இஞ்சி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

இஞ்சி ஊட்டச்சத்துக்கள் அடங்கிய அற்புதமான ஒரு வரப்பிரசாதம். தினமும் இஞ்சி சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

இவ்வாறு தொடர்ந்து உணவில் இஞ்சியை சேர்த்துக் கொண்டால் 90 % ஆரோக்கியமாக வாழலாம்.

1. மருத்துவ குணம் :

Third party image reference
இஞ்சி சீனாவில் தோன்றியது. இஞ்சி மஞ்சள் மற்றும் ஏலக்காய் குடும்பத்திற்கு சார்ந்தது.

இஞ்சியின் மருத்துவ குணத்தில் முக்கியமானது செரிமானம். மேலும் குமட்டல், சளி மற்றும் காய்ச்சலுக்கு தீர்வாக அமைகிறது. இஞ்சி பல நூறு ஆண்டுகலாக இயற்கை மருத்துவத்தில் உதவுகிறது.

2. குமட்டல் குணமாக உதவுகிறது:

இஞ்சி பயன்படுத்த நேரம் காலம் பார்க்க வேண்டியதில்லை. புற்றுநோய் போன்ற பல நோய்களுக்கு மேற்கொள்ளும் சிகிச்சை வாந்தி, குமட்டல், தலை சுற்றல் ஏற்படுத்தலாம். இவற்றை தவிர்க்க இஞ்சி உட்கொள்வது நல்லது.

கர்ப்பிணி பெண்கள் அதிகமாக இஞ்சி உட்கொள்வது நல்லதல்ல. எனவே மருத்துவ ஆலோசனை பெற்று பயன்படுத்துங்கள்.

3. நீண்ட நாட்களாக இருக்கும் செரிமானமின்மை குணமாக உதவுகிறது:

நாம் சப்பிடும் உணவு செரிக்க குறிப்பிட்ட நேரம் அவசியம். ஆனால் நேரம் கடந்தும் செரிக்காவில்லை என்றால் இஞ்சி சாப்பிடுங்கள்.

இஞ்சி சாப்பிட்டு 15 நிமிடங்களில் செரிமான அமைப்பு சரியாகிவிடும். சாப்பிடுவதிற்கு முன் 1.2 கிராம் இஞ்சி உட்கொண்டால் 50% செரிமானத்தை இஞ்சி பார்த்துக் கொள்ளும். மீதி 50% தான் செரிமாணக்குடல் செய்யவேண்டும்.

4. கொலஸ்ட்ராலை குறைக்கிறது:

அதிக அளவு LDL ( லிப்போப்ரோடீன்ஸ் ) இதய கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும். தொடர்ந்து 45 நாட்களுக்கு 3 கிராம் இஞ்சி உட்கொண்டால் இதய பிரச்சனைகள் பெரும்பாலும் நீங்கிவிடும்.

5. நோய் தொற்று தடுக்கிறது:

“உயிரியக்க ஆற்றல் கொண்டுள்ள இஞ்சி நோய் தொற்று தடுக்க உதவுகிறது. பாக்ட்டீரியாக்கள் வளர்ச்சியை தடுக்க இஞ்சி பயன்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *