தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்!

நல்ல அடத்தியான முடியைப் பெற யாருக்கு தான் ஆசை இருக்காது. குறிப்பாக இன்றைய தலைமுறையினர் பலருக்கு அது கனவாகவே உள்ளது. இதற்கு மோசமான வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் தான் காரணம். ஒவ்வொரு மாதமும் அதிகப்படியாக ஒரு இன்ச் வரை முடி வளரும்.

ஆனால் முடி அடர்த்தியாக இருப்பது என்பது ஒவ்வொருவரின் பராமரிப்பைப் பொறுத்து தான் உள்ளது. ஆகவே தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர உதவும் சில நாட்டு வைத்தியங்களை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி, அடத்தியான முடியைப் பெறுங்கள்.

வெங்காய சாறு
வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. இது தான் முடிக்கு நல்ல அமைப்பைத் தரும். அதோடு சல்பர் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். ஆகவே வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, ஸ்கால்ப்பில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலசுங்கள்.

விளக்கெண்ணெய் விளக்கெண்ணெயில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளது. இது ஸ்கால்ப்பை ஈரப்பசையுடன் வைத்து, ஸ்கால்ப்பில் உள்ள நோய்த்தொற்றுக்களைத் தடுத்து, தலைமுடி உதிர்வதைக் குறைத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். அதற்கு வாரத்திற்கு ஒருமுறை விளக்கெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி தலையில் தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து அலச வேண்டும்.

நெல்லிக்காய் நெல்லிக்காயில் வைட்டமின் சி வளமாக உள்ளது. இது முடியின் வளர்ச்சிக்கு வேண்டிய ஊட்டத்தை வழங்கும். உலர்ந்த நெல்லிக்காயை தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அந்த எண்ணெயால் ஸ்கால்ப்பை மசாஜ் செய்ய வேண்டும்.

எலுமிச்சை சாறு எலுமிச்சை சாற்றில் உள்ள அமிலம், ஸ்கால்ப்பில் pH அளவை நிலைப்படுத்தி, தலைமுடியின் வளர்ச்சியை தூண்டும். அதற்கு எலுமிச்சை சாற்றினை தேங்காய் எண்ணெயுடன் கலந்து, தலையில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து அலச வேண்டும்.

வேப்பிலை வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருள், ஸ்கால்ப்பில் இருக்கும் நோய்த்தொற்றுகளைத் தடுத்து, தலைமுடியின் வளர்ச்சியை மேம்படுத்தும். அதற்கு வேப்பிலையை தேங்காய் எண்ணெயில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி, அந்த எண்ணெயால் வாரத்திற்கு 2 முறை மசாஜ் செய்து அலசி வாருங்கள்.

க்ரீன் டீ க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது. இது தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். ஆகவே வெதுவெதுப்பான நிலையில் க்ரீன் டீயை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும்.

முட்டை முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள புரோட்டீன், முடியின் வளர்ச்சியைத் தூண்டும். அத்தகைய முட்டையின் வெள்ளைக்கருவை ஸ்கால்ப்பில் படும்படி தடவினால், மயிர்கால்கள் ஊட்டம் பெற்று, முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *