ஆரோக்கியம்

மூன்றே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா? அப்ப இந்த மெனுவை ஃபாலோ பண்ணுங்க…

குண்டாக இருப்போர் உடல் எடையைக் குறைக்க வழி இருந்தால் சொல்லுங்களேன் என்று புலம்புவதைக் கேட்டிருப்பீர்கள். அதுமட்டுமின்றி, அவர்கள் உடல் எடையைக் குறைக்க பல்வேறு முயற்சியை மேற்கொண்டும் இருப்பார்கள். இருப்பினும் எந்த ஒரு மாற்றமும் தெரியாமல் இருக்கும்.

பொதுவாக உடல் எடையைக் குறைக்க ஆரோக்கியமான வழியை நாடினால் மட்டுமே, உடல் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக ஒரு நாளைக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் உடல் எடையைக் குறைக்க மேற்கொள்ளும் டயட்டே நம் உயிருக்கே உலை வைத்துவிடும்.

நீங்கள் உடல் எடையைக் குறைக்க வழியே தேடி அலைபவரா? அப்படியெனில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள டயட்டைப் பின்பற்றினால், மூன்றே நாளில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சரி, இப்போது மூன்றே நாளில் உடல் எடையைக் குறைக்க உதவும் டயட் மெனுவைப் பார்ப்போமா!!!

காலை உணவு காலை உணவாக ஒரு கப் குறைவான கொழுப்புள்ள தயிர் அல்லது ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம்.

ஸ்நாக்ஸ் ஸ்நாக்ஸாக 1 டம்ளர் பழச்சாறு அல்லது காய்கறி சாறு குடிக்கலாம் அல்லது ஏதேனும் 2 பழங்கள் அல்லது காய்கறியை சாப்பிடலாம்.

மதிய உணவு மதிய வேளையில் உணவாக, ஒரு கப் காய்கறி சாலட் மற்றும் 1 டம்ளர் பழச்சாறு குடிக்க வேண்டும்.

இரவு உணவு இரவு நேரத்தில் 1 1/2 கப் க்ரனோலா பார் (ஓட்ஸ், நாட்டுச்சர்க்கரை, தேன், உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் கொண்டு செய்யப்பட்ட தின்பண்டம்) பழங்கள், நட்ஸ் மற்றும் 1 டம்ளர் பால் குடிக்க வேண்டும்.

குறிப்பு மேற்கூறிய டயட்டை தொடரந்து மூன்று நாட்கள் பின்பற்ற வேண்டும். நான்காம் நாள் எப்போதும் போன்று உணவை உட்கொள்ளலாம். ஆனால் சீஸ் இருக்கும் உணவுகள், இறைச்சிகள், சிக்கன், மீன் போன்றவற்றை உடனே சேர்க்காமல், சில நாட்கள் கழித்து சேர்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக நான்காம் நாளில் இருந்து சில நாட்கள் சைவ உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ளுங்கள். இதனால் இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

எத்தனை முறை பின்பற்றலாம்? இந்த டயட் மெனுவைப் படித்த பின், பலருக்கும் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை பின்பற்றலாம்? என்ற கேள்வி எழும். இந்த மூன்று நாள் டயட்டை ஒருமுறை பின்பற்றி, மறுமுறை பின்பற்ற ஒரு வார இடைவெளி வேண்டும்.

தண்ணீர் அவசியம்
என்ன தான் டயட் பின்பற்றினாலும், குடிக்கும் தண்ணீரின் அளவை மட்டும் குறைக்கக்கூடாது. ஏனெனில் தண்ணீர் தான் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை வெளியேற்ற பெரிதும் உதவியாக இருக்கும்.

Related posts

வயிற்று வலியை குணப்படுத்த இத செய்யுங்கள்!…

sangika sangika

யன்னல்கள் மூடப்பட்ட அறையில் தூங்குவதால் ஏற்படும் பாதிப்புக்கள்!…

sangika sangika

கர்ப்பிணிகள் எதிரில் பேச கூடாத வார்த்தைகள்

admin

Leave a Comment