இயற்கை மருத்துவம் பெண்கள் மருத்துவம்

குழந்தை இல்லாமல் கஷ்டப்படும் எண்ணற்ற பெண்கள் கருவுற்றவளாவதற்கு…..

குழந்தை இல்லாமல் கஷ்டப்படும் எண்ணற்ற பெண்கள், பலவித நவீன மருத்துவ முறைகளைச் செய்து, கருப்பை பாதிக்கப்பட்டு, குழந்தையும் இல்லாமல், உடல் பருமன், மாதவிடாய் சரி வர ஏற்படாமல் துன்புறும் நிலை இன்று மிக அதிக அளவில் காணப்படுகிறது. ஒரு பெண் கருவுற்றவளாவதற்கு நம் பாரம்பரிய இந்திய மருத்துவத்தில் ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளனவா?
தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் (1798-1832) மேல்நாட்டு வைத்திய நூல்களையும், மருத்துவர்களையும் கூட வைத்துக் கொண்டு, அதற்கென ஆஸ்பத்திரிகளையும் நிறுவி, பல ஆராய்ச்சிகளைச் செய்து, சுமார் 4000 முறைகளைத் தேர்ந்தெடுத்து 18 சுவடிகளில் எழுதி வைத்திருக்கிறார். அவற்றைத் தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நிர்வாகத்தார் புத்தக வடிவில் கொண்டுவர பெரும் முயற்சிகளைச் செய்திருக்கிறார்கள். அதில் இரண்டாவது வெளியீட்டில் – மலட்டு நோய்க்கான மருந்து வகைகளும் காணப்படுகின்றன. அவற்றிலிருந்து திரட்டிய சில சுவாரஸ்யமான தகவல்கள்-

1. வெல்லம் 1 கட்டி
2. குப்பைமேனிச் சாறு 150 மி.லி.
3. சுத்தமான பொரித்த பெருங்காயம்  3 கிராம்

இவற்றை ஒன்று கலந்து ஒரு புதுச்சட்டியிலிட்டு, ஒரு வெள்ளைத் துணியினால் மூடி, இளம் வெயிலில் வைத்து, மாதவிடாய் காலத்தில் மூன்று நாளும் சாப்பிட்டு வர, கருப்பை மலட்டுத்தன்மை நீங்கும். மூன்று முறை செய்தால் பெண் கர்ப்பமடைவாள்.

பருத்திக் கொட்டையை ஒரு கொட்டைப்பாக்கு அளவெடுத்து அரைத்து, அதை ஒரு கோழி முட்டை வெள்ளைக் கருவில் குழப்பிச் சாப்பிட, கர்ப்பம் உண்டாகாமல் தடுக்கும் நீர்க்கட்டிகள் உடையும். அடுத்த மாதம் செப்பு நெருஞ்சியின் வேரை பால் விட்டரைத்துச் சாப்பிடக் குழந்தை உண்டாகும். தாயாருக்கும் செüக்கியமுண்டாகும்.

ஆடாதோடை இலை, சிறுகுறிஞ்சி இலை, மலர்ந்த முருங்கைப்பூ இம் மூன்றையும் சிவந்த நிறமுள்ள பசுவின் பாலிலரைத்துக் குழப்பி, மூன்று நாள் சாப்பிட, பெண்ணுக்குக் கர்ப்பம் உண்டாகும்.

வெள்ளைப்பூண்டு, ஓமம், சிற்றரத்தை, சுக்கு, பெருங்காயம், மிளகு இவற்றை  சமமாக எடுத்து பேய்க்கொம்மட்டி (கும்மட்டி) சாறு விட்டுக் கலந்து நன்றாக அரைத்துச் சிறிது தாளித்து அப்படியே விழுங்கிவிட்டு கொம்மட்டி இலையை அரைத்து வயிற்றில் கட்ட மலட்டுத்தன்மை நீங்கும்.

எருக்கம் பழுப்பு, கழற்சிக்கொடி, ஆடாதோடை இலை,  பிரண்டை, சிறுபாகல், குறிஞ்சியிலை இவற்றை சமமான எடையளவில் எடுத்து நன்றாக இடித்துச் சாறு பிழிந்து அதனுடன் நல்ல புஷ்டியுள்ள சிவப்பு நிறப்பசுவின் பால் 150 மி.லி. சேர்த்துச் சாப்பிட, மலட்டுத் தன்மை நீங்கி, பெண்ணுக்கு கர்ப்பம் தரிக்கும்.

மேற்கண்ட இலைச் சாறு எல்லாம் சேர்த்து 50 மி.லி. எடுத்துக் கொள்ளவும்.

தேங்காயெண்ணெய் 100 மி.லி.
நல்லெண்ணெய்- 100 மி.லி.
ஆடாதோடைச் சாறு- 100 மி.லி.
வேப்பிலைச் சாறு- 150 மி.லி.

இவற்றையெல்லாம் ஒரு பாத்திரத்திலிட்டு அடுப்பின் மீதேற்றிப் பக்குவமாக எரித்து வடித்து இந்த எண்ணெய்யை 12 நாள் சாப்பிட்டு வர,  சாப்பிடும் பெண்ணுக்குப் பிள்ளையுண்டாகும்.

பத்தியம்: புளிப்பு, கசப்பு தவிர்க்கவும்.

பிரமியிலைச் சாறு 150 மிலி  எடுத்து சூரியக் கதிரிலும் சந்திரக் கதிரிலும் வைத்து, அதைப் பருகி வர பெண்ணுக்குக் கர்ப்பமுண்டாகும். அதனுடன் செüக்கியமும் உண்டாகும்.

துத்தி இலையை வாய் பேசாமல் கடவுளைத் தொழுது பறித்து, நெல்லைக் குத்தி அரிசி செய்து, அதனுடன் நன்றாக இடித்து வைத்துக் கொள்ளவும். இதை நல்லெண்ணெய்யில் குழைத்துச் சாப்பிட, ஆண் குழந்தையுண்டாகும், நெய்யில் குழைத்துச் சாப்பிட பெண் குழந்தையுன்டாகும்.

தீட்டான மூன்று நாட்களிலும் இரவு பட்டினியாயிருந்து மறுநாள் விடியற்காலையில் தாமரைப் பூவைப் பசும் பாலில் அரைத்து அம் மூன்று நாளும் பருகி வரக் குழந்தை உண்டாகும்.

இந்துப்பு, காசுக்கட்டி, பூவரசம்பட்டை இம் மூன்றையும் எடுத்து தண்ணீர்விட்டு நன்றாக அரைத்து தீட்டு முடிந்து தலை முழுகிய நாலாந்தினம் முதல், காலையும் மாலையும் நான்கு நாள் இம் மருந்தைச் சாப்பிட்டு வர கர்ப்பமுண்டாகும். இவை அனைத்தும் நவீன மருத்துவமுறைகளின் மூலம் கர்ப்பம் அடைவதற்காகச் செய்யும் முயற்சிகளுடன், செய்து கொள்ளக் கூடிய எளிய கை வைத்திய முறைகளாகும்.

தயாரித்து விற்பனையிலுள்ள பலசர்பிஸ் எனும் நெய் மருந்து, தான்வந்திரம் கஷாயம், சதாவரீகுலம், தாடிமாதிகிருதம் போன்ற மருந்துகளும் கர்ப்பம் தரிப்பதற்கு உதவிடக் கூடியவை.

Related posts

இரவில் ஊற வைத்த வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா?

admin

பீட்ரூட் 6 பயன்கள்

admin

உங்களுக்கும் கருப்பை நீர்க்கட்டிகள் இருக்க கூடும் கட்டாயம் இத படிங்க!…

sangika sangika

Leave a Comment