உடல் எடையை குறைக்கும் முழுத் தானியங்கள்

ஒரு­வ­ரு­டைய உடல் எடை அதி­க­மாக இருக்­கி­றது என்­பது அவ­ரு­டைய உயரம், வயது, ஆணா? அல்­லது பெண்ணா? என்ற பாலின பாகு­பாடு ஆகி­ய­வற்றைப் பொருத்தே கணிக்­கப்­ப­டு­கி­றது. உடற்­ப­ருமன் என்­பது திசுக்கள் இயல் பான அளவை விட அதி­க­ளவில் உரு வாவ­தாலும், கொழுப்புச் செல்கள் பெரிய தாக வளர்­வ­தாலும் ஏற்­ப­டு­கி­றது. சுமார் 30 திலி­ருந்து 40 வயது வரை­யுள்ள நடுத்­தர வய­தி­ன­ரையும், பத்து முதல் இரு­பது சத­வீதம் குழந்தை பருவம் முதல் பதின்­ப­ருவம் வரை­யுள்­ள­வர்­க­ளுக்கும் உடற்­ப­ருமன் ஏற்­ப­டு­கி­றது. வயது கூட கூட உடல் எடை அதி­க­ரிப்­பது இயல்பு. குழந்­தைப்­ப­ரு­வத்தில் உடற்­ப­ரு­மனால் பாதிக் கப்­பட்­டி­ருந்தால் அவர்கள் வய­தா­னாலும் அந்த பாதிப்­பி­லி­ருந்து விடு­பட இய­லாது. இவர்­களை எடை குறைப்பு செய்­வது சற்று கடி­ன­மான பணியே. பாரம்­ப­ரியம், உடல் உழைப்­பின்மை, போதிய தொடர் உடற் பயிற்­சி­யின்மை, சத்­தற்ற, கொழுப்பு சத்து மிக்க உண­வு­களை சீரற்ற தரு­ணங்­களில் சாப்­பி­டு­வது போன்­ற­வற்றால் உடலில் பெறப்­படும் கலோ­ரிகள் கொழுப்­பு­க­ளாக மாற்­றப்­பட்டு இரத்­தத்­திலும், திசுக்­க­ளிலும் சேமிக்­கப்­ப­டு­கி­றது. இதனால் உடல் எடை அதி­க­ரித்து உடற்­ப­ருமன் பிரச்­சினை தொடங்கு கிறது.

ஒரு சில­ருக்கு அவர்­களின் மன நிலை கார­ண­மா­கவும் உடல் எடை அதி­க­ரிக்­கி­றது. உடல் எடையை கட்­டுப்­ப­டுத்­த­வில்லை என்றால், நாட்­பட்ட வியா­தி­க­ளான உயர் இரத்த அழுத்தம், சர்க்­கரை வியாதி, இதய பாதிப்பு, பித்­தப்பை கோளாறு ஆகி­யவை தொடரக் கூடும். அத்­துடன் மூட்டு வலி, இடுப்பு வலி, ஹெர்­னியா, வெரி­கோஸிஸ் வெயின் போன்ற உடல் உபா­தை­களும் தோன்றும்.

உடல் எடையை குறைக்க உணவுக் கட்­டுப்­பாடு, முறை­யான உடற்­ப­யிற்சி, உடற்­ப­யிற்சி என்­ற­வுடன் தினமும் நடக்கும் முப்­பது நிமிட நடை­ப­யிற்­சியை கணக்கில் கொள்­ளக்­கூ­டாது. தொடர்ந்து தினமும் நடை­ப­யிற்சி செய்­வது இனிமேல் உடலில் கொழுப்பு தங்­காமல் இருப்­ப­தற்­கா­கத்தான். தங்­கிய கொழுப்­பு­களை அகற்­ற­வேண்டும் என்றால் நடை­ப­யிற்­சி­யுடன் கொழுப்பை கரைக்­கக்­கூ­டிய அள­வி­லான ஓட்டப் பயிற்சி யையோ அல்­லது நீச்சல், சைக்­கிளிங் போன்ற பயிற்­சி­யையோ செய்­ய­வேண்டும். அப்­போது தான் உடலில் சேக­ரிக்­கப்­பட்­டுள்ள கொழுப்­புகள் கரையும்.

அதே தரு­ணத்தில் சத்­தான உண­வுகள் அதா­வது கொழுப்பை கரைக்­கக்­கூ­டிய மற்றும் கொழுப்­பே­யில்­லாத உண­வு­களை சாப்­பிட வேண்டும். அதைத் தவிர்த்து எண்­ணெயில் பொரிக்­கப்­பட்ட உண­வு­க­ளையும், நொறுக்குத் தீனி­க­ளையும் முற்­றாக தவிர்க்­க­வேண்டும். அதற்கு மாற்­றாக நார்ச்­சத்து மிக்க உண­வு­களை எடுத்­துக்­கொள்­ள­வேண்டும்..முழு தானி­யங்­க­ளையும் எடுத்­துக்­கொள்­ளலாம்.

முழுத் தானி­யங்கள் நார்ச்­சத்து மிகுந்த வெளிப்­ப­குதி, உயிர்ச்­சத்­துகள் மிகுந்த விதைப்­ப­குதி மற்றும் மெத்து போலி­ருக்கும் உட்­ப­குதி என மூன்று பகு­தி­க­ளாக இருக்கும். தானி­யங்­களை முழு தானி­யங்கள் என்றும் சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட தானி­யங்கள் என்றும் வகைப்­ப­டுத்­தலாம். முழுத்தா னியங்­களில் முழு­மை­யாக உயிர்ச்­சத்து நிரம்­பி­யி­ருக்கும். உதா­ர­ணத்­திற்கு சிவப்பு அரிசி மற்றும் ஓட்ஸ். சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட தானி­யங்­க­ளான வெள்ளை அரிசி மற்றும் ரொட்­டியில் உயிர்ச்­சத்­து­க­ளான விற்­றமின் பி, நார்ச்­சத்து மற்றும் இரும்பு சத்து நீக்­கப்­பட்­டி­ருக்கும்.

தானி­யங்­களில் கிளை­சிமிக் இன்டெக்ஸ் எனப்­படும் குளுக்கோஸ் அளவு குறை­வாக உள்­ளதால் ரத்­தத்தில் சர்க்­க­ரையின் அளவை கட்­டுப்­ப­டுத்­து­கி­றது. நார்ச்­சத்து அதி­க­மி­ருப்­பதால் வாய்வு தொல்­லையை குறைக்­கி­றது. இதனால் எம்­மு­டைய உடலின் எடையை அதி­க­ரிக்­காமல் பாது­காக்­கி­றது. அதே போல் முழு தானி­யங்­களை சாப்­பி­டு­ப­வர்­க­ளுக்கு வலிப்பு மற்றும் இதய நோய்கள் வரு­வ­தில்லை என்று ஆய்வுகளில் கண்­ட­றி­யப்­பட்­டி­ரு­க­கி­றது. முழு தானி யங்­களில் உள்ள கரையும் தன்மை கொண்ட நார்ச்­சத்­துகள், விற்­ற­மின்கள், தாதுக்கள், எதிர் ஒக்­ஸி­­னேற்றம் மற்றும் ஒளி வேதிய பொருள்கள் இத­யத்தை வலு­வ­டையச் செய்து பாது­காக்­கி­றது.

ஓட்ஸில் உள்ள கரையும் நார்ச்­சத்து இரத்­தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்­க­ரையின் அளவைக் கட்­டுப்­ப­டு­த­து­கி­றது. கோது­மையில் காண்ப்­படும் கரை­யாத நார்ச்­சத்து எமது ஜீரண மண்­ட­லத்தை சுத்தப்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்கிறது. முழு தானியங்களை தொடர்ந்து சாப்பிடு பவர்களுக்கு நீரிழிவு, புற்று நோய் மற்றும் அஜுரண கோளாறுகள் பெரும்பாலும் வருவ தில்லை. தானியங்களை உணவில் பயன்படுத்தும் போது எம்முடைய உடல் எடை சமநிலையில் இருக்கும். முழு தானியங்களை சாப்பிடும் ஆண் மற்றும் பெண்எடை குறைந்து காணப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *