நீரைவிடச் சிறந்த மருந்து வேறொன்று இல்லை…

உணவு, நீரில் தொடங்கி நாம் சுவாசிக்கும் காற்றுவரை எல்லாவற்றிலும் மாசு நிறைந்திருக்கிறது. நம் உடலுக்குள் செல்லும் மாசு, கழிவுகளோடு கலந்து வெளியேறிவிடும். அவற்றில் சில கழிவுகள் மட்டும் உடலுக்குள்ளேயே தங்கி நச்சாக மாறிவிடுகின்றன. அப்படி உடலில் தங்கும் நச்சுகளை இயற்கையாக வெளியேற்றும் வழிகள்…

Close-up pouring water into glass on a blue background

*அதிகம் பதப்படுத்திய, வறுத்த, பொரித்த, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளே உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். எனவே பழங்கள், காய்கறிகளை முடிந்தவரை பச்சையாக, ஃப்ரெஷ்ஷாக, நீரில் கழுவிச் சாப்பிடுங்கள்.

*உடலைச் சுத்தப்படுத்த, நீரைவிடச் சிறந்த மருந்து வேறொன்று இல்லை. ஒரு நாளில் அதிகபட்சம் இரண்டு முதல் மூன்று லிட்டர்வரை நீர் அருந்தலாம்.

*தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டியது அவசியம். உடற்பயிற்சியின்போது வெளியேறும் வியர்வை அனைத்தும், உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

*காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் வெந்நீர் பருகலாம். உடலுக்குள் தேங்கியிருக்கும் நச்சுகளை, கழிவோடு கழிவாக வெளியேற்ற அது உதவும். லெமன் டீ அல்லது கிரீன் டீ வகைகளை, இடைவேளையின்போது பருகலாம். உணவில் மிளகு, இஞ்சி, மஞ்சள் போன்றவற்றைச் சேர்ப்பதும் பலன் தரும்.

*வாரத்துக்கு ஒருமுறை ஏதாவது ஒரு நாளில், காய்கறி மற்றும் பழங்களை மட்டுமே முழுமையாகச் சாப்பிடும்படி அமைத்துக்கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *