ஆலோசனைகள் சமையல் குறிப்புகள்

உணவில் எள்ளை சேர்த்துக் கொண்டால் கொலஸ்ட்டிரால் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்….

தேவையான பொருட்கள் :

கருப்பு எள் – அரை கப்
துருவிய தேங்காய் – கால் கப்
காய்ந்த மிளகாய் – ஐந்து
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

எள்ளை சுத்தப்படுத்தி வெறும் வாணலியில் வெடிக்கும் வரை வறுக்கவும்.

பிறகு அதே வாணலியில் காய்ந்த மிளகாய் சேர்த்து துளி எண்ணெய் விட்டு வறுக்கவும்.

மிக்ஸியில் வறுத்து ஆறவைத்த எள், துருவிய தேங்காய், காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் புளி சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.

இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து சூடான சாதத்துடன் நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

உணவில் எள்ளை சேர்த்துக் கொண்டால் ரத்த அழுத்தம், கொலஸ்ட்டிரால் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.

Related posts

கல்லீரல் காப்போம்!

admin

நீங்கள் சைவ உணவை மட்டும் உண்பவர்களாக இருந்தால்…

sangika sangika

கோடையில் வரும் வியர்குருவை தடுக்கும் இயற்கை வழிகள்

admin

Leave a Comment