ஆபத்து விளைவிக்கும் நோயான செப்சிஸ் ஏற்பட காரணங்களும், தடுக்கும் முறைகளும்

இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பல நோய்கள் உருவாகிவிட்டது சில நோய்கள் உருவாக்கப்பட்டு விட்டது. நமக்கு ஏற்படும் பெருமபாலான நோய்கள் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளால்தான் ஏற்படுகிறது. அப்படி ஏற்படும் ஒரு கொடிய நோய்தான் செப்சிஸ்.

செப்சிஸ் என்பது தொற்றுகளால் ஏற்படும் ஒரு உயிர்கொல்லி நோயாகும். இது நமது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடைவதால் ஏற்படும் நோயாகும். செப்சிஸ் உடலில் உள்ள பல பாகங்களை பாதித்து அவற்றை செயலிழக்க வைக்கக்கூடும். இந்த பதிவில் செப்சிஸ் ஏற்பட காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் என்னவென்பதை பார்க்கலாம்.

செப்சிஸ் நம்மை பல நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பது நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலம்தான். நோயெதிர்ப்பு மண்டலமானது நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க சில இரசாயனங்களை இரத்தத்தில் வெளியிடும். இந்த இரசாயனங்கள் உடல் முழுவதும் வீக்கங்கள் ஏற்பட காரணமாக அமைகிறது. இதுவே செப்சிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது இறுதிநிலைக்கு எட்டிவிட்டால் செப்டிக் அதிர்ச்சி ஏற்படும், இது மிகவும் ஆபத்தான மருத்துவ நிலையாகும். இதனால் ஆண்டுக்கு கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பேர் இறக்கின்றனர்.

அறிகுறிகள் செப்சிஸ்க்கு நோய் ஏற்பட்டால் பல அறிகுறிகள் தோன்றும். ஆனால் இதில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் இது மற்ற நோய்களின் அறிகுறிகள் போலவே இருப்பதுதான். 101 டிகிரிக்கு மேல் காய்ச்சல் அடிப்பது, இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 90க்கு மேல் இருப்பது, வழக்கமான மூச்சு விடுதலை விட 20 முறை அதிக மூச்சு விடுவது போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

கடுமையான செப்சிஸ் உடல் உறுப்புகளில் ஏதேனும் ஒன்று செயலிழப்பது கடுமையான செப்சிஸ் எனப்படும். இதனை சிலஅறிகுறிகள் வைத்து கண்டறியலாம். சருமத்தில் துளைகள் அல்லது சருமத்தின் நிறம் மாறுதல், சிறுநீரின் அளவு குறைதல், அதீத சோர்வு, இதய செயல்பாடுகளில் மாற்றம், மூச்சுவிடுவதில் சிரமம் என இதற்கு பல அறிகுறிகள் இருக்கிறது.

விளைவுகள் செப்சிஸ் மரணம் வரை ஏற்படுத்தக்கூடிய ஒரு நோயாகும். இதன் பாதிப்புகள் மிதமானத்திலிருந்து கடுமையானது வரை இருக்கும். இதனை ஆரம்ப நிலையில் குணப்படுத்துவது மட்டுமே எளிதானது. கடுமையான செப்சிஸ் மற்றும் செப்சிஸ் ஷாக் போன்றவை உங்கள் இரத்தத்தில் சிறிய கட்டிகளை உடல் முழுவதும் உருவாக்கிவிடும். இதனால் உடல் உறுப்புகள் செயலிழப்பு, திசுக்களின் செயலிழப்பு போன்றவை ஏற்படலாம்.

காரணங்கள் அனைத்து விதமான தொற்றுநோய்களும் செப்சிஸ் ஏற்பட காரணமாக அமைகிறது.ஆனால் சிலவகை தொற்றுகள் அந்த வாய்ப்பை அதிகரிக்கிறது. நிமோனியா, வயிறு தொடர்பான தொற்றுகள், சிறுநீரக தொற்றுகள், இரத்தத்தில் ஏற்படும் தொற்றுகள் போன்றவை முக்கியமான காரணங்களாகும். நோயெதிர்ப்பு மண்டலம் பல்வவீனமாக இருப்பதும், வயதும் கூட செப்சிஸ் ஏற்பட காரணமாக அமைகிறது.

யாருக்கெல்லாம் செப்சிஸ் அபாயம் உள்ளது? செப்சிஸ் ஏற்பட வயது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இளம் வயதில் இருப்பவர்களுக்கும், வயதானவர்களுக்கும் இது ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பிறந்த குழந்தைகளுக்கு கூட ஏற்படக்கூடும். வலுவில்லாத நோயெதிர்ப்பு மண்டலம் உள்ளவர்களுக்கு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், ICU வில் அதிக சிகிச்சை பெற்றவர்கள், தீக்காயம் மற்றும் பெரிய காயமுற்றவர்களுக்கு செப்சிஸ் தாக்கும் அபாயம் உள்ளது.

குழந்தைகளுக்கு செப்சிஸ் உள்ளதற்கான அறிகுறிகள் பிறந்த குழந்தைகளும் செப்சிஸால் தாக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்கு காரணம் அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலம்தான். குழந்தைகளுக்கு செப்சிஸ் உள்ளதை சில அறிகுறிகள் வைத்து கண்டறியலாம். சரியாக பால் குடிக்காமல் இருத்தல், உடல் வெப்பநிலை குறைவாக இருத்தல், மூச்சு விடுவதில் சிரமம், வெளிர்நிறம், அடிவயிற்றில் வீக்கம், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை இருந்தால் உங்கள் குழந்தைக்கு செப்சிஸ் உள்ளது என்று அர்த்தம்.

எப்போது மருத்துவரை அணுகவேண்டும்? மேலே கூறப்பட்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி புற்றுநோய்க்காக கீமோதெரபி எடுத்துக்கொண்டாலோ சர்க்கரை வியாதி இருந்தாலோ, எய்ட்ஸ், ஹெப்பாடிட்டீஸ் போன்ற நோய்கள் இருந்தாலோ உடனடியாக செப்ஸிஸ் சோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். அதேபோல இரண்டு மாதத்திற்கு குறைவான குழந்தைக்கு காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும்.

சிகிச்சை முறைகள் செப்சிஸ் மிகவிரைவில் செப்சிஸ் ஷாக் என்ற நிலையை எட்டிவிடும். இதனை குணப்படுத்தமால் விட்டுவிட்டால் மரணம் நிச்சயம். இதனை தடுக்க தடுப்பூசிகள் ஆரம்ப நிலையிலேயே போடப்படும், இரத்த அழுத்தத்தை சீராக வைக்க வஸோக்ட்டிவ் மருந்துகள், சர்க்கரை அளவை சீராக வைக்க இன்சுலின் ஊசிகள், உடலுறுப்புகளுக்குள் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும் கார்டோகோஸ்டிரொயிட்ஸ் போன்ற மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது.

தடுக்கும் முறைகள் முடிந்தளவு தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பாக இருப்பதே செப்ஸியை தடுக்கும் முக்கிய வழியாகும். மேலும் நிமோனியா மற்றும் மற்ற தடுப்பூசிகளை தவிர்க்காமல் போடுவது, சுகாதாரமாக இருத்தல், ஏதேனும் நோய் ஏற்பட்டால் உடனடியாக அதற்கு சிகிச்சை எடுப்பது போன்றவை இதனை தடுக்கும் முறைகளாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *