ஆயுர்வேத மருத்துவம் ஆலோசனைகள் இயற்கை மருத்துவம் சித்த மருத்துவம்

காய்ச்சலா இந்த நோயாக கூட இருக்கலாம்…..

* காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை எடுக்கலாமா?
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் வைரஸ் கிருமிகள் வரத்து அதிகரிக்கும். இதனால் பல்வேறு தொற்று நோய்கள் உருவாகும். இதற்கு மூலிகை கஞ்சி, ஊறல் குடிநீர், பானக்கம் கொடுத்து தடுக்கலாம். காய்ச்சல் தீவிரமடைந்தால் சித்த மருந்துகளில் காய்ச்சலை குணப்படுத்தலாம்.

* டெங்கு காய்ச்சலால் உடலில் என்ன பாதிப்பு ஏற்படும், அதற்கு தீர்வு என்ன?
டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் தலைவலி, கண்ணின் பின்னால் வலி, மூட்டு வலி, எலும்பு தசைகளை ஊடுருவும் வலி, சில நாட்களுக்கு பின் தோலில் சிவப்பு நிற தடிப்புகள், பல் ஈறு மற்றும் மூக்கில் ரத்தம் வடியும், வெள்ளை அணு, ரத்த தட்டுக்களின் அளவு குறையும். ரத்த பரிசோதனை மூலம் இதை கண்டறியலாம். இக் கால கட்டத்தில் தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
ஏடிஸ் வகை கொசுக்கள் கடிப்பதில் இருந்து தப்பிக்க உடலில் தேங்காய் எண்ணெய், கொசுவிரட்டி மருந்துகளை தடவவும். கழுத்து, கணுக்காலில் தான் அதிகளவில் இக்கொசு கடிக்கும். இந்த இடங்களில் தேங்காய் எண்ணெய்யில் கற்பூரம் கலந்து தடவினால் காய்ச்சலை தவிர்க்கலாம்.

* டெங்கு காய்ச்சலை விரட்டும் நிலவேம்பு கஷாயம் தயாரிப்பது எப்படி?
நிலவேம்பு, வெட்டிவேர், விளாமிச்சம் வேர், சந்தனம், பேய்புடல், கோரைக்கிழங்கு, சுக்கு, மிளகு, பற்படாகம் ஆகிய 9 மூலிகைகள் 10 கிராம் வரை எடுத்து 240 மில்லி நீரில் போட்டு கொதிக்க வைத்து, அதை 60 மில்லியாக சுண்ட வைக்கவும். பின் வடிகட்டி காலை, இரவு உணவுக்கு முன் 60 மில்லி வீதம் 5 நாட்கள் வரை குடிக்கவும். சிறுவர்கள் 30 மில்லி வரை குடிக்கலாம். கர்ப்பிணிகள், ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இக்கஷாயம் குடிப்பதை தவிர்க்கவும்.

* பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்ன, யாரை அதிகம் பாதிக்கும்?
எச் 1என்1 வைரஸ் கிருமியால் இக்காய்ச்சல் ஏற்படும். காய்ச்சல் வரும் முன் உடல்வலி, பசியின்மை, இருமல், தொண்டை வலி, தலைவலி, உடல் சோர்வு, மூக்கில் நீர்வடிதல், கண் எரிச்சல், வாந்தி, குமட்டல், வயிற்றுபோக்கு ஏற்படும்.
இருதயம், சர்க்கரை நோயாளிகள், நுரையீரல் பாதிப்பு உள்ளோர். கர்ப்பிணி, முதியவர்கள், குழந்தைகள் இந்நோய் தாக்கத்தால் உயிரிழக்க நேரிடும். நன்கு வேக வைக்காத அசைவம் சாப்பிடுதல், கைகளை சுத்தமாக கழுவாமல் இருத்தல், நோய் பாதிக்கப்பட்டவருடன் நெருக்கம் இருத்தல் போன்ற காரணத்தால் வைரஸ் கிருமி அதிகம் பரவும்.

* பன்றிக்காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்
வெளியில் சென்று வீட்டிற்கோ, அலுவலகத்திற்கோ வந்தவுடன் சோப்பு போட்டு கை, கால்களை நன்கு கழுவ வேண்டும். இருமல், தும்மல் வரும்போது துணிகளால் நன்கு வாய், மூக்கினை மூடவேண்டும்.
வீடு, அலுவலகங்களை சுற்றி காலி பிளாஸ்டிக் டப்பா, உரல்களில் தண்ணீர் தேங்காமல் பார்க்கவும். செல்ல பிராணிகளுடன் நெருக்கம் கொள்ளக்கூடாது. இவற்றை பின்பற்றினால் காய்ச்சல் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.

* டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு சித்த மருந்து எடுக்கலாமா
சமையலுக்கு பயன்படும் அன்னாசி பூவில் இருந்து எடுக்கப்பட்ட மருந்தே பன்றி காய்ச்சலால் ஏற்படும் கிருமிகளை கட்டுப் படுத்தும் முதன்மை மருந்து. இது போன்ற சித்த மருத்துவத்தை மருத்துவர்கள் ஆலோசனைபடி எடுத்து கொள்வதால், பன்றி காய்ச்சல் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். காய்ச்சல் ஏற்பட்டதும் சித்த மருத்துவரை ஆலோசனைப்படி நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர், திரிகடுகு சூரணம், வெட்டு மாரன், பாலசஞ்சீவி, சுவாசகுடோரி ஆகிய மாத்திரைகளை எடுக்கலாம்.

Related posts

தொட்டால் சிணுங்கியின் மருத்து குணங்கள்

admin

தூக்கத்தில் கஞ்சத்தனமா? காத்திருக்கும் ஆபத்து

admin

வெள்ளை அரிசிக்கு பதிலாக கருப்பு அரிசி சர்க்கரை நோயாளிகள் தினமும் சாப்பிடலாமா?

admin

Leave a Comment