ஆலோசனைகள்

தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்..!

தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள் சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டியது மிகவும் அவசியம்; ஏன் அவசியம் எனில், குழந்தை கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் வளரும் பொழுது எப்படி அன்னை உட்கொண்ட உணவுகளை உண்டு வளர்ந்ததோ, அதே போல் பிறந்த பின்னரும் நீங்கள் உண்ணும் உணவுகளில் இருந்து உறிஞ்சப்படும் சத்துக்கள் தான் தாய்ப்பாலாக மாறி குழந்தைக்கு அளிக்கப்படுகிறது.

ஆனால் குழந்தைகள் வயிற்றில் இருக்கும் சமயத்திலும், பிறந்த பின்னும் ஒரு வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. அது என்ன வித்தியாசம் என்றால்..,

வித்தியாசம் என்னவென்றால்? கர்ப்ப காலத்தில் வயிற்றினுள் இருக்கும் பொழுதாவது, தாய் உண்ட உணவுகள் தொப்புள் கொடி வழியாக தானாய் குழந்தையை அடைந்தன; ஆனால் இப்பொழுது குழந்தைக்கு நேரம் தவறாமல் தாய்ப்பால் அளித்து அதன் பசியை போக்க வேண்டியது தாய்மாரின் பொறுப்பு; அதே சமயத்தில் தாய்மார்களும் சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். தாய் சத்தான உணவுகளை உட்கொண்டால் மட்டுமே சக்தி அளிக்கும் தாய்ப்பால் பெண்ணின் மார்பகத்தில் சுரக்கும். தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உண்ண வேண்டிய உணவுகள் குறித்து இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

நெய் சேர்த்தல் அவசியம்! தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள் தங்கள் உண்ணும் உணவினால் நெய் சேர்த்து உண்ண வேண்டியது மிகவும் அவசியம்; ஏனெனில் நெய் உடலினுள் உள்ள உணவு செரிக்கும் அமிலத்தின் சுரப்பை தூண்டக்கூடியது. இதனால், தாய் உட்கொண்ட உணவுகள் விரைவில் செரிமானம் அடைந்து தாய்ப்பாலாக மாறும். இதனால், தாய்மார்கள் நல்ல சத்துள்ள உணவுகளில் சிறிது நெய் சேர்த்து உண்டு வருதல் வேண்டும். மேலும் நெய் சேர்த்து உட்கொண்டால் அது தாய்மார்களின் உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து, உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடைந்த கோதுமை அல்லது ஓட்ஸ்..! உடைந்த கோதுமையில் தாய்ப்பாலை சுரக்க வைக்கும் சத்துக்கள் நிறைந்து உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. எனவே தாய்ப்பால் அளிக்கும் பெண்மணிகள் இந்த உ டைந்த கோதுமையை கஞ்சியாக, அல்லது கூழாக சமைத்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பில் நல்ல ஒரு விருத்தி ஏற்படும் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த உடைந்த கோதுமை கிடைக்காத பெண்கள் ஓட்ஸ் உணவினை உட்கொண்டு தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்க முயலலாம். ஓட்ஸ் அல்லது உடைந்த கோதுமை எதுவாகினும் அதனுடன் பால் சேர்த்து உட்கொண்டால், இன்னும் அதிகமான பலன்களை பெறலாம்.

மாதுளை! மாதுளைப்பழத்தை அதிகம் உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்க உதவும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆகையால் தாய்ப்பால் அளிக்கும் பெண்கள் மாதுளம் பழத்தை அப்படியே உண்டு வருதல் அல்லது பழச்சாறாக அடித்து பருகி வருதல் என ஏதேனும் முறையில் இப்பழத்தை கட்டாயம் உட்கொள்ள முயற்சித்தல் வேண்டும். இது தாய்ப்பால் சுரப்பை கட்டாயம் அதிகரிக்க உதவும்.

இஞ்சி! தாய்ப்பால் அளிக்கும் பெண்கள் இஞ்சியை சிறிது சிறிதாக தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும்; அதனோடு செரிமானத்தை அதிகரித்து, உண்ட உணவுகளில் உள்ள சத்துக்களை தாய்ப்பாலாக மாற்றி, வாயுத்தொல்லை ஏற்படாமல் தடுக்க உதவும். இதை இஞ்சி தேநீர் செய்து குடிக்கலாம், இதில் தேன், எலுமிச்சை போன்றவை கலந்து குடித்தால் நல்லது. ஆனால் இஞ்சி அதிக பலத்த மணம் மற்றும் ருசி கொண்டதால், அது தாய்ப்பாலின் சுவையை மாற்றுவதற்கு வாய்ப்புகள் உண்டு; எனவே சிறிதான அளவில் எடுத்துக்கொண்டு உட்கொண்டு வாருங்கள்!

பூண்டு! பூண்டும் தாய்ப்பால் அளிக்கும் பெண்கள் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டிய உணவு தான். இதனை அதிகம் உண்டால், இஞ்சியில் கூறிய அதே பாதிப்புகள் அதாவது பலத்த சுவை மற்றும் மணம் இருப்பதால், இது தாய்ப்பாலின் சுவையை மாற்றிவிடக் கூடும். எனவே தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள் சிறிது சிறிதாக பூண்டினை தங்கள் உணவில் சேர்த்து உண்டு வரவும்.

வெந்தயம்! வெந்தயம் உடலுக்கு குளிச்சி அளிக்க மிகவும் நல்லது; வெந்தயத்தை உணவில் சேர்த்து வருதல் முடி வளர்ச்சி, உடலுக்கு குளிச்சி போன்ற எண்ணற்ற நன்மைகளை செய்யும். இந்த எண்ணற்ற நன்மைகளுள் மிகவும் முக்கியமான ஒன்று தான் தாய்ப்பால் சுரப்பு. வெந்தயத்தை கஞ்சியாகவோ அல்லது உணவில் ஏதேனும் ஒரு விதத்தில் சேர்த்து தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் உண்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

அஸ்பாரகஸ் அஸ்பாரகஸை பொடி செய்து வைத்து, உணவில் அல்லது பாலில் சேர்த்து தினசரி பருகி வருதல் தாய்ப்பால் அளிக்கும் பெண்களுக்கு நல்லது என்று கூறப்படுகிறது; இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே தாய்மார்கள் தினசரி தங்கள் உணவில் அஸ்பாரகஸ் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்!

ராஸ்பெரி இலை..! ராஸ்பெரி பழத்தின் இலையை தேநீர் செய்து பருகுதல் அல்லது வேறு ஏதேனும் உணவு வகையாக தயாரித்து உண்டு வருதல் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது என்று அறியப்படுகிறது. இந்த இலையில் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் பண்புகள் நிறைந்து இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. எனவே தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள் இந்த இலையை உட்கொள்ள முயற்சித்தல் நல்லது.

தாய்மார்களை நம்பி அவர்தம் குழந்தை இருப்பதால், எந்தவொரு புது உணவை, புது முயற்சியை மேற்கொள்ளும் முன்னரும் மருத்துவ ஆலோசனை பெற்று செயலில் ஈடுபடுவது நல்லது என்ற தாழ்மையான கருத்தை கூறி விடைபெறுகிறேன்! வாழ்க வளமுடன்..!

Related posts

ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாமா?

admin

வாய்துர்நாற்றத்தை குணப்படுத்த இதை முயன்று பாருங்கள்…

sangika sangika

பெண்களுக்கு கணக்கற்ற நன்மைகளை அளிக்கும் ‘கடலை எண்ணெய்’

admin

Leave a Comment