என்னென்ன உணவுகள் தலைவலியை உண்டாக்குகின்றன?…

உணவு என்பது உடலை வளர்ப்பதற்கான விஷயம் மட்டுமல்ல. ஆரோக்கியத்தைக் காப்பதும்கூட. அதனால் நாம் உண்ணும் உணவுகள் எப்போதும் உடலுக்கு மருந்தாக இருக்க வேண்டுமே தவிர, அதுவே நமக்கு விஷமாக மாறிவிடக் கூடாது.

தலைவலி என்பது பல காரணஙங்களால் உண்டாகும். தலையில் நீர் கோர்த்தல், அலைச்சல், வெயில் தாக்கம், மன உளைச்சல் போன்ற பல காரணங்களால் தலைவலி உண்டாகும் என்று அறிந்திருக்கிறோம்.

ஆனால் சில உணவுகளைச் சாப்பிட்டாலும் கூட, தலைவலி உண்டாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.


என்னென்ன உணவுகள் தலைவலியை உண்டாக்குகின்றன?

சீஸ்

பழைய மற்றும் பதப்படுத்தப்பட்ட சீஸ் உணவுகளைச் சாப்பிடும் போது தலைவலி உண்டாகிறது. சீஸில் உள்ள தைரோமின் அமினோ ஆசிட் தலைவலியை உண்டாக்குகிறது.

ரெட் ஒயின்

ஆல்கஹால் நிச்சயம் உடல் நலக் கோளாறை உண்டாக்கும். அதிலும் குறிப்பாக, ரெட் ஒயின் குடிக்கும் போது, உடனடியாக அது தலைவலியை உண்டாக்கிவிடுகிறது.

வேகவைக்காத இறைச்சி

நன்கு வேகவைக்கப்படாத ஆட்டிறைச்சி மற்றும் சில மீன் உணவுகளில் உள்ள நைட்ரேட், நைட்ரைடுகள் தலைவலியைத் தூண்டிவிடுகின்றன.

கொழுப்பு உணவுகள்

மாமிசத்தோடு சீஸ் சேர்த்து சமைக்கப்பட்ட உணவுகள், சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றாலும் தலைவலி உண்டாகிறது.

காபி

தலைவலியை உண்டாக்குவதில் காபி முக்கிய இடத்தைப் பெறுகிறது. காபி, சோடா மற்றும் பிளாக் டீ ஆகியவை அனைத்துமே தலைவலியை உண்டாக்குகின்றன என்று கூறப்படுகிறது. ஆனால் நேஷனல் ஹெட்டேக் பவுண்டேஷன், காபி குடிப்பதால் தலைவலி உண்டாகும் என்பதை மறுக்கிறது.

தலைவலி உண்டாவதற்கான காரணங்களுள் அதுவும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் காபியே முழுமுதற் காரணம் கிடையாது எனக் கூறுகிறது. அதோடு, ஒரு நாளைக்கு 200 மில்லி கிராமுக்கும் குறைவாக காபியை எடுத்துக் கொண்டால் அவை உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருகின்றன என்றும் அந்நிறுவனம் குறிப்பிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *