முன்கூட்டியே விந்து வெளிபடுதல் என்பது குறைபாடு இல்லை : ஆய்வில் தகவல்!

தங்கள் உடலிலேயே ஆண்கள் உடலுறவு சார்ந்த பிரச்சனை ஏற்படும் போது தான் மிகவும் நொந்து போகிறார்கள். ஆனால், இந்த உடலுறவு சார்ந்த பிரச்சனைகள் சில உண்மையில் கோளாறே இல்லை, அவையெல்லாம் மிகவும் சாதாரணம் தான் என்பதை மருத்துவரிடம் கலந்தாய்வு செய்து இவர்கள் தெரிந்துக் கொள்ள முயற்சிப்பதே இல்லை.

ஐந்தில் ஒரு ஆணுக்கு உடலுறவில் ஈடுபடும் போது விந்துதுள்ளல் ஏற்படுகிறது. அதாவது முன்கூட்டியே விந்து வெளிபடுதல். இதனால் உடலுறவில் நிலைத்து ஈடுபட முடிவதில்லை, இது ஒரு பெரிய பிரச்சனை என்று ஆண்கள் எண்ணுவதுண்டு. ஆனால், இத்தாலியில் நடந்த சமீபத்திய ஆய்வில், முன்கூட்டியே விந்துதுள்ளல் ஏற்படுவது உடல்நலக் கோளாறு இல்லை என்று கண்டறிந்துள்ளனர்….

உளவியல் பிரச்சனை உடலுறவில் ஈடுபடும் போது விந்துதள்ளல் அல்லது முன்கூட்டியே விந்து வெளிப்படுதல் என்பது உடல்நலக் கோளாறு அல்ல. இது மனநிலை சம்மந்தபட்டது என இத்தாலி மருத்துவர் வின்சென்சோ புப்போ கூறியுள்ளார்.

மருந்துகள் தேவையில்லை விந்துதள்ளல் ஏற்படுவது என்பது உணர்ச்சி சம்மந்தப்பட்ட விஷயம். இதற்கு மருந்துகள் தேவையே இல்லை. இது மிகவும் சாதாரணமாக ஏற்படக் கூடிய ஒன்று தான் என சமீபத்திய ஆய்வில் ஆய்வாளார்கள் ஓர் பெரும் வாதத்திற்கு பிறகு கண்டறிந்துள்ளனர்.

மன அழுத்தம் முன்கூட்டியே விந்துதள்ளல் ஏற்படுவது என்பது மன அழுத்தம் அல்லது மனநிலை சீர்குலைந்து காணப்படுவதால் ஏற்படும் ஒன்று. இதன் பிரதிபலிப்பை நாம் ஆண்மை சார்ந்த குறைபாடாக கருத முடியாது என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உடலுறவு சார்ந்த போதியளவு தெளிவின்மை பெரும்பாலும் ஆண்கள் மத்தியில் இது ஏற்படுவதற்கு காரணம், உடலுறவு சார்ந்த போதியளவு தெளிவு இல்லாமல் இருப்பது தான் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஆண்கள் மத்தியில் சாதாரணமாக ஏற்படுகிறது ஐந்தில் ஒன்று அல்லது, மூன்றில் ஒரு ஆணுக்கு உடலுறவில் ஈடுபடும் போது இந்த விந்துதள்ளல் ஏற்படத்தான் செய்கிறது. இது ஆண்கள் மத்தியில் சாதாரணம் என்றும் கூறியிருக்கிறார்கள்.

ஐம்பதில் ஒருவர் ஆண்களில் ஐம்பதில் ஒருவருக்கு வாழ்நாள் முழுக்க இந்த முன்கூட்டியே விந்துதள்ளல் அல்லது முன்கூட்டியே விந்து வெளிப்படுதல் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்தல் மூலமாக கூட சரி செய்யலாம் எனவும் கூறுகிறார்கள்.

உடற்பயிற்சி இடுப்பு தளம் பகுதிக்கு உடற்பயிற்சி செய்வதால் முன்கூட்டியே விந்துதுள்ளல் ஏற்படுதலை தவிர்க்க முடியும் என்று கூறுகிறார்கள். தொடர்ந்து 12 வாரங்கள் இவ்வாறு உடல் பயிற்சி செய்து வந்தால் நிரந்தர தீர்வுக் காண முடியும் என்று கூறப்படுகிறது.

மருந்து மாத்திரை பெரும்பாலும் ஆண்கள் உடலுறவில் நிலைத்து செயல்பட மருந்து மாத்திரை உட்கொள்கிறார்கள் இதனால் தலைவலி, சோர்வு போன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது. முக்கியமாக, இதயம், சிறுநீரகம், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த மருந்து மாத்திரைகளை பயன்படுத்தவே கூடாது என்றும் எச்சரிக்கப் படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *