இதய நோயை கட்டுப்படுத்த கர்க்யூமின் என்ற வேதிப்பொருள்!…

மருத்துவத்தில் மஞ்சள் மிக பெரிய இடத்தைப் பிடித்துள்ளது. அதன்
அடிவேர் பகுதியில் கிடைக்ககூடிய கர்க்யூமின் என்ற வேதிப்பொருள் இதய நோய்களுக்கு தீர்வு காண உதவுகிறது என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இதய நோய் உள்ள நபர்களுக்கு இதயத்தின் இடது பகுதி சரிவர வேலை செய்யாது. அப்படி இருக்கும் பட்சத்தில் உடலிலுள்ள தசை இயங்குததிலும் சற்றுத் தொய்வு ஏற்ப்படும்.

இந்தப் பிரச்னைகளுக்கு கர்க்யூமின் அதிகம் உள்ள மஞ்சளை பயன்படுத்துவதன் மூலம் இதய நோய்களை சரிசெய்ய உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

கர்க்யூமின் நம் உடலில் ஆண்டி-ஆக்ஸிடன்டை தக்கவைக்க உதவுகிறது. இதனால் இதய நோய் மற்றும் அதனால் உன்டாகும் உடல் தசை இயக்கத்தின் தொய்வை கட்டுப்படுத்தக் கூடிய என்ஆர்எஃ2 (Nrf2) புரோட்டின் அதிகம் சுரக்கிறது.

இதயக் கோளாறு உள்ள நபர்களுக்கு சிகிச்சைக்கு பதில் தொடர்ந்து 12 வாரங்கள் கர்க்யூமின் பயன்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு உடலில் என்ஆர்எஃ2 (Nrf2) புரோட்டின் அளவு சீராக இருந்ததாகவும், அதனால் இதயக் கோளாறு பிரச்னையை கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

கர்க்யூமின் மனிதர்களுக்கு மட்டுமின்றி, விலங்குகளுக்கு ஏற்படும் இதய நோயையும் கட்டுப்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *