அவசியம் படிக்க.. இயற்கையான முறையில் இருமல் மற்றும் சளியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்….!

இருமல் என்பது வேகமாக நுரையீரலில் உள்ள காற்றை வாய் மூலம் வெளிப்படுத்துவதாகும். அவ்வாறு செய்யும் பொழுது நுரையீரல் பாதையில் உள்ள கிருமிகள் வெளியேற்றப்படும். இருமல் மூலம் கிருமிகள் நீங்குவதால் நோய் தொற்று ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

இருமல், சளி இருக்கும் பொழுது ஏற்படும். இருமும் பொழுது சளி வெளியேறும். சளி ஒரு வகையான வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. சளி குறையும் பொழுது தானாகவே இருமல் நின்று விடும். வறட்டு இருமல் வரக்காரணம் தூசி, புகை, ஆஸ்த்மா, புகைபிடித்தல் போன்றவையாகும். வறட்டு இருமலின் போது சளி வெளியேறுவதில்லை. சில மருந்துகளின் பக்க விளைவினால் கூட வறட்டு இருமல் ஏற்படலாம்.

நம் வீட்டில் உள்ள உணவு பொருட்களை கொண்டே இருமல் சளியை முற்றிலுமாக குணப்படுத்தலாம். இருமல் குணமாக சித்தரத்தை, உலர் திராட்சை கஷாயம் மருந்து சித்தரத்தையுடன் உலர் திராட்சையைச் சேர்த்து கஷாயம் காய்ச்சிக் குடித்தால் இருமல் உடனே தணியும்.

சளி மூக்கடைப்பு குணமாக தூதுவளைக் கீரையுடன் சீரகம், பூண்டு, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்க வைத்து, வடிகட்டிச் சாப்பிட்டால் மூக்கடைப்பு குணமாகும்.

சளி மூக்கடைப்பு குணமாக நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும்.

மஞ்சள் தூளுடன் பூண்டை நசுக்கி உச்சந்தலையில் தேய்த்துக் கொண்டால் சளி பிடிக்காது. தலையில் நீர் கோர்க்காது. சில பெண்கள் தலை குளிக்கும் போது அடிக்கடி சளி பிடிக்கும். அவர்கள் குளிப்பதற்கு முன் இவ்வாறு மஞ்சள் தூள் தூவி பூண்டை நசுக்கி உச்சந்தலையில் தேய்த்து பின் குளிக்கலாம்.

வறட்டு இருமல் குணமாக மிளகுடன் சம அளவு உடைத்த கடலையைச் சேர்த்து பொடி செய்து பனங்கற்கண்டு கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் புகைச்சல் போன்றவை உடனே குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *