ஆரோக்கியம்

ஜம்பிங் ஜாக் பயிற்சி

உடல் முழுவதும் ஃபிட்டான தசை அமைப்புக்கு, நிறைய பயிற்சிகள் உள்ளன. முதலில், ஒரு பயிற்சியை 30 விநாடிகள் செய்துவிட்டு, ஒரு நிமிடம் ஸ்கிப்பிங் பயிற்சி செய்ய வேண்டும். அதன் பிறகு, ஒரு நிமிடம் ஓய்வு என்று செய்ய வேண்டும்.
ஜம்பிங் ஜாக் பயிற்சி
விரிப்பில் கால்களைச் சேர்த்து நேராக நிற்க வேண்டும். கைகளைப் பக்கவாட்டில் வைத்துக்கொள்ளவும். இப்போது, குதித்தபடி காலை சற்று அகட்டி, கையைத் தலைக்கு மேல் உயர்த்தி, பின் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். (30 விநாடிகள் செய்துவிட்டு, ஒரு நிமிடம் ஸ்கிப்பிங், ஒரு நிமிடம் ஓய்வு எடுக்க வேண்டும். பிறகு அடுத்த பயிற்சி.)
பலன்கள்: இந்தப் பயிற்சியின்போது, உடல் முழுவதும் செயல்படுகிறது. மூச்சு ஆழமாகிறது. இதனால், அதிக கலோரி எரிக்கப்படுகிறது. இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

Related posts

உணவுக்குப் பதிலாக பிஸ்கட் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி தெரியுமா?..

sangika sangika

உடல் எடை குறைக்க ஆரோக்கியமற்ற வழிமுறைகள்

admin

உங்களால் ஏன் தொப்பையைக் குறைக்க முடியவில்லை என்று தெரியுமா?

admin

Leave a Comment