உங்களுக்கு தெரியுமா மூலிகை ராணியின் மகத்துவம் என்ன?

மூலிகைகளின் ராணியான துளசி மூலிகைகளில் ஆல்ரவுண்டர் என அழைக்கப்படுகிறது. துளசியின் எல்லா நேய்கிருமிகளை தாக்கும் தன்மை மட்டுமின்றி, இதன் பூ, வேர் என அனைத்து பாகங்களும் மருத்துவக் குணத்துடன் உள்ளது. இதில் அதிகமாக மருத்துவ குணங்கள் உள்ளதால் ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகிறது.

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால்,ரத்த அழுத்ததைக் குறைத்து இதயநோய் வராமல் தடுக்கலாம்.

தினசரி துளசியை உட்கொண்டால் மன அமைதியும், மன நிதானமாகவும் செயல்படும். அது மட்டுமிட்றி நேர்மறையான கருத்துகளை நம் மனதில் எழும் என ஆயுர்வேத நிபுணர் ஹெச்டி கூறுகிறார்.

துளசி காய்சலுக்கு, சளிக்கு மட்டுமின்றி, உடல் எடையை சீர்படுத்தவும் உதவுகிறது. தினசரி உணவுகளில் ஒன்றாக எடுத்து கொள்வதன் மூலம் உடலின் செயல்பாட்டை சிறப்பாக செயல்படுத்துவதற்கும் உதவும் என்கின்றனர் நிபுணர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *