இளநரைகளை தடுக்கும் ஆயுர்வேத முறைகள் …! இதை முயன்று பாருங்கள்

இன்று பல ஆண்களும் பெண்களும் அதிகம் கவலை படக்கூடிய விஷயங்களில் ஒன்றாக மாறி விட்டது முடி பிரச்சினைகள். பெண்களுக்கு ஒரு விதத்தில் இது வேதனை தருகிறது என்றால் ஆண்களுக்கும் இது கவலை தர கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது. பெரும்பாலான முடி சார்ந்த பிரச்சினைகளில் முதன்மையானதாக கருதப்படுவது இந்த இளநரைகள் தான். இப்போதெல்லாம் மிக சிறிய வயதிலேயே வெள்ளை முடிகள் வர தொடங்குகிறது. இது பலருக்கு மன வேதனையை தருவதாக கூறுகின்றனர்

மேலும் சிலர் இதற்காக எண்ணற்ற வேதி மருந்துகளை பயன்படுத்துகின்றனர். இதற்கான சரியான தீர்வு இயற்கை முறையில் கிடைக்கும். இந்த பதிவில் ஆயுர்வேத முறையில் எவ்வாறு வெள்ளை முடிகளை தடுக்கலாம் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

வெள்ளை வெள்ளை…! பொதுவாக பெரும்பாலான மக்களுக்கு பிறந்த சில வருடங்கள் வரை முடியின் நிறம் கறுப்பாகத்தான் இருக்கும். வயோதிக பருவத்தை அடையும் போதுதான் இவை வெள்ளையாக மாறும். ஆனால், இன்று பலருக்கு சிறு வயதிலே வெள்ளை முடி வர தொடங்கி விட்டது. இதற்கு பல்வேறு காரணங்களை சொல்லலாம்.

வெள்ளைக்கு காரணம்..! – முடியில் உள்ள மெலனின் நிறமி சுரப்பியில் குறைபாடு ஏற்பட்டால் முடி வெள்ளையாக மாற்றம் பெறும். – பரம்பரை ரீதியாக உள்ள மரபணு பிரச்சினையால் முடி வெள்ளையாக மாறலாம். – ஊட்டசத்துக்கள் குறைவாக இருந்தால் இளநரை வர கூடும். – அதிகமான டீ, குளிர்பானகள் குடித்தால் இளநரை ஏற்படுமாம்

சிறந்த ஆயுர்வேத முறை… முடி பிரச்சினைக்கு சிறந்த முறையாக பலர் கருதுவது ஆயர்வேத முறையையே. முடியின் முழுமைக்கும் ஆயுர்வேத முறைகள் பல நன்மைகளை தருகின்றது. அந்த வகையில் இந்த ஆயுர்வேத குறிப்பு உங்களை நலம் பெற செய்யும்.

தேவையானவை :- மோர் 1 கப் கறிவேப்பில்லை

செய்முறை :- கருவேப்பிலை மற்றும் மோர் ஆகியவற்றை எடுத்து கொண்டு, அவற்றை நன்கு அரைத்து கொள்ளவும். பின் இந்த கூழை 15 நிமிடம் தலைக்கு தேய்த்து ஊற வைக்கவும். கருவேப்பில்லை மோருடன் சேர்ந்து நல்ல பலனை தரும். அத்துடன் இளநரையை கருகருவென மாற்றுமாம். இதனை வாரத்திற்கு 2 முறை செய்யலாம்.

நெல்லி வைத்தியம்… எல்லா கனிகளை காட்டிலும் நெல்லிக்கனியில் அற்புதமான ஆற்றல் உள்ளது. இது உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் ஆகியவற்றை சீராக வைப்பதோடு முடியின் ஆரோக்கியத்தையும் சீராக வைக்கிறது. இந்த நெல்லி குறிப்பு உங்கள் இளநரைகளுக்கு சிறந்த தீர்வை தரும்.

தேவையானவை :- 6 நெல்லிக்காய் 4 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்

செய்முறை :- முதலில் நெல்லிக்காயை காய வைத்து உலர்த்தி கொள்ளவும். அடுத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி, நெல்லிக்காயையும் சேர்த்து 15 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விடவும். பிறகு குளிர வைத்து, இதனை தலையின் அடி வேரில் தடவி வந்தால் வெள்ளை முடிகள் மறைய தொடங்கும். மேலும் இளநரைகள் வராமலும் தடுக்கும்.

கலவை முறை… இளநரையை முற்றிலுமாக போக்குவதற்கு இந்த கலவை முறை நன்கு பயன்படும். உங்கள் முடி இளமையிலே வெள்ளையாக மாறி விட்டதா…? கவலையை விட்டு தள்ளுங்கள். இந்த குறிப்பை பயன்படுத்தி பாருங்கள்.

தேவையானவை :- நெல்லிக்காய் பவ்டர் 1 tsp பிராமி பவ்டர் 1 tsp திரிபலா பொடி 1 tsp பிளாக் டீ 2 tsp காபி 1 tsp

செய்முறை :- மேற்சொன்ன அனைத்து தேவையான பொருட்களையும் 1 லிட்டர் நீரில் சேர்த்து மிதமான சூட்டில் 30 நிமிடம் வரை கொதிக்க வைக்கவும். பிறகு இதனை குளிர விட்டு காற்று புகாத பாத்திரத்தில் வைத்து கொள்ளலாம். இதனை தலைக்கு குளிக்கும்போதெல்லாம் தடவி கொண்டு குளித்தால் முடி கருமை பெறும். மேலும் போஷாக்கான கூந்தலையும் பெறலாம்.

இந்த எண்ணெய் போதுமே… உங்கள் முடி கருகருவென மாற இந்த கலவை எண்ணெய் பெரிதும் உதவும். இளமையிலே நீங்கள் பெற்ற வெள்ளைகளை அடியோடு போக்க கூடியது. இந்த 2 கலவை எண்ணெய் ஆயுர்வேத முறை முடியை வலுப்படுத்தி, நரையை தடுக்கும்.

தேவையானவை :- நல்லெண்ணெய் 4 tsp கேரட் எண்ணெய் 2 tsp

செய்முறை :- முதலில் நல்லெண்ணெய் மற்றும் கேரட் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலக்கி கொள்ளவும். பின் இவற்றை முடியின் வேர்களில் தடவி மசாஜ் செய்யவும். 45 நிமிடத்திற்கு பிறகு இதனை வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் முடியின் வெள்ளை கருப்பாக மாறி விடும். அத்துடன் முடி உதிர்வுக்கு நிற்கும்.

உணவு முக்கியமாச்சே..! உங்கள் முடி வெள்ளையாக மாறுகிறதென்றால் அதற்கு முதன்மையான காரணமாக உணவும் இருக்க தான் செய்யும். முடியின் வெள்ளையை குணப்படுத்த வைட்டமின் பி, இரும்புசத்து, காப்பர், வைட்டமின் சி போன்ற ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *