உங்களுக்கு தெரியுமா உள்ளங்காலில் எண்ணெய் வைப்பதால் இவ்வளவு நன்மைகளா?

நமது ஒவ்வொரு பாதங்களிலும் 70,000 நரம்புகள் முடிவடைகின்றன. அதனால் தான் பாதங்களில் மசாஜ் செய்வதன் மூலம், உடலின் பல பிரச்சனைகள் குணமாகின்றன.

மேலும் ஆய்வு ஒன்றில், உள்ளங்காலில் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும் போது, 20 நிமிடங்களில் உடல் முழுவதும் அந்த எண்ணெய் கலந்துவிடும் என தெரிய வந்துள்ளது.

தினமும் இரவில் தூங்குவதற்கு முன் உள்ளங்காலில் எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

நன்மைகள்
  • லாவெண்டர் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம், தூக்கமின்மை பிரச்சனை நீங்கும்.
  • கிராம்பு அல்லது புதினா எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், செரிமான பிரச்சனைகள் நீங்கி செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும்.
  • யூகலிப்டஸ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், சுவாச பிரச்சனைகள் மற்றும் அலர்ஜி குணமாகும். மேலும் இது நுரையீரலையும் சுத்தம் செய்யும்.
  • அத்தியாவசிய நறுமண எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்யும் போது, அந்த எண்ணெய் உடலால் முற்றிலும் உறிஞ்சப்படும்.
  • அத்தியாவசிய நறுமண எண்ணெய்களில் உள்ள மருத்துவ குணங்கள், உடலின் பல பகுதிகளையும் விரைவில் அடைந்து, உடலில் உள்ள பிரச்சனைகளை குணமாக்கும் வேகத்தை அதிகரிக்கும்.
  • மேலும் அத்தகைய அத்தியாவசிய நறுமண எண்ணெய்களை உள்ளங்காலில் தினமும் தடவி மசாஜ் செய்வதன் மூலம், நோயெதிர்ப்பு சக்தி வலிமையடையும், மார்பு சளி குறையும், முதுமை தாமதப்படுத்தப்படும்,
குறிப்பு
  • பொதுவாக உடலின் மற்ற பகுதிகளில் அத்தியாவசிய நறுமண எண்ணெய்களை நேரடியாக பயன்படுத்தக்கூடாது. ஏதேனும் ஒரு பொருள் அல்லது எண்ணெயுடன் தான் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
  • ஏனெனில் அது எரிச்சல் அல்லது இதர பக்கவிளைவுகளை உண்டாக்கும். ஆனால் உள்ளங்காலில் உள்ள தோல் தடிமனாக இருப்பதால், அவற்றை அச்சமின்றி நேரடியாகப் பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *