சுவையான புரோட்டீன் சுண்டல் அனைவருக்கும் உகந்தது!…

தேவையானப்பொருட்கள்:

முளைகட்டிய பயறு, முளைகட்டிய கொண்டைக்கடலை, முளைக்கட்டிய காராமணி, முளைகட்டிய கொள்ளு – தலா 100 கிராம்,

இனிப்பு சோளம் – ஒரு கப்,
உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 1,
எண்ணெய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை:

எல்லாப் பயறு வகைகளையும் ஒன்றாகச் சேர்த்து, தேவையான உப்பு கலந்து, குக்கரில் ஒரு விசில் விட்டு இறக்கி, தண்ணீரை வடிக்கவும். எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய் வற்றல் கிள்ளிப்போட்டு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு:

அதிகப் புரதம், கால்சியம், நார்ச்சத்து அடங்கிய இந்த சுண்டலை வாரம் இருமுறை சாப்பிடலாம். வடிகட்டிய சுண்டல் தண்ணீரை வீணாக்காமல் ரசம் செய்யும்போது சேர்த்துவிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *