வலி

உங்கள் அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டால், இதயத்தில் மட்டும் தான் பிரச்சனை என்று நினைக்க வேண்டாம். உடலில் இரத்தத்தின் அளவு குறைவாக இருப்பதால், இதயம் சற்று கடினமாகவும் அதிகமாகவும் வேலை செய்ய வேண்டியிருந்து, அதனாலும் நெஞ்சு வலியை உணரக்கூடும்.

குறிப்பு

கர்ப்ப காலத்தின் ஆரம்ப காலத்தில் இரத்த சோகை வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆகவே கர்ப்பிணிகள் சற்று கவனமாக இருக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *