மிளகின் மருத்துவ குணங்கள் குறித்து பார்ப்போம்!…

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என்பது சித்தர்களின் வாக்கு. இதில், `மிளகு’, `வால் மிளகு’ என இரு வகைகள் உள்ளன. நம் அன்றாடச் சமையலில் முக்கியப் பங்கு வகிக்கும் மிளகின் மருத்துவ குணங்கள் குறித்து பார்ப்போம்.

*திரிகடுகு சூரணத்தில் சுக்கு, திப்பிலியுடன் மிளகு சேர்க்கப்படும். இது நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனை அதிகரிக்கும்.

*பசும்பாலுடன் 10 பூண்டுப் பற்களைச் சேர்த்துக் கொதிக்க வைத்து மிளகுத்தூள், மஞ்சள்தூள், பனங்கற்கண்டு சேர்த்துக் கடைந்து குடித்தால் நெஞ்சுச்சளி விலகும்.

*மிளகைப் பொடியாக்கி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் இருமல் நிற்கும். 10 துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, நீர் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடித்தால் கோழைக்கட்டு நீங்கும்.

*10 மிளகை எண்ணெய் ஊற்றாத வாணலியில் போட்டு வறுக்க வேண்டும். சூடு ஆறியதும், ஒரு டம்ளர் நீர்விட்டுக் கொதிக்கவைத்து வடிகட்ட வேண்டும். அதைக் காலை, மாலை, இரவு என அருந்தி வந்தால் காய்ச்சல் குணமாகும்.

*சுக்குடன் மிளகு சேர்த்துப் பொடியாக்கி, கருப்பட்டி கலந்து சாப்பிட்டால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும்.

*பல்வலி, ஈறுவலி, சொத்தைப்பல் உள்ளிட்ட பல் நோய்களுக்கு மிளகுடன் கல் உப்பு சேர்த்துப் பொடியாக்கி, பல் துலக்கினால் நிவாரணம் கிடைக்கும்.

*ஜாதிக்காயுடன் மிளகு சேர்த்து அரைத்து முகப் பருக்களின் மீது பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் அவை உலர்ந்து உதிர்ந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *