கொழுப்பை குறைக்க கூடிய சித்தர்களின் ஆயுர்வேத குறிப்புகள்…!

உணவு பிரியர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகின்றனர். இதற்கு காரணம் வகை வகையான உணவுகள் வர தொடங்கியதும், அதிலுள்ள பிரமாதமான ருசியும் தான். உணவை எந்த அளவிற்கு உண்ணுகிறோம் என்பது முக்கியமில்லை. உண்ணும் உணவு ஆரோக்கியமானதா என்பதுதான் மிக அவசியமானது. உணவின் தன்மையை பொறுத்தே அது நம் ஆரோக்கியத்தை உருகுலைக்குமா..? இல்லையா..? என்பதை தீர்மானிக்க முடியும்.

இன்று நாம் ஃபாஸ்ட் பூட்ஸ் உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகிறோம். இதன் விளைவு உடல் பருமன் கூடி பெரிய தொப்பையை தந்துவிடுவதே. பிறகு இதனை குறைக்க பாடாய் படுகின்றோம். அடி வயிற்றில் உள்ள கொழுப்புகளை குறைக்க எளிமையான சித்தர்களின் ஆயுர்வேத முறைகளை பற்றி இந்த பதிவில் அறிந்து நலம் பெறுவோம்.

உணவும் தொப்பையும்… உண்ணும் உணவில் அதிக அளவில் கொழுப்புகள் இருந்தால் அது நம் உடலில் சேர்ந்து கொள்ளும். சிறிது சிறிதாக சேர தொடங்கி பின்னாளில், வயிறு உப்பி “தொப்பை” என்ற ஒன்றை பெற்று தரும். இது ஆண்கள் பெண்கள் என தனி தனி தாக்கத்தை ஏற்படுத்தாது. இருவருக்கும் பொதுவான பாதிப்பையே தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சித்தர்களின் முறை…

பண்டைய காலத்தில் மக்கள் நோய் நொடியின்றி இருந்ததற்கு சில முக்கிய காரணிகள் இருக்கிறது. சீரான உணவு பழக்கம், உடற்பயிற்சி, சித்த வைத்திய முறைகள், ஆசனங்கள் போன்றவை அவர்களுக்கு பெரிதும் உதவியது. இது சித்தர்களால் பெரும்பாலும் பின்பற்றப்பட்டு வந்ததாம்.

எலுமிச்சை

ஆரோக்கியமான உடல் நிலையை தருவதில் எலுமிச்சைக்கு பெரிய பங்கு உள்ளது. தினமும் காலையில் உங்கள் நன்னாளை இந்த எலுமிச்சை சாறுடன் தொடங்குங்கள். மிதமான சுடு நீரில் சிறிது எலுமிச்சை சாற்றை பிழிந்து, 2 சிட்டிகை உப்பையும் சேர்த்து குடித்து வந்தால் அடி வயிற்றில் உள்ள கொழுப்புகள் விரைவில் குறைந்து விடும்.

வெந்தயம்

உடல் கச்சிதமாக வைத்து கொள்ள இந்த வெந்தயம் சிறந்த முறையில் உதவுகிறது. Galactomannan என்ற முக்கிய கொழுப்பை கரைக்க கூடிய மூல பொருள் இதில் உள்ளது. தினமும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வறுத்து, பொடி செய்து நீரில் கலந்து குடித்து வந்தால் கொழுப்புகள் உடனடியாக கரைந்து நல்ல பலனை தரும்.

விஜயசார்

இது மிகுந்த மூலிகை தன்மை வாய்ந்த ஒரு அற்புத மரமாகும். இதன் பட்டை சர்க்கரை நோயிற்கு பெரிது பயன்படுவதாக ஆயுர்வேத மருத்தவர்கள் கூறுகின்றனர். அத்துடன் உடல் எடையை குறைக்கவும் இது உதவுமாம். குறிப்பாக அடி வயிற்று கொழுப்பை இது விரைவிலே குறைக்குமாம்.

இஞ்சி

நம் வீட்டிலே உள்ள பொருட்களில் முதன்மையான மூலிகையாக இந்த இஞ்சி கருதப்படுகிறது. இதில் உள்ள Gingerols என்ற மூல பொருள் ரத்த ஓட்டத்தை செம்மைப்படுத்தி, உடலில் உள்ள கொழுப்புகளை நீக்கி விடும். எனவே, தினமும் இஞ்சியை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். அல்லது டீ போன்று குடித்து வாருங்கள்.

திரிபலா

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்று முக்கிய மூலிகையின் கலவைதான் இந்த திரிபலா. இது பல்வேறு மருத்துவ குறிப்புகளில் பயன்படுகிறது. தினமும், இரவு உணவு சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பின்னர் இந்த திரிபலா பொடியை நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் அடியில் வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்புகள் காணாமல் போய்விடும்.

பூண்டு

வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்புகளை குறைக்க பூண்டு பெரிதும் பயன்படுகிறது. தினமும் 2 பல் பூண்டை காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவிலே குறையும். மேலும், ரத்த ஓட்டம் சீரடைந்து உடல் ஆரோக்கியம் நலம் பெறும்.

புனர்நவா

இது முதன்மையான மூலிகையாக ஆயுர்வேத மருத்துவத்தில் கருதப்படுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புவோர் இந்த மூலிகையை பயன்படுத்தினால் நல்ல பலனை பெறலாம். அத்துடன் மலசிக்கல், அஜீரான கோளாறுகள் இவற்றால் அவதிப்படுவோர் விரைவிலே குணமடையலாம்.

இலவங்கப்பட்டை

உடல் எடையை குறைக்க உதவும் ஆயுர்வேத மூலிகைகளில் நம்ம வீட்டு மருந்தான இலவங்கப்பட்டையும் உதவும். சீரான முறையில் உடலில் செயல்பாட்டை இது வழி நடத்துகிறது. அத்துடன் கொழுப்பை எளிதில் இது கரைத்தும் விடுகிறது. இலவங்கப்பட்டை டீ காலையில் குடித்து வந்தால் பல நன்மைகளை பெறலாம்.

முருங்கை

முருங்கை பல நோய்களுக்கு அருமையான மருந்தாக உள்ளது. இதனை டீ போன்று குடித்து வந்தால் உடல் எடை கச்சிதமாக மாறும். மேலும், சீரான உடல் நலத்தையும், ரத்த ஓட்டத்தையும் முருங்கை டீ தரும். அடி வயிற்று கொழுப்புக்களை இந்த டீ ஒரு சில வாரத்திலே குறைத்து விடுமாம். இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *