இதனை தடுக்க உங்கள் உடலை சீராக பராமரிப்பதும், ஆரோக்கியமான உணவுமுறையும் அவசியம்…..

நமது உடலின் சீரான இயக்கத்திற்கு உதவும் மிகவும் முக்கியமான உறுப்பு என்றால் அது சிறுநீரகம்தான். ஏனெனில் சிறுநீரகம்தான் நம் உடலில் இருக்கும் கழிவுகளையும்,நச்சுப்பொருட்களையும் வெளியேற்றி நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

சிறுநீரகம்தான் நம் உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் அளவையும் சீராக்குகிறது. இதில் ஏற்படும் சிறுபாதிப்பும் உங்களுடைய ஒட்டுமொத்த உடல் இயக்கத்தையும் பாதிக்கும்.

சிறிய பாதிப்பே உங்களின் ஆரோக்கியத்தை பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்னும்போது சிறுநீரகத்தில் புற்றுநோய் வந்தால் உங்கள் நிலை என்னவாகும் என்பதை யோசித்து பாருங்கள்.

நினைத்து பார்க்கவே பயங்கரமாக இருக்கும் இந்த நோய் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. அவற்றில் சில காரணங்களை நீங்கள் தவிர்க்க இயலாது ஆனால் பல காரணங்களை உங்களால் தடுக்க இயலும்.

இந்த பதிவில் சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள், அவை ஏற்பட காரணங்கள் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் என்னவென்பதை பார்க்கலாம்.

பசியின்மை

பசியின்மை என்பது பல நோய்களின் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது. இதனை சாதாரணமாக நினைக்காமல் உடனடியாக இந்த அறிகுறி தெரிந்தவுடன் மருத்துவரை அணுகி சோதனை செய்துகொள்வது நல்லது.

எடை இழப்பு

எடை குறைவது என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியான ஒரு விஷயம்தான். நீங்கள் செய்த முயற்சியின் விளைவால் எடை குறைந்தால் அது மகிழ்ச்சிக்குரியது, ஆனால் எந்த காரணமும் இன்றி எடை குறைந்தால் அது நிச்சயம் பிரச்சினைக்கான அறிகுறிதான்.

சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 28 சதவீதத்தினருக்கு இந்த பிரச்சினை உள்ளது. இதற்கு காரணம் புற்றுநோய் செல்கள் எளிதில் மற்ற உறுப்புகளுக்கு பரவுவதுதான்.

சிறுநீரில் இரத்தம்

சிறுநீரில் இரத்தம் கலந்து வருவது சிறுநீரக புற்றுநோய்க்கான மிகவும் முக்கியமான அறிகுறியாகும். கிட்டத்தட்ட சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 60 சதவீதத்தினருக்கு இந்த அறிகுறி இருந்தது கண்டறிப்பட்டுள்ளது.

சிறிதளவு இரத்தக்கசிவு இருந்தாலும் சிறுநீரின் நிறத்தில் மாற்றம் தெரியும். எனவே சிறுநீர் நிறத்தில் மாற்றம் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

இவை மட்டுமின்றி முதுகுவலி, அதீத சோர்வு, அடிவயிற்று வலி போன்றவையும் இதன் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது. சிறுநீரக புற்றுநோய் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. அவை என்னவென்று பார்க்கலாம்.

காரணங்கள்

சிறுநீரக புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் இதுவரை தெளிவாக கண்டறியப்படவில்லை. சிறுநீரகத்தை பாதிக்கும் நமது சின்ன சின்ன பழக்கங்கள் கூட சிறுநீரக புற்றுநோயை உண்டாக்கும்.

சிறுநீரக செல்களில் உள்ள மரபணுக்களில் பிறழ்வு ஏற்படும்போது இது தொடங்குவதாக மருத்துவர்கள் நம்புகிறார்கள். இதனால் செல்கள் வளர்ச்சியடைந்து முறையற்று பரவுகிறது.

இவை சிறுநீரகத்தையும் தாண்டி ஒரு வெளிப்புறத்தில் ஒரு கட்டியை உருவாக்குகிறது. இவை உடைந்து மற்ற பாகங்களுக்கும் பரவுகிறது. மேலும் இதனை தூண்டும் சில காரணங்களும் உள்ளது.

வயது

வயது அதிகரிக்கும் போது அது பல பிரச்சினைகளை கூடவே கூட்டிக்கொண்டு வரும். வயது அதிகரித்தால் மறதி, முதுகு வலி, மூட்டு வலி போன்றவை மட்டுமின்றி சில மோசமான ஆரோக்கிய பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதில் ஒன்றுதான் சிறுநீரக புற்றுநோய். இதனை தடுக்க உங்கள் உடலை சீராக பராமரிப்பதும், ஆரோக்கியமான உணவுமுறையும் அவசியம்.

புகைபிடித்தல்

புகைபிடிப்பது பல பக்கவிளைவுகளை உண்டாக்கும் குடில் ஒன்றுதான் சிறுநீரக புற்றுநோய்.

புகைப்பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் மட்டும்தான் வரும் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம், ஆனால் உண்மையில் இது சிறுநீரக நோயை தூண்டுவதற்கான முக்கிய காரணமாக உள்ளது.

உடற்பருமன்

தனது வயதிற்கு ஏற்ற எடை இல்லாமல் அதிக எடையில் இருப்பவர்களுக்கு சிறுநீரக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏனெனில் வயதிற்கேற்ற எடை இல்லாதபோது அது உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தும். இதனால் சிறுநீரக புற்றுநோய் ஏற்படும்.

வேலை செய்யும் இடம்

சில ஆய்வுகளின் படி நீங்கள் பனி செய்யும் சூழ்நிலையையும், இடத்தையும் பொறுத்துக்கூட சிறுநீரக புற்றுநோய் ஏற்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக அதிகளவு காட்மியம் உள்ள இடம், சில களைக்கொல்லிகள் மற்றும் கரிம கரைப்பான்கள் இருக்கும் இடத்தில் வேலை செய்வது சிறுநீரக புற்றுநோயை உண்டாக்கலாம்.

சில மருந்துகள்

நீங்கள் உபயோகிக்கும் சில மருந்துகள் கூட உங்களுக்கு சிறுநீரக புற்றுநோயை உண்டாக்கும். ஃபெனாசெட்டின் இந்த மருந்து ஒரு பிரபலமான வலி நிவாரணியாகும்.

டையூரிடிக்ஸ் எனப்படும் இரத்த அழுத்தத்திற்காக பயன்படுத்தப்படும் நீர் மாத்திரைகளும் சிறுநீரக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

சிறுநீரக செயலிழப்பு சிகிச்சை

நாள்பட்ட சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிறுநீரக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் மிகஅதிகம். குறிப்பாக நச்சு பொருட்களை வெளியேற்ற டயாலிசிஸ் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களுக்கு வாய்ப்புகள் மிகவு அதிகம்.

பிறப்பு குறைபாடுகள்

மரபணுக்கள் வழியாக ஏற்படும் சில பிறப்பு குறைபாடுகளும் சிறுநீரக புற்றுநோய் ஏற்பட காரணமாக அமைகிறது. குறிப்பாக ஹிப்பல்-லிண்டாவ் நோய், பிர்ர்ட்-ஹாக்-டூபி நோய், திபிரசஸ் ஸ்க்லீரோசிஸ் காம்ப்ளக்ஸ் போன்ற மரபணு நோய்கள் உள்ளவர்கள் எளிதில் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள்.

பாலினம்

பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு சிறுநீரக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருமடங்கு அதிகமாகும். ஏனெனில் பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு புகைபிடிக்கும் பழக்கம் அதிகம்.

மேலும் அவர்கள் உபயோகிக்கும் பல பொருட்களில் இருக்கும் இரசாயனங்கள் ஆண்களுக்கு சிறுநீரக புற்றுநோய் ஏற்பட காரணமாய் அமைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *