குளிர்பானம் குடிப்பவரா நீங்கள்….!

* குளிர்பானத்தில் விட்டமின், தாது உப்புக்கள், மாவுச் சத்து எதுவும் இல்லை.

* வயிற்றில் அமிலச் சுரப்பு (அஸிடிட்டி) உருவாகி செரிமானக் கோளாறு வரும்.

* வயிற்றில் வாயுத் தொல்லை உருவாகும்.

* உடல் பருமன் ஏற்படும்.

* செயற்கைக் கலர் (சிந்தடிக்) சேர்க்கப்படுவதால் உடல்நலம் கெடும்.

* சுவைக்குச் சேர்க்கப்படும் இரசாயனங்களால் கேடு.

* நார்ச்சத்து இல்லை.

* கொடுக்கும் காசுக்கு பயன் இல்லை கேடு அதிகம். குளிர்பானத்திற்குக் கொடுக்கும் காசுக்கு திராட்சை பழத்தை வாங்கி நன்றாக அலசி மென்று சாப்பிட்டால் எவ்வளவு பயன் தெரியுமா?

திராட்சையின் நன்மைகள்
* விட்டமின்கள், கார்போஹைட்ரேட், தாது உப்புக்கள் கிடைக்கிறது.

* நார்ச்சத்து முழுமையாய் கிடைக்கும்.

* இதயம் வலுப்பெறும்

* மென்று சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள், தடைகள் வலுப்பெறும்.

* உடலுக்குத் தேவையான குளுக்கோஸ் கிடைக்கும்.

* உமிழ் நீர் அதிகம் கலப்பதால் உடல் நலம் பெருகும்.

* நோய் எதிர்ப்பாற்றல் வளரும்.

* எலும்புகள் வலுப்பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *