சிலருக்கு பித்தவெடிப்பு ஏற்படக்காரணம் என்ன?

கால்களின் சருமத்தின் உலர்ந்த தன்மை, குதிக்கால் தோல் தடித்துக் கடினமாகக் காணப்படுதல், உடல் நிறைச் சுட்டி அதிகரித்தல், நீண்ட நேரம் நிற்றல், நடத்தல், தோலின் வளையும் தன்மை குறைவாக இருத்தல்,

குதிக்கால் மூடப்படாத செருப்பு வகைகளை அணிதல், அருந்தும் நீரின் அளவு குறைதல், குளிரான காலநிலை, தைரொயிட் சுரப்பி நோய்கள், நீரிழிவு

நோய், தோல் நோய்களான “சொறாசிஸ்”, “எக்சிமா” போன்றவை உங்கள் கால்களில் பித்த வெடிப்பை ஏற்படுத்தும் காரணிகளாகும். பித்த வெடிப்பை கட்டுப்படுத்துவதற்கு அல்லது முற்றாக குணமாக்குவதற்கு நீங்கள்,

மென்மைத் தன்மையைக் கொடுக்கும் பாதணிகளை, கால்களை மூடக்கூடிய விதத்தில் சரியாக அணிதல் வேண்டும். நாளாந்தம் அதிகளவு நீர் அருந்துதல் வேண்டும். உங்கள் கால்களைப் பற்தூரிகை கொண்டு சவர்க்கார நீரினால்

கழுவி, நன்றாகத் துடைத்து, படுக்கைக்குப் போகுமுன் சிறிதளவு எண்ணெய் அல்லது ஈரப்பதன் தரக்கூடிய கிறீம் வகைகளைப் பூசி,

படுக்கைக்குச் செல்லவும். மேலும் நீங்கள் உடல் எடை கூடியவர் எனின் உடல் நிறையைக் குறைக்கும் வழிமுறைகளைக் கைக்கொள்ளவும். உங்களுக்கு தைரொயிட் சுரப்பி வருத்தம், நீரிழிவு, தோல் சம்பந்தமான வியாதிகள் காணப்படின் தோல் சிகிச்சை நிபுணரின் ஆலோசனைகளை நாடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *