இயற்கை மருத்துவம்

இந்த ஜீஸ்களை பருகுவதன் மூலம் எந்த வகை நீரிழிவுகளையும் கட்டுப்படுத்தலாம்…..

இரத்த சர்க்கரை அளவை உடல் ஒழுங்குபடுத்த முடியாத ஒரு நிலை நீரிழிவாகும். இது ஒரு நாட்பட்ட நோயாக கருதப்படுகிறது. பாரம்பரியம், உடல் பருமன், மன அழுத்தம், மோசமான உணவுப் பழக்கம், மற்ற நோய்கள், அறுவை சிகிச்சை, மாத்திரை மருந்துகள் மற்றும் கிருமிகள் என்று இந்த நோய் உண்டாக பல்வேறு காரணிகள் உள்ளன.இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும் ஹார்மோன் இன்சுலின் ஆகும். இது கணையத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. உடல் போதுமான அளவு இன்சுலின் உற்பத்தியை செய்யாமல் இருக்கும்போது அல்லது அதன் உற்பத்தியை தடுக்கும்போது அல்லது இவை இரண்டு மாற்றங்களும் உடலில் உண்டாகும்போது ஒருவருக்கு நீரிழிவு ஏற்படுகிறது.

வகைகள் நீரிழிவு இரண்டு வகைப்படும். இரண்டு விதமான பாதிப்பிற்கும் வெவ்வேறு காரணிகள் மற்றும் அபாயங்கள் உள்ளன.

டைப் I நீரிழிவு 

இந்த வகை நீரிழிவு எந்த வயதில் உள்ளவர்களையும் பாதிக்கும். குறிப்பாக, குழந்தைகள், பதின் பருவத்தினர், இளம் வயதினர் ஆகியோரை பாதிக்கிறது. இந்த வகை பாதிப்பு உடலில் ஏற்படும்போது, உடலில் இன்சுலின் உற்பத்தி நிகழ்வதில்லை அல்லது மிக மிக குறைந்த அளவு மட்டுமே இன்சுலின் உற்பத்தி உண்டாகிறது. இன்சுலின் உற்பத்திக்கு பொறுப்பேற்கும் அணுக்கள் இயங்க மறுப்பது இந்த செயல் மறுப்பிற்கு காரணமாகிறது. இந்த வகையான வழக்கில் தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு இன்சுலின் உடலுக்குள் செலுத்தப்பட வேண்டும். அந்த நோயாளிக்கு எவ்வளவு இன்சுலின் உட்செலுத்துதல் தேவை என்பதை மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைப்பார்கள்.

டைப் II நீரிழிவு

நீரிழிவின் பொது வகையாக இது கருதப்படுகிறது. இது பொதுவாக வயதானவர்களை அதிகம் பாதிக்கிறது. 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் டைப் II நீரிழிவால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இன்றைய சூழ்நிலையில் இளம் வயதினர் கூட இந்த நோயால் பாதிக்கப்படுவதற்கு காரணம் உடல் பருமன் மற்றும் மோசமான உணவுப் பழக்கம். இதன் பாதிப்பு, மிக நீண்ட நாட்களுக்கு பிறகே கண்டுபிடிக்கப்படுகிறது. தாங்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்வதற்கு மக்கள் தவறி விடுகின்றனர்.

அறிகுறிகள் டைப் II நீரிழிவால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த நோய் மிக மெதுவாக உடலில் பரவுகிறது. மிக முற்றிய நிலையில் மட்டுமே இதன் அறிகுறிகள் மக்களுக்கு தென்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதற்கான அறிகுறிகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை, அடிக்கடி சிறுநீர் கழிப்பது தொடர்ந்து தாகம் எடுப்பது சோர்வு குணமடைவதில் தாமதம் தொடர்ச்சியான தொற்று பாதிப்பு முடி மற்றும் பற்களை இழப்பது அதிக எடை இழப்பு பார்வை மங்குவது

இயற்கையான கட்டுப்பாட்டு முறை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பது மிகவும் அவசியம். ஆனால் அதே நேரம், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சில இயற்கை தீர்வுகளை முயற்சிக்கலாம். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படலாம். இந்த பதிவில் நாம் டைப் II நீரிழிவு பாதிப்பை குறைக்க இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிக்க உதவும் ஜூஸ் பற்றி தெரிந்து கொள்வோம். நீங்களும் டைப் II நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த சாறுகளைத் தயாரித்து பருகலாம்.

1. டைப் II நீரிழிவைக் கட்டுப்படுத்த பசலைக் கீரை, கேரட், செலெரி ஜூஸ் இந்த ஜூஸில் பசலைக் கீரை, கேரட், மற்றும் செலரியின் ஒருங்கிணைந்த பண்புகள் காணப்படுகின்றன. இதனால் டைப் II நீரிழிவால் பாதிக்கப்படுகிறவர்கள் நல்ல பலன் அடைகின்றனர். நன்மைகள் கேரட்டில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய சோடியம் அளவை சமநிலைப்படுத்த இது மிகவும் அவசியம். உடலில் இரத்த அளவை ஒழுங்குபடுத்தி, நீரிழிவு நோயாளிகள் பார்வைக் கோளாறால் பாதிக்கப்படுவதைத் தடுக்க உதவுகிறது. பசலைக் கீரையில் கால்சியம், பீட்டா கரோடின், வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகள் புரிகின்றன, மேலும் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. செலெரி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் கொண்டது, இது இதயத்திற்கு நன்மைகளைத் தருகிறது. கடைசியாக, நீங்கள் இதில் க்ரீன் ஆப்பிளை சேர்க்கலாம். இதில் இருக்கும் மாலிக் அமிலத்தின் காரணாமாக இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள் 3 கை நிறைய பசலைக் கீரை 2 செலெரி தண்டுகள் 1 கேரட் 1 க்ரீன் ஆப்பிள் 1 வெள்ளரிக்காய் (தேவைப்பட்டால்) செய்முறை ஆப்பிள் மற்றும் கேரட்டை தோல் சீவிக் கொள்ளவும். இவை இரண்டையும் நன்றாக அரைத்து பின் மேலே கூறிய மற்ற பொருட்களை இதனுடன் சேர்க்கவும். சிறிது அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.

2. ப்ருஸெல் முளைகள் மற்றும் பச்சை பீன் ஜூஸ் மேலே கூறிய ஜூஸ் போல், இதுவும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. நன்மைகள் ப்ருஸெல் முளைகள் மற்றும் பச்சை பீன்ஸ் ஆகியவை கனிமம் மற்றும் வைட்டமின் பி 6 ஆகியவற்றை அதிகமாகக் கொண்டவை. இவை இரண்டும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. இரண்டு பொருட்களும் காய்கறி இன்சுலினின் இயற்கை ஆதாரமாக உள்ளன.

தேவையான பொருட்கள் 10-12 ப்ருஸெல் முளைகள் 2 கப் பச்சை பீன்ஸ் 1 எலுமிச்சை (தோல் உரித்தது ) 1 வெள்ளரிக்காய் (தேவைப்பட்டால்) செய்முறை மேலே கூறிய எல்லா பொருட்களையும் ஒன்றாக அரைத்து தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

மேலே கூறிய ஜூஸ்களை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகுவதால் டைப் II நீரிழிவு பாதிப்பு குறைய உதவுகிறது.

Related posts

வெள்ளை அரிசிக்கு பதிலாக கருப்பு அரிசி சர்க்கரை நோயாளிகள் தினமும் சாப்பிடலாமா?

admin

அசோகு

admin

அதிமதுரத்தின் மருத்துவகுணமும் பயன்படுத்தும் முறையும்

admin

Leave a Comment