இவற்றை மறந்தும் கூட இந்த நேரங்களில் உண்ணாதீர்கள்….

நம்மில் பலருக்கு இரவில் கண்டதையெல்லாம் சாப்பிட கூடிய பழக்கம் இருக்கிறது. இது ஒரு நாள் இரு நாள் இல்லாமல், பல வருடமாக தொடரும் பழக்கமாகவே மாறிவிட்டது. பொதுவாகவே இரவில் நாம் செய்கின்ற பல விஷயங்கள் தவறாகவே உள்ளது.

தூங்க போகும் முன் கட்டாயம் இவற்றையெல்லாம் சாப்பிட கூடாது..! மீறி சாப்பிட்டால் என்னவாக்கும்..?

இதனையெல்லாம் செய்வதால் பல்வேறு பிரச்சினைகள் வருவது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் நாம் சாப்பிட கூடிய உணவுகள் நம்மை மோசமான அளவில் பாதிக்குமாம்.

படுக்கைக்கு முன் நாம் சாப்பிட கூடிய எந்தெந்த உணவு பொருட்கள் நம்மை அபாயமான நிலைக்கு கொண்டு போகும் என்பதை இனி அறிந்து கொள்வோம்.

நிம்மதியை தேடும் இடம்..!

நாள் முழுக்க உழைத்த நாம், ஓய்வெடுக்கும் நேரம் தான் இந்த படுக்கை நேரம். பலர் தூக்கம் வராததால் அதிகம் அவதியும் படுகின்றனர். பலருக்கு இந்த பிரச்சினை பெரும்பாடாக உள்ளது. நீங்கள் இரவில் செய்கின்ற செயல்கள் கூட உங்களுக்கு இது போன்ற பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம்.

காரசார உணவுகள்

பொதுவாகவே காரசார உணவுகளை சாப்பிட கூடாது என சொல்வார்கள். இதற்கு காரணம் உங்களின் குடல் பகுதியில் இவை அதிக எரிச்சலை உண்டாக்கும் என்பதாலே.

எனவே, நீங்கள் படுக்கைக்கு முன்னர் காரசார உணவுகளை சாப்பிட்டால் நெஞ்செரிச்சல், அமைதியின்மை ஏற்படும். இதனால் உங்கள் தூக்கமும் கெட கூடிய வாய்ப்புகள் உள்ளதாம்.

சிக்கன்

பலருக்கு இரவில் சிக்கன் சாப்பிட கூடிய பழக்கம் அதிகமாகவே உள்ளது. இந்த பழக்கம் பலவித பாதிப்புகளை நமக்கு ஏற்படுத்தும்.

படுக்கைக்கு போகும் முன் சிக்கன் சாப்பிட்டால் 50 சதவீதம் உங்களின் செரிமானத்தை குறைத்து விடும். மேலும், மலச்சிக்கலையும் ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளதாம்.

சீஸ்

படுக்கை முன் சீஸ் சேர்த்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் இதனால் விளைவு கொஞ்சம் அதிகமே.

இவை உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தவும் அதிக வாய்ப்புகள் உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ப்ரோக்கோலி

இரவில் தூங்க போகும் முன்பு ஒரு சில காய்கறிகளை சாப்பிட கூடாது. அதில் இந்த ப்ரோகோலியும் ஒன்று. நீங்கள் இரவில் ப்ரோக்கோலியை சாப்பிடுவதால் வயிற்றுக்கு அசௌகரியம் ஏற்படுமாம். இதனால் செரிமான பிரச்சினைகள் உண்டாகும்.

காபி

பல ஐ. டி. நிறுவனங்களால் நைட் ஷிப்ட் வேலை செய்பவர்கள் இந்த தவறை செய்வார்கள். அதுவும் எக்கச்சக்க எண்ணிக்கையில் காபி குடிக்கும் பழக்கம் இவர்களுக்கு பொதுவாகவே இருக்கிறது.

இரவில் காபி குடிப்பது உடல் நலத்தை கெடுக்கும். இதற்கு மாறாக மூலிகை டீயை குடிப்பது சற்று சிறந்தது.

அவகேடோ

இந்த பழத்தில் சத்தான கொழுப்புகள் தான் அதிகம் நிறைந்துள்ளது. இருப்பினும் இவற்றை படுக்கைக்கு முன் சாப்பிடுவது நல்லது அல்ல. அஜீரண கோளாறுகளை தந்து உங்களின் தூக்கத்தை கெடுத்து விடும்.

சாக்லேட்

தூங்க போகும் முன் நாம் சாக்லேட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவற்றில் உள்ள காபின் மற்றும் தியோபிரேமின் உங்களது நரம்பு மண்டலத்தை தூண்டி தூக்கமின்மையை ஏற்படுத்தும். அத்துடன் உங்களின் இதய துடிப்பை இரவில் அதிகரிக்கவும் செய்யும்.

மது தூக்கத்திற்கு எதிரி..!

இரவில் தூங்குவதற்கு முன் மது குடித்து விட்டு தூங்கினால் உடலில் உள்ள பல உறுப்புகள் பாதிக்கப்படும். குறிப்பாக சிறுநீரகம், கல்லீரல் போன்றவை பாதிக்கப்படும். மேலும், இரவில் ஒயின் போன்ற பானங்களையும் அருந்த கூடாது.

நோ ஐஸ்..!

இரவில் ஐஸ் கிரீம் சாப்பிடுவது பலருக்கும் பிடித்தமான ஒன்றுதான். என்றாலும், இதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் சர்க்கரை அளவு உடலில் அதிகரிக்க கூடும். மேலும், வாயு தொல்லை, ஜீரண கோளாறுகள் வர தொடங்கும்.

மேற்சொன்ன உணவுகளையெல்லாம் படுக்கைக்கு போகும் முன் தவிர்த்தால், ஆரோக்கியமான உடல் நலத்துடன் இருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *