சித்த மருத்துவம்

நான்கு நாளில் சிறுநீரக்கல் கரைக்க சித்தர்கள் கூறும் அற்புத மூலிகை

கல்தோன்றி, மண்தோன்றி மனிதன் தோன்றிய சமயத்தில் கடவுளும் சித்தர்களும் ஞானிகளும் மனிதர்களுக்கு உண்டாகக் கூடிய மருத்துவ முறைகளை நமக்குக் கொடுத்திருக்கிறார்கள். இன்றைய நாட்களில் சிறுநீரகக் கல் பிரச்னை பொதுவாக நிறைய பேருக்கு வருகிறது. இது பெரும்பாலும் ஆண்களுக்கு மட்டுமே இருந்த பிரச்சினை போய் இப்போது பெண்களுக்குமே வருகிறது.

சிறுநீரகக் கல் மனிதர்களுடைய வியர்வை, சாப்பிடும் உணவுகளில் உள்ள அதிகப்படியான உப்பு ஆகியவை மண்ணீரல் மற்றும் சிறுநீரகங்களில் சென்று படிந்து விட்டால் தான் அதை நாம் சிறுநீரகக் கல் என்று குறிப்பிடுகிறோம். அந்த கல்லை கண்ட மருந்துகளையெல்லாம் சாப்பிடக் கூடாது. சித்தர்கள் சொல்லும் அற்புத இயற்கை மூலிகைகள் மூலம் கரைக்க முயற்சி செய்ய வேண்டும. அதுதான் நமக்கு நிரந்தரப் பயன் கிடைக்கும்.

மூலிகை மருந்து பொதுவாக சிறுநீரகக் கல்லை கரைப்பதற்கு நமக்குத் தெரிந்த பிரபலமான மருந்து வாழைத்தண்டு சாறு. ஆனால் வாழைச்சாறு அதிகமாகக் குடித்தால், உடலில் உள்ள நீரை முழுக்க முழுக்க உறிஞ்சி எடுத்துவிடும். அதைவிட எளிமையான மருத்துவ மூலிகை ஒன்று உண்டு. இந்த மூலிகை மூலமாக ஒரு பைசா செலவு இல்லாமல் சிறுநீரகக் கல்லை அடியோடு கரைத்துவிட முடியும்.

யானை நெருஞ்சி  எத்தகைய கல்லையும் கரைத்துவிடும் அற்புத மூலிகையான சித்தர்கள் சொல்வது இந்த யானை நெருஞ்சி செடி தான். இது எப்பேர்ப்பட்ட கல்லடைப்பையும் கரைக்கும். இந்த செடிக்கு ஏன் இந்த பெயர் வந்தது என்று தெரியுமா? யானையின் கால் மிகவும் தடிமனனானது. முள்ளெல்லாம் ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் இந்த முள்ளானது யானையின் காலில் பட்டுவிட்டால், யானையால் எழுந்திருக்க முடியாமல் படுத்துக் கொள்ளும். மற்றொரு விளக்கமும் உண்டு. அதேபோல ஆனானப்பட்ட நோய்களையும் தீர்க்கும் மூலிகை என்றும் பெயர்.

எப்படி சாப்பிட வேண்டும்? முதல் நாள் சமைத்த அரிசி சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து நீராகாரம் சாப்பிடுவது நம் முன்னோர்களின் காலை உணவு. ஆனால் இன்றோ நமக்கு அது கீழ்தரமான உணவாக கருதி விட்டுவிட்டோம். இதில் உள்ள அற்புதமே வேறு. இனியாவது அதை உணருங்கள்.

தேவையான பொருள்கள் ஆனை நெருஞ்சி செடி – 1 பழைய சாத நீராகாரம் – 1 கப்

செய்முறை ஒரு கப் பழைய சாதத்துக்கு நீராகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஆனை நெருஞ்சி செடியை வேரை வெட்டி விட்டு, தண்டோடு வெட்டி வைத்துக் கொண்டு, நன்கு சுத்தம் செய்து, அந்த நீராகாரத்தில் விட்டு நன்கு அலசி விட வேண்டும். நன்கு இந்த செடியை அலச அலச நீராகாரம் கொஞ்சம் திக்காகிக் கொண்டே வரும். ஓரளவுக்கு திக்கானதும் அப்படியே 20 நிமிடங்கள் வரையிலும் வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்திருந்து பின் குடிக்க குடிக்க வேண்டும். இரவிலேயும் இந்த இலையை நீராகாரத்தில் போட்டு வைத்துவிட்டு, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும் செய்யலாம்.

அறிகுறி நான்கு நாட்கள் குடித்து வந்தால் போதும். சிறுநீரகக் கல் வெளியேறிவிடும். இதை எப்படி நாம் தெரிந்து கொள்வது என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். சிறுநீர் கழிக்கும்போது சிறுநீர் கடுப்பு உண்டாகும். அப்போது கல் கெரைந்து வெளியேறுகிறது என்று அர்த்தம். நான்கு நாட்களில் கிட்டதட்ட 18 mm அளவுள்ள கல் வரையிலும் கரைந்து விடுமாம். மேலும் அதிகமாக நீர் அருந்துதல், இளநீர், பழச்சாறுகள் போன்றவற்றை அருந்துதல் போன்றவை சிறுநீரக கற்களை குறைக்க உதவியாக இருக்கும். சிறுநீரக கல் கோளாறு உள்ளவர்கள் மேலும் என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்பதை தொடர்ந்து காணலாம்…

காரட், பாகற்காய் இதில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்கும் சக்தியுடையது. கேரட்,பாகற்காய்களில் பொதுவாக சிறுநீரகக் கற்களின் படிகங்களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

வாழைப்பழம், எலுமிச்சை: இவற்றில் விட்டமின் பி6 சத்தும், சிட்ரேட் (citrate) சத்தும் அதிகம் உள்ளன. இவை சிறுநீரகக் கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட் (Oxalate) என்ற இரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க வல்லவை.

அன்னாச்சி பழம்: இதில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின்(Fibrin) எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் (Enzymes) உள்ளன. இது சிறுநீரக கற்களை கறைக்கும் தன்மை கொண்டுள்ளது.

கொள்ளு, பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ் கொள்ளில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை. நார்ச்சத்து உள்ள உணவுகள். பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ் போன்றவற்றில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் பலவித சத்துகள் உள்ளன. பொதுவாக சில காய்கறிகள், பழங்களைத் தவிர தினமும் உணவில் நார்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. கற்கள் வருவதையும் தடுக்கும்.

உப்பு: உணவில் உப்பையும் பெருமளவு குறைத்துக் கொள்வது சிறுநீரில் கால்சியம் சத்து வெளியாவதை தடுத்து சிறுநீரகக் கற்கள் வரும் வாய்ப்பை குறைப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

இளநீர் சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் இளநீர் அதிகமாக அருந்த வேண்டியது அவசியமாகும். தினமும் இரண்டு இளநீராவது அருந்தலாம். அவர்கள் பழச்சாறு போன்றவற்றை கண்டிப்பாக அருந்த வேண்டும். சிட்ரஸ் பழச்சாறு, வாழைத்தண்டு சாறு போன்றவற்றை அருந்துவது சிறந்தது.

வெயில்… வெயிலில் அலையும்போதும் வேலை செய்யும்போதும் உடலில் வெயில் தோற்றுவிக்கும் நீர் வறட்சிதான் சிறுநீரகக் கற்கள் உருவாகத் துணைபுரிகிறது. எனவே, கோடையில் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.

புளி, காரம் உணவில் காரம், புளி, மசாலாவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். கேழ்வரகு, கீரைகள், கருணைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, மீன், இறால், நண்டு, முட்டையின் வெள்ளைக்கரு, பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகளான தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பால்கோவா, பால் அல்வா போன்ற உணவு களைத் தவிருங்கள். இவற்றில் கால்சியம் அதிகம். கால்சியம் மாத்திரைகளையும் சாப்பிடக்கூடாது.

உலர் பழங்கள் காபி, தேநீர், பிளாக் டீ, கோலிசோடா போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. கோக் பானங்கள், இதர மென்பானங்கள், ஐஸ்க்ரீம், சாக்லெட் ஆகவே ஆகாது. காரணம், இவற்றில் பாஸ்பேட் மிகுந்துள்ளது. இதுபோல் உலர் பழங்கள், பாதாம் பருப்பு, வாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, பீட்ரூட், சோயாபீன்ஸ், சேனைக்கிழங்கு, பசலைக் கீரையைச் சாப்பிட வேண்டாம்.

Related posts

தலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம்!

admin

பல் நோய்க்கான சித்த மருந்து

admin

மூலிகை மந்திரம்: முருங்கை

admin

Leave a Comment